கள்ளங் கபடமற்றவர்கள். எதைபிறரிடம் கூறலாம், எதை பிறரிடம் கூறக் கூடாது என்பதை அறிய மாட்டார்கள். பிறரிடம் அன்பாக பழகுவார்கள். திடீரென்று கோபம் வரும். அதே போல் விரைவிலேயே மறைந்தும் விடும்.
எந்தக்காரியத்தையும் குறிப்பிட்ட நேரத்தில் முடித்து விடவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் மாறி,மாறி வரும். ஓரளவுதான் கல்வி கற்கமுடியும். இவர்கள் சற்று கடுமையாக உழைத்துத்தான் சம்பாதிக்க வேண்டி வரும். இருந்தாலும் மனதை தளர விட மாட்டார்கள். இரக்க மனம் படைத்தவர்கள். இந்த எண்ணின் ஆதிக்கக் கோள் இராகு ஆகும். இவர்களில் பெரும் பாலோர் நடுத்தர உயரமுடையவர்களாகவே இருப்பார்கள். இரட்டை நாடி உடையவர்கள் ஆகவும், கண்கள் சிறியதாகவும் காணப் படுவார்கள். பெரிய தலையும், அடர்த்தியான தலை முடியும் கொண்டவர்களாக இருப்பார்கள். மிகவும் பரந்த மனப்பான்மை கொண்டவர்கள். அதே சமயம் மிகவும் உணர்ச்சி வசப் படக் கூடியவர்கள். மிகவும் சிரமத்துடனேயே இவர்கள் பொருள் ஈட்ட வேண்டியது இருக்கும். ஆனால் கிடைத்த பணத்தை மிகவும் மகிழ்ச்சியுடன் செலவுசெய்வார்கள். நல்ல பேச்சாளர்கள். எழுத்தாலும், பேச்சாலும் சமூகத்தை சீர் திருத்த பார்ப்பார்கள். பெயர் மாற்றம் பற்றிய விபரங்களுக்கு...
No comments:
Post a Comment