இந்த எண்ணின் ஆதிக்கக் கோள் அறிவன்(புதன்). இவர்களில் பெரும் பாலோர்உயரமாக இருப்பார்கள். வசீகரமான முகமும், எவரையும் ஈர்க்கும் காந்தக்கண்களும் கொண்டவர்கள்.
எதையும் மனதில் வைத்துக் கொள்ளத் தெரியாதவர்கள். மனதில் தோன்றுவதை உடனே வெளியே பேசும் தன்மை கொண்டவர்கள். வேகமாக சிந்திக்கும் ஆற்றல் படைத்தவர்கள். அதே போன்று வேகமாக செயல் படத் துடிக்கும் எண்ணம் கொண்டவர்கள். எதிலும் வேகமே இவர்களின் லட்சியம். எவ்வளவு பெரிய காரியமானாலும் துணிந்து செயல் படுவார்கள். மற்றவர்களால் முடியாததை தன்னால் செய்ய முடியும் என்பதே இவர்களது எண்ணம். புதிது புதிதாக எதையாவது செய்து பேரும், புகழும் பெற வேண்டும் என்பதே இவர்கள் லட்சியம். முடிந்தவரையில்அடுத்தவர்களின் உதவியை பெற மாட்டார்கள். தானாகவே எதையும் செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். இவர்களால் அதிக அளவில் சம்பாதிக்க முடியும். அதே சமயம் செலவு செய்வதிலும் சலித்தவர்கள் அல்லர். சேமிப்பு பற்றி கவலை படாதவர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்ய சிறிதும் தயங்க மாட்டார்கள்.
பெயர் மாற்றம் பற்றிய விபரங்களுக்கு...
No comments:
Post a Comment