30 August 2014

விதிஎண் 29-ல் பிறந்தவர்களே!!!


இவர்களின் மன வேகத்துக்கு இவர்களின் உடல் ஒத்துழைக்காது. எந்த காரியத்தையும் ஒரு முறைக்கு பலமுறை யோசனை செய்து அதன் பின் மெதுவாகவே செய்யும் குணமுடையவர்கள்.
எல்லா வகையான சாமர்த்தியங்கள் இருந்தாலும் உழைப்பில் மனம் ஈடுபடாது. சோம்பல் இருந்து கொண்டே இருக்கும். சிறிய துன்பங்களைக் கூட இவர்கள் கற்பனையில் பெரிதாக்கி அதனால் தேவையில்லாத கவலைக்குள்ளாவார்கள். வீணாகக் கவலைப் பட்டு வாழ்க்கையை பிரச்சினை ஆக்கி விடுவார்கள். என்னதான் தைரியமாக இருந்தாலும், பேசினாலும் மனதில் பயம் கொண்டிருக்கும் இவர்களின் புத்தி ஒரு நிலை உடையதாக இருக்காது. சதா மாறிய வண்ணம் இருக்கும். பலருக்கும் பல விதமான யோசனைகளை அளிப்பதில் வல்லவர்களான இவர்கள், தானே ஒரு காரியத்தை செய்ய நேர்ந்தால் பல முறை யோசனை செய்து மனதைக் குழப்பிக் கொள்வார்கள். இவர்களில் அநேகம் பேர் ஒருவரின் கீழ் வேலை செய்வதையே விரும்புவார்கள். தனியாக தொழில் செய்வதில் அதிக ஈடுபாடு இருக்காது. நேர்மையும், நாணயமும் உள்ளவர்களுக்கு பலரின் உதவி கிடைக்கும்.இறை நம்பிக்கையும், நல்ல முறையில் வாழ்க்கையை அமைத்து கொண்டவர்களுக்கும் வாழ்வில் குறையேதும் இருக்காது. ஓவியம், இசை, சிற்பம் போன்றவைகளிலும் மற்றும் வழக்கறிஞர் வேலையிலும் இவர்களுக்கு நல்ல எதிர் காலம் உண்டு. மனோ திடத்துடன் செயல் பட்டால் பால் பண்ணை, விவசாயம், அழகு சாதனப் பொருட்கள் போன்ற தொழில்களில் நன்மை உண்டு. இந்த எண்காரர்களுக்கு பெண்களால் தொல்லைகள் ஏற்படும். பலர் மனைவியை விட்டு பிரிந்து வாழ நேரிடும். மனைவியுடன் எப்போதும் கருத்து வேறுபாடு இருந்து கொண்டே இருக்கும். சந்தேக புத்தி உடையவர்கள் ஆதலால் இவர்களை விரும்புவர்கள் கூட இவருடன் சேர்ந்து இருக்க விரும்புவதில்லை. எப்போதும் குற்றம் கண்டு பிடிப்பதும், தேவையில்லாத விவாதங்களையும் குறைத்துக் கொண்டால் நன்மை பயக்கும். இவர்களுக்கு உண்மையான நண்பர்களே இல்லை எனலாம். என்னதான் உதவி செய்தாலும் மற்றவர்கள் இவர்கள் மீது வெறுப்பையே காட்டுவார்கள். ஆகவே இவர்கள் வீண் சந்தேகத்தை கை விடுதல் நல்லது
பெயர் மாற்றம் பற்றிய விபரங்களுக்கு...

No comments:

Post a Comment