நல்ல உடற் கட்டுக் கூடியவர்களாக இருப்பார்கள். ஆயுள் வரை பலசாலியாக இருப்பார்கள். இவர்கள் அதிக அளவில் பணம் சேர்க்க எண்ணுவார்கள். ஆனால் அதே நேரத்தில் தாராளமாகவும் செலவு செய்வார்கள்.
எந்த ஒரு சிக்கலான காரியத்தையும் எளிதாகத் தீர்க்கும் வழிமுறை அறிந்தவர்களாக இருப்பார்கள். தான் போட்ட திட்டத்தை நிறைவேற்றும் வரை அதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். எந்த வகையிலும் தன் கைப் பொருளைப் பிறருக்குக் கொடுக்க மனம் இல்லாதவராகவே இருப்பார்கள். இவர்கள் தங்கள் வேலையில் சோம்பலின்றி உழைத்து தக்க ஊதியமும் அடைவார்கள். இவர்களுக்கு ஏதாவது கெடுதல், இடைஞ்சல் செய்பவர்களை நேரடியாகத் தாக்க மாட்டார்கள். சமயம் கிடைக்கும் போது மட்டம் தட்டுவார்கள். இவர்களை ஏமாற்ற நினைப்பவர்கள் ஏமாற்றம் அடைவார்கள். இவர்களுக்கு அதிக நண்பர்கள் இருக்க மாட்டார்கள். நண்பர்களிடம் கூட அளவுடன் தான் பழகுவார்கள். அதிக சலுகை அளிக்க மாட்டார்கள். பொதுவாக சாந்த குணமிருக்கும். கோபம் வந்தாலும் உடனே தணிந்து விடும். இவர்களது மனம் ஒரு நிலையில் இருக்காது. ஏதாவது ஒரு திட்டம் தீட்டிக் கொண்டே இருக்கும். கேளிக்கை, விளையாட்டுக்களில் அதிக கவனம் செலுத்த மாட்டார்கள். பெயர் மாற்றம் பற்றிய விபரங்களுக்கு...
No comments:
Post a Comment