30 August 2014

விதிஎண் 30-ல் பிறந்தவர்களே!!!


சிறு வயதில் ஓடி விளையாடுவதிலும், சுகமானவாழ்க்கையிலும், முன்னேற வேண்டுமென்ற எண்ணம் இருக்கும். ஆனால் வயது ஆக ஆக வேதாந்த எண்ணங்கள் மனதில் தோன்றி அதில் ஈடுபடுவார்கள். அரசியல், சட்டம், மருத்துவத் துறை போன்றவற்றில் சிறந்து விளங்குவார்கள்.
தரகுத் தொழிலும் லாபமுடையதே. காதல் என்பதை சிந்திப்பதற்கே நேரம் இல்லாதவர்கள். ஆனாலும் இளம் வயதிலேயே இவர்களுக்கு திருமணம் நடைபெற்று விடும். பெற்றோர்கள் பார்த்து நடத்தி வைக்கும் திருமணமாகவே இருக்கும். இந்த தேதியில் பிறந்தவர்கள் துணிச்சலும், பலமும் மிக்கவர்கள். அதிக அளவுகண்டிப்புதன்மை கொண்டவர்கள். உணவு உண்பதிலும், இல்லறத்திலும் மிதமாக இருக்க வேண்டியது அவசியம். இனிமையாகவும், கவர்ச்சியாகவும் பேச பழகுதல் நன்மை பயக்கும். இந்த தேதியில் பிறந்தவர்கள் சிறு வயதில் இருந்தே துன்பத்தை அனுபவிக்க வேண்டி வரும்.மிக்க வல்லமை உடைய இவர்கள் நேர்மையுடனும்,நாணயமாகவும் நடந்து கொண்டால் உயர்ந்த நிலையை அடையலாம். இந்த தேதியில்; பிறந்தவர்களுக்குநன்மையை விட தீமையே அதிகம் ஏற்படும். நிர்வாகத் திறமையும், சாமர்த்தியமும் உடையவர்கள்.நேர்மையுடனும், நாணயமாகவும் நடந்து கொள்வது நலம். இந்த தேதியில்  பிறந்தவர்கள் தைரியசாலிகளாகவும், மனவலிமையும், மனோஆற்றல் கொண்டவர்களாகவும் விளங்குவார்கள். மித மிஞ்சிய புத்தி கூர்மை உடையவர்கள். இவர்கள் சாதாரணமானவர்கள் அல்லர். வேதாந்த எண்ணங்களில் ஈடுபாடு கொண்டவர்கள். இவர்களில் பெரும் பாலோருக்கு பித்தத் தொடர்பான நோய்கள் ஏற்படலாம். அதனால் பித்ததொடர்பான பொருட்களை தவிர்ப்பது நல்லது. பலமின்மை, சோகை, குடல், தலை, இடுப்பு போன்றவற்றில் நோய்கள் ஏற்படலாம். பெயர் மாற்றம் பற்றிய விபரங்களுக்கு...

No comments:

Post a Comment