இவர்கள் கற்பனை ஆற்றல் உள்ளவர்களாகவும், தன் செய்கை சரிதானா என்பதை கவனித்துக் கொள்ளக் கூடியவராகவும் இருப்பார்கள்.
இவர்கள் தன் வரை சுகமாக வாழ்ந்தால் போதுமென்று நினைப்பார்கள். எப்படி பட்டவர்களையும் மடக்கித் தன் சொல்படி நடக்க வைக்கும் திறமை சாலிகளாக இருப்பார்கள். பிறர் தன்னைப் புகழ வேண்டும் என்பதற்காக வீணே பணத்தை செலவு செய்வார்கள். இவர்கள் வாழ்க்கையே தனிப் பட்டதாக இருக்கும். இந்த 9 எண்ணுக்குரிய கோள் செவ்வாய். பொதுவாக இவர்கள் சுறுசுறுப்பானவர்கள். சுதந்திரமாக செயல் படுவதில் விருப்பம் உள்ளவர்கள். முன்கோபியான இவர்கள் எவரையும் தூக்கியெறிந்து பேசும் குணம் உள்ளவர்கள். மனதில் உள்ளதை பட்டென வெளிப்படையாக சொல்லி விடுவர். இவர்களில் பெரும்பாலோருக்கு ஆராய்ச்சி மனப்பான்மை இருக்கும். எந்த ஒருவேலையை செய்தாலும் .அதை சரிவர செய்வார்கள் செவ்வாய் பலமாக இருந்தால் இவர்கள் பொறியியல் துறையிலும் அறுவை சிகிச்சை நிபுணர்களாகவும் இருப்பர். உங்களுக்குரிய கடவுள் வடபழனி முருகன்.. இந்த எண் உடையவர்கள் மிகுந்த மனோ பலம் உடையவர்கள். தமக்கென்று ஒரு கூட்டத்தை ஏற்படுத்திக் கொள்வார்கள் எந்த விதமான எதிர்ப்பு வந்தாலும் சமாளிக்கும் திறன் உடையவர்கள். பெண்களால் இவர்களுக்கு கெட்ட பெயர் ஏற்பட வாய்ப்புண்டு. பெயர் மாற்றம் பற்றிய விபரங்களுக்கு...
No comments:
Post a Comment