சிறந்த அறிவாளியாகவும். புகழ்பெற்றவராகவும். ஆராய்ச்சி மனோபாவம் உடையவராகவும். தனது உள்ளக் கருத்துக்களை தெள்ளத் தெளிவாக விளக்கும் திறன் பெற்றவர்களாகவும். பெரும் செல்வம் சேர்த்து மற்றவர்களுக்கும் உதவி புரியக்கூடியவர்களாகவும். உண்மை. ஒழுக்கம். தன்னம்பிக்கை. ஆகிய மூன்றால் முன்னேற்றம் அடைபவராகவும் இருப்பார்கள்
, மேன்மையான சுபாவங்களையும். சக்திகளையும யோக்கியதையை மேம்படுத்தக்கூடியது. சில சிரமங்களுக்குப் பிறகு வெற்றிகளை வழங்கும் ஆனால் பெயர் எண் சரியாக அமையாத நபர்கள், நேர்மாறான பலன்களை அடைவர்., குடும்ப வாழ்வில் குறைபாடுகளும் உண்டாகக் கூடும், மது. மங்கை போன்ற வஸ்துக்களை நாடுவதால் ஏற்படும் தீமைகளையும். பயத்தையும் இவ்வெண் உணர்த்துகிறது. பெயர் மாற்றம் பற்றிய விபரங்களுக்கு...31 August 2014
30 August 2014
விதிஎண் 33-ல் பிறந்தவர்களே!!!
வீடு. நீலம். அசையாத சொத்துக்கள். ஜன வசீகரம். போலீஸ். ராணுவம். கலைத்துறை. இசை. ஜோதிடம் ஆகியவற்றில் சிறந்து விளங்குவதையும். அருளும். பொருளும். பராசக்தியின் கடாட்சமும். தனதான்ய விருத்தியும். தான்யக்குவியல். தடாகம். ஐஸ்வர்யம்
ஆகியவற்றையும் இந்த எண் குறிப்பதால் விதி எண்ணாக இந்த எண் வரும்போது மிகுந்த மேன்மைகள் மேலோங்குகின்றன, சுகபோக வாழ்க்கை. தூரதேசப் பிரயாணங்களுடன் உண்டாகின்றன, மசிவாக்னிம முக்கோணத்தை இவ்வெண் குறிக்கிறது, அற்புதம் வாய்ந்த இந்த எண் விதி எண்ணாக அமைந்தால் சகல சௌபாக்ய மேன்மைகளும் உண்டாகினபடியே இருக்கும், பிறப்பு எண் 3. 12. 21. 30 வருபவர்களுக்கு இந்த எண் நன்மை தராது. பெயர் மாற்றம் பற்றிய விபரங்களுக்கு...விதிஎண் 32-ல் பிறந்தவர்களே!!!
அடுத்தவர் ஆலோசனையைக் கேட்காமல் தனது மனதில் உதிக்கிறபடி நடந்து வந்தால் வெற்றிமேல் வெற்றி உண்டாகியபடியே இருக்கும்,
ஏற்ற இறக்கங்கள் மாறி மாறி வரும், மங்காத புகழும். குன்றாத செல்வமும். மின்னல் போன்ற பளிச்சிடும் அறிவுக்கூர்மையும். சிரிப்பு மாறாத முகமும். வசீகரமான தோற்றமும். பொதுஜன ஆதரவும். சுலபத்தில் பிரமுகராவதும். அறவின் பீடமாகவும். சமயோசித புத்தியும். வேடிக்கையாக. நகைச்சுவையாய் பேசுந்திறமும். சினிமா. இசை. அரசியல். வியாபாரம் போன்ற அனைத்து துறைகளிலும் விரைவான முன்னேற்றமும் தரக்கூடியது, அந்தஸ்தில் மேம்பட்ட மனிதர்களும். உயர்ந்த சக்திகளின் ஆதரவும் நாடி வரும், தொழில் உத்தியோகம். நீண்ட ஆயுள் தரும், கூட்டுத் தொழில் வாகன சுகம் உண்டு, பெயர் மாற்றம் பற்றிய விபரங்களுக்கு...விதிஎண் 31-ல் பிறந்தவர்களே!!!
கள்ளங் கபடமற்றவர்கள். எதைபிறரிடம் கூறலாம், எதை பிறரிடம் கூறக் கூடாது என்பதை அறிய மாட்டார்கள். பிறரிடம் அன்பாக பழகுவார்கள். திடீரென்று கோபம் வரும். அதே போல் விரைவிலேயே மறைந்தும் விடும்.
எந்தக்காரியத்தையும் குறிப்பிட்ட நேரத்தில் முடித்து விடவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் மாறி,மாறி வரும். ஓரளவுதான் கல்வி கற்கமுடியும். இவர்கள் சற்று கடுமையாக உழைத்துத்தான் சம்பாதிக்க வேண்டி வரும். இருந்தாலும் மனதை தளர விட மாட்டார்கள். இரக்க மனம் படைத்தவர்கள். இந்த எண்ணின் ஆதிக்கக் கோள் இராகு ஆகும். இவர்களில் பெரும் பாலோர் நடுத்தர உயரமுடையவர்களாகவே இருப்பார்கள். இரட்டை நாடி உடையவர்கள் ஆகவும், கண்கள் சிறியதாகவும் காணப் படுவார்கள். பெரிய தலையும், அடர்த்தியான தலை முடியும் கொண்டவர்களாக இருப்பார்கள். மிகவும் பரந்த மனப்பான்மை கொண்டவர்கள். அதே சமயம் மிகவும் உணர்ச்சி வசப் படக் கூடியவர்கள். மிகவும் சிரமத்துடனேயே இவர்கள் பொருள் ஈட்ட வேண்டியது இருக்கும். ஆனால் கிடைத்த பணத்தை மிகவும் மகிழ்ச்சியுடன் செலவுசெய்வார்கள். நல்ல பேச்சாளர்கள். எழுத்தாலும், பேச்சாலும் சமூகத்தை சீர் திருத்த பார்ப்பார்கள். பெயர் மாற்றம் பற்றிய விபரங்களுக்கு...விதிஎண் 30-ல் பிறந்தவர்களே!!!
சிறு வயதில் ஓடி விளையாடுவதிலும், சுகமானவாழ்க்கையிலும், முன்னேற வேண்டுமென்ற எண்ணம் இருக்கும். ஆனால் வயது ஆக ஆக வேதாந்த எண்ணங்கள் மனதில் தோன்றி அதில் ஈடுபடுவார்கள். அரசியல், சட்டம், மருத்துவத் துறை போன்றவற்றில் சிறந்து விளங்குவார்கள்.
தரகுத் தொழிலும் லாபமுடையதே. காதல் என்பதை சிந்திப்பதற்கே நேரம் இல்லாதவர்கள். ஆனாலும் இளம் வயதிலேயே இவர்களுக்கு திருமணம் நடைபெற்று விடும். பெற்றோர்கள் பார்த்து நடத்தி வைக்கும் திருமணமாகவே இருக்கும். இந்த தேதியில் பிறந்தவர்கள் துணிச்சலும், பலமும் மிக்கவர்கள். அதிக அளவுகண்டிப்புதன்மை கொண்டவர்கள். உணவு உண்பதிலும், இல்லறத்திலும் மிதமாக இருக்க வேண்டியது அவசியம். இனிமையாகவும், கவர்ச்சியாகவும் பேச பழகுதல் நன்மை பயக்கும். இந்த தேதியில் பிறந்தவர்கள் சிறு வயதில் இருந்தே துன்பத்தை அனுபவிக்க வேண்டி வரும்.மிக்க வல்லமை உடைய இவர்கள் நேர்மையுடனும்,நாணயமாகவும் நடந்து கொண்டால் உயர்ந்த நிலையை அடையலாம். இந்த தேதியில்; பிறந்தவர்களுக்குநன்மையை விட தீமையே அதிகம் ஏற்படும். நிர்வாகத் திறமையும், சாமர்த்தியமும் உடையவர்கள்.நேர்மையுடனும், நாணயமாகவும் நடந்து கொள்வது நலம். இந்த தேதியில் பிறந்தவர்கள் தைரியசாலிகளாகவும், மனவலிமையும், மனோஆற்றல் கொண்டவர்களாகவும் விளங்குவார்கள். மித மிஞ்சிய புத்தி கூர்மை உடையவர்கள். இவர்கள் சாதாரணமானவர்கள் அல்லர். வேதாந்த எண்ணங்களில் ஈடுபாடு கொண்டவர்கள். இவர்களில் பெரும் பாலோருக்கு பித்தத் தொடர்பான நோய்கள் ஏற்படலாம். அதனால் பித்ததொடர்பான பொருட்களை தவிர்ப்பது நல்லது. பலமின்மை, சோகை, குடல், தலை, இடுப்பு போன்றவற்றில் நோய்கள் ஏற்படலாம். பெயர் மாற்றம் பற்றிய விபரங்களுக்கு...விதிஎண் 29-ல் பிறந்தவர்களே!!!
இவர்களின் மன வேகத்துக்கு இவர்களின் உடல் ஒத்துழைக்காது. எந்த காரியத்தையும் ஒரு முறைக்கு பலமுறை யோசனை செய்து அதன் பின் மெதுவாகவே செய்யும் குணமுடையவர்கள்.
எல்லா வகையான சாமர்த்தியங்கள் இருந்தாலும் உழைப்பில் மனம் ஈடுபடாது. சோம்பல் இருந்து கொண்டே இருக்கும். சிறிய துன்பங்களைக் கூட இவர்கள் கற்பனையில் பெரிதாக்கி அதனால் தேவையில்லாத கவலைக்குள்ளாவார்கள். வீணாகக் கவலைப் பட்டு வாழ்க்கையை பிரச்சினை ஆக்கி விடுவார்கள். என்னதான் தைரியமாக இருந்தாலும், பேசினாலும் மனதில் பயம் கொண்டிருக்கும் இவர்களின் புத்தி ஒரு நிலை உடையதாக இருக்காது. சதா மாறிய வண்ணம் இருக்கும். பலருக்கும் பல விதமான யோசனைகளை அளிப்பதில் வல்லவர்களான இவர்கள், தானே ஒரு காரியத்தை செய்ய நேர்ந்தால் பல முறை யோசனை செய்து மனதைக் குழப்பிக் கொள்வார்கள். இவர்களில் அநேகம் பேர் ஒருவரின் கீழ் வேலை செய்வதையே விரும்புவார்கள். தனியாக தொழில் செய்வதில் அதிக ஈடுபாடு இருக்காது. நேர்மையும், நாணயமும் உள்ளவர்களுக்கு பலரின் உதவி கிடைக்கும்.இறை நம்பிக்கையும், நல்ல முறையில் வாழ்க்கையை அமைத்து கொண்டவர்களுக்கும் வாழ்வில் குறையேதும் இருக்காது. ஓவியம், இசை, சிற்பம் போன்றவைகளிலும் மற்றும் வழக்கறிஞர் வேலையிலும் இவர்களுக்கு நல்ல எதிர் காலம் உண்டு. மனோ திடத்துடன் செயல் பட்டால் பால் பண்ணை, விவசாயம், அழகு சாதனப் பொருட்கள் போன்ற தொழில்களில் நன்மை உண்டு. இந்த எண்காரர்களுக்கு பெண்களால் தொல்லைகள் ஏற்படும். பலர் மனைவியை விட்டு பிரிந்து வாழ நேரிடும். மனைவியுடன் எப்போதும் கருத்து வேறுபாடு இருந்து கொண்டே இருக்கும். சந்தேக புத்தி உடையவர்கள் ஆதலால் இவர்களை விரும்புவர்கள் கூட இவருடன் சேர்ந்து இருக்க விரும்புவதில்லை. எப்போதும் குற்றம் கண்டு பிடிப்பதும், தேவையில்லாத விவாதங்களையும் குறைத்துக் கொண்டால் நன்மை பயக்கும். இவர்களுக்கு உண்மையான நண்பர்களே இல்லை எனலாம். என்னதான் உதவி செய்தாலும் மற்றவர்கள் இவர்கள் மீது வெறுப்பையே காட்டுவார்கள். ஆகவே இவர்கள் வீண் சந்தேகத்தை கை விடுதல் நல்லதுபெயர் மாற்றம் பற்றிய விபரங்களுக்கு...
விதிஎண் 28-ல் பிறந்தவர்களே!!!
நல்ல உடற் கட்டுக் கூடியவர்களாக இருப்பார்கள். ஆயுள் வரை பலசாலியாக இருப்பார்கள். இவர்கள் அதிக அளவில் பணம் சேர்க்க எண்ணுவார்கள். ஆனால் அதே நேரத்தில் தாராளமாகவும் செலவு செய்வார்கள்.
எந்த ஒரு சிக்கலான காரியத்தையும் எளிதாகத் தீர்க்கும் வழிமுறை அறிந்தவர்களாக இருப்பார்கள். தான் போட்ட திட்டத்தை நிறைவேற்றும் வரை அதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். எந்த வகையிலும் தன் கைப் பொருளைப் பிறருக்குக் கொடுக்க மனம் இல்லாதவராகவே இருப்பார்கள். இவர்கள் தங்கள் வேலையில் சோம்பலின்றி உழைத்து தக்க ஊதியமும் அடைவார்கள். இவர்களுக்கு ஏதாவது கெடுதல், இடைஞ்சல் செய்பவர்களை நேரடியாகத் தாக்க மாட்டார்கள். சமயம் கிடைக்கும் போது மட்டம் தட்டுவார்கள். இவர்களை ஏமாற்ற நினைப்பவர்கள் ஏமாற்றம் அடைவார்கள். இவர்களுக்கு அதிக நண்பர்கள் இருக்க மாட்டார்கள். நண்பர்களிடம் கூட அளவுடன் தான் பழகுவார்கள். அதிக சலுகை அளிக்க மாட்டார்கள். பொதுவாக சாந்த குணமிருக்கும். கோபம் வந்தாலும் உடனே தணிந்து விடும். இவர்களது மனம் ஒரு நிலையில் இருக்காது. ஏதாவது ஒரு திட்டம் தீட்டிக் கொண்டே இருக்கும். கேளிக்கை, விளையாட்டுக்களில் அதிக கவனம் செலுத்த மாட்டார்கள். பெயர் மாற்றம் பற்றிய விபரங்களுக்கு...22 August 2014
விதிஎண் 27-ல் பிறந்தவர்களே!!!
இவர்கள் கற்பனை ஆற்றல் உள்ளவர்களாகவும், தன் செய்கை சரிதானா என்பதை கவனித்துக் கொள்ளக் கூடியவராகவும் இருப்பார்கள்.
இவர்கள் தன் வரை சுகமாக வாழ்ந்தால் போதுமென்று நினைப்பார்கள். எப்படி பட்டவர்களையும் மடக்கித் தன் சொல்படி நடக்க வைக்கும் திறமை சாலிகளாக இருப்பார்கள். பிறர் தன்னைப் புகழ வேண்டும் என்பதற்காக வீணே பணத்தை செலவு செய்வார்கள். இவர்கள் வாழ்க்கையே தனிப் பட்டதாக இருக்கும். இந்த 9 எண்ணுக்குரிய கோள் செவ்வாய். பொதுவாக இவர்கள் சுறுசுறுப்பானவர்கள். சுதந்திரமாக செயல் படுவதில் விருப்பம் உள்ளவர்கள். முன்கோபியான இவர்கள் எவரையும் தூக்கியெறிந்து பேசும் குணம் உள்ளவர்கள். மனதில் உள்ளதை பட்டென வெளிப்படையாக சொல்லி விடுவர். இவர்களில் பெரும்பாலோருக்கு ஆராய்ச்சி மனப்பான்மை இருக்கும். எந்த ஒருவேலையை செய்தாலும் .அதை சரிவர செய்வார்கள் செவ்வாய் பலமாக இருந்தால் இவர்கள் பொறியியல் துறையிலும் அறுவை சிகிச்சை நிபுணர்களாகவும் இருப்பர். உங்களுக்குரிய கடவுள் வடபழனி முருகன்.. இந்த எண் உடையவர்கள் மிகுந்த மனோ பலம் உடையவர்கள். தமக்கென்று ஒரு கூட்டத்தை ஏற்படுத்திக் கொள்வார்கள் எந்த விதமான எதிர்ப்பு வந்தாலும் சமாளிக்கும் திறன் உடையவர்கள். பெண்களால் இவர்களுக்கு கெட்ட பெயர் ஏற்பட வாய்ப்புண்டு. பெயர் மாற்றம் பற்றிய விபரங்களுக்கு...விதிஎண் 26-ல் பிறந்தவர்களே!!!
இவர்கள் தனிமையையே விரும்புவர். எதிலும் நிதானமாகவே இருப்பர்.ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு இருக்காது. அப்படியே ஈடுபட்டாலும் அதில் ஒரு வெறித்தனம் இருக்கும்.
இவர்கள் இரும்பு நிலக்கரி கட்டிட ஒப்பந்தம் போன்ற தொழில்களில் ஈடுபட்டால் இலாபமடைவர். ஆராய்ச்சி துறை ஏற்றது. பெரும் நீதிமான்கள் இந்த எண்ணில் காணமுடிகிறது. வாழ்க்கையின் முற்பகுதியில் பிரச்சினைகள் அதிகமிருக்கும் ஆனால் பிற்பகுதியில் பிரச்சினைகள் தீர்ந்து சாந்தமான வாழ்க்கை அமையும். நீலக்கல் நன்மை தரும் தெற்கு தென்கிழக்கு திசைகள் நன்மை தரும். உங்களுக்குரிய கடவுள் திருவண்ணாமலை ஈசன்.
பெயர் மாற்றம் பற்றிய விபரங்களுக்கு...
இவர்கள் இரும்பு நிலக்கரி கட்டிட ஒப்பந்தம் போன்ற தொழில்களில் ஈடுபட்டால் இலாபமடைவர். ஆராய்ச்சி துறை ஏற்றது. பெரும் நீதிமான்கள் இந்த எண்ணில் காணமுடிகிறது. வாழ்க்கையின் முற்பகுதியில் பிரச்சினைகள் அதிகமிருக்கும் ஆனால் பிற்பகுதியில் பிரச்சினைகள் தீர்ந்து சாந்தமான வாழ்க்கை அமையும். நீலக்கல் நன்மை தரும் தெற்கு தென்கிழக்கு திசைகள் நன்மை தரும். உங்களுக்குரிய கடவுள் திருவண்ணாமலை ஈசன்.
பெயர் மாற்றம் பற்றிய விபரங்களுக்கு...
விதிஎண் 25-ல் பிறந்தவர்களே!!!
இந்த விதி எண்ணில் பிறந்தவர்கள் குழந்தை மனம் கொண்டவர்கள். கலையிலும், காதலிலும் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். அமைதியும், சாந்தமும் உடையவர்கள்.
புத்திக் கூர்மையும், அதிக அளவு ரசிப்புத் தன்மையும் கொண்டவர்கள். தெய்வீக வழி பாட்டில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள்.இவர்களின் குடும்ப வாழ்க்கை சிரமமானதாக இருக்கும். இந்த ந்தேதி பிறந்தவர்கள் சிறு வயதிலேயே புகழ் பெற்ற நடிகர்களாகவும், கவிஞர்களாகவும், கலைஞர்களாகவும் இருக்க வாய்ப்புண்டு. தவறான காதல் விவகாரங்களில் ஈடு படாமல் இருந்தால் வாழ்க்கை சிறப்படையும். இந்த தேதியில் பிறந்தவர்கள் வணக்கத்திற்குரிய மனிதர்களாக விளங்குகின்றனர். நீதிபதிகள், மதத் தலைவர்கள், ஆணையர்கள் இந்த எண்ணில் அதிகம் காணலாம். இந்த எண்காரர்களுக்கு வெளிர் சிவப்பும், வெளிர் நீலமும் நன்மை தரும். வைடூரியம் உகந்த கல்லாகும். பெயர் மாற்றம் பற்றிய விபரங்களுக்கு...
விதிஎண் 24-ல் பிறந்தவர்களே!!!
இந்த தேதியில் பிறந்தவர்கள் யாவரையும் எளிதாகக் கவரக் கூடிய அழகான தோற்றம் கொண்டவர்கள். எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் மனம் உடையவர்கள்
. பிறரை பார்த்த மாத்திரத்தில் சரியாக எடை போடக் கூடியவர்கள். நகைச்சுவையுடன் பேசும் ஆற்றல் உள்ளவர்கள். கலைகளிலும் சிறந்து விளங்குவார்கள். இந்த தேதி பிறந்தவர்கள் இடத்துக்கு ஏற்றவாறு பேசுவதில் வல்லவர்கள். அடக்கமான குணங்களைக் கொண்டவர்கள். காரியத்தை சாதித்துக் கொள்ளுவதில் வல்லவர்கள். இவர்களுக்கு பதவிகளும், பெரிய இடத்து சம்பந்தமும் தேடி வரும். மற்றவர்களை விட இவர்களுக்கு துணிச்சல் அதிக அளவில் இருக்கும். பொதுவாக 6ம் எண்ணில் பிறந்தவர்களுக்கு வெள்ளை நிறம் உகந்தது. கற்களில் வைரம் சிறந்தது. தென்மேற்கு திசை நன்மை தரும். இவர்கள் பொருளீட்ட அதிக அளவில் சிரமம் எடுக்க வேண்டியது இல்லை. சிறிது முயற்சி செய்தே நல்ல வருமானத்தை அடைவார்கள். அழகு சாதனங்கள், வாசனைப் பொருட்கள், ஆடை, ஆபரணங்கள் போன்ற வற்றிற்காக அதிக அளவில் பணம் செலவழிப்பார்கள்பெயர் மாற்றம் பற்றிய விபரங்களுக்கு...
விதிஎண் 23-ல் பிறந்தவர்களே!!!
இந்த எண்ணின் ஆதிக்கக் கோள் அறிவன்(புதன்). இவர்களில் பெரும் பாலோர்உயரமாக இருப்பார்கள். வசீகரமான முகமும், எவரையும் ஈர்க்கும் காந்தக்கண்களும் கொண்டவர்கள்.
எதையும் மனதில் வைத்துக் கொள்ளத் தெரியாதவர்கள். மனதில் தோன்றுவதை உடனே வெளியே பேசும் தன்மை கொண்டவர்கள். வேகமாக சிந்திக்கும் ஆற்றல் படைத்தவர்கள். அதே போன்று வேகமாக செயல் படத் துடிக்கும் எண்ணம் கொண்டவர்கள். எதிலும் வேகமே இவர்களின் லட்சியம். எவ்வளவு பெரிய காரியமானாலும் துணிந்து செயல் படுவார்கள். மற்றவர்களால் முடியாததை தன்னால் செய்ய முடியும் என்பதே இவர்களது எண்ணம். புதிது புதிதாக எதையாவது செய்து பேரும், புகழும் பெற வேண்டும் என்பதே இவர்கள் லட்சியம். முடிந்தவரையில்அடுத்தவர்களின் உதவியை பெற மாட்டார்கள். தானாகவே எதையும் செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். இவர்களால் அதிக அளவில் சம்பாதிக்க முடியும். அதே சமயம் செலவு செய்வதிலும் சலித்தவர்கள் அல்லர். சேமிப்பு பற்றி கவலை படாதவர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்ய சிறிதும் தயங்க மாட்டார்கள்.
பெயர் மாற்றம் பற்றிய விபரங்களுக்கு...
Subscribe to:
Posts (Atom)