25 October 2016

கோவில்வாசல் தாண்டலாமா?

கோவிலின் உள்ளே நுளையும்போது தலைவாசலின் மீது ஏறி உள்ளே போகலாமா கூடாதா?


நல்ல கேள்வி தான்...
எனக்கு தெரியலை பதிலை நீங்களே முடிவு செய்யுங்க.. 

சரி, இப்ப சொல்லுங்க....
படி இரண்டு அடி அகலம் ஒரு அடி உயரம்னு பெருசா இருந்தால்....
சின்ன பையன் இரண்டு அடி அகலம் ஒரு அடி உயரம் உள்ள கோவில் படி எப்படி தாண்டுவது....
ஏறி போவதா தாவிப்போவதா...

சரி சிறுவன் தாவித்தான் போகட்டுமே...
கிழவன் நடக்கவே ஆகாத நிலை... 
அவர் எப்படி படியினை கடப்பார்...
சூழல் இன்னும் கடினம்...

கர்பஸ்திரி வழிபட வந்துள்ளார்.
வாசலின் உள்ளே மழைகாரணமாக நீர் தேங்கியுள்ளது....
அதுவும் தீபம் ஏற்றிய எண்ணை பிசுப்பு வேறு உள்ளது...
இரண்டு அடி அகலம் 
உயரம் ஒரு அடி 
படியினை எப்படி கடப்பது...

சற்று நிதானமாக யோசித்தால்...
கோவிலில் நாம் பாவம் செய்யும் அளவிற்க்கு எந்த விசயத்தினையும் நமது முன்னோர்கள் செய்யமாட்டார்கள்... என்பதனை நம்புகிறேன். படிகளில் நிறைந்துள்ள அபரிமிதமான சக்தியோட்டத்தினை நாம் பெற வேண்டும் என்பதாலேயே...

பெரிய கோவில்களில் பெரிய படிகளை அமைத்து 
அதனை தாண்டுவதை கடினமானதாக்கி...
நோயாளிகளும்...
வயதானவர்களும்...
சிறு குழந்தைகளும்...
கர்பிணிகளும்...
படியினை தாண்டும் போது படியினில் ஏறி அந்த சக்தியினை பரிபூரணமாக பெறும்படி... கோவிலின் உள்ளே போகும் முன்னரேயே நம்மை புணிதமடைய செய்யும் அற்புத செயலே படியினை தாண்டும் போது நடக்கிறது.

எமது கருத்து என்னவெனில்...
சக்தியுள்ளவர்கள் படியினை 
தா......ண்டி செல்லுங்கள்.
படியின் மீது ஏறிச்செல்பவர்களை 
பாவம் எனக் கூறி மிரட்டாதீர். 
அது கோவிலின் கட்டிட விதிகளுக்கு எதிரானதாகும்...
இப்போது கூறுங்களேன்
படியினில் கால் வைத்தல் புண்ணியம் அல்லவா...
படியினில் கால் வைத்து போக கூடாது எனும் நம்பிக்கை மூட நம்பிக்கை தானே...
இந்த கருத்து எனக்கு சரி...
யாராவது மாற்றுகருத்து கூறினால் அவருக்கு அது சரி...
இருப்பினும் எனக்கு இது சரி...

சட்டம் அனைவருக்கும் சமமாகவே இருக்க வேண்டும்.
இருக்கும்.
அதனால் தான் சொல்கிறேன் இது சரியானது...

No comments:

Post a Comment