25 October 2016

ராசி கட்டத்தில் பூமி எங்கே உள்ளது?

உண்மையில் பூமிகிரகம் இராசிநிலையில் எங்கு உள்ளது?
நமது ஜாதக கட்டம் உருவாக்கப்படும் முறையினை சற்று உன்னிப்பாக கவனித்தால் ராசி நிலை கட்டத்தின் நடுவில் உள்ள காலி இடமே பூமியாகும். பூமியில் இருந்து அண்டவெளியினை காணும் படமே இராசி நிலையாகும்.
நடுவில் உள்ள இடத்தினை பூமியாக வைத்து லக்கினத்தினை அந்த நொடியில் நமது கிழக்காக வைத்து பார்க்க எல்லாம் சரியாக வரும்.
இதற்க்கு மேலும் கூட பல உண்மைகளை உணர வேண்டியுள்ளது. அனைத்து கிரகங்களும் பூமிக்கு ஏழில் தான் இருக்கும். ஏனேனில் பூமியினை நடுவில் வைத்தே அனைத்து கணிதமும்.



சூரியனுக்கு ஏழில்பூமியுள்ளது எனும் கருத்துள்ளதே?
அப்படியா, அது எவ்வளவு சாத்தியம் என்பதனை பார்ப்போம்.
தாங்கள் இன்னும் ஒர் புரிதலை அதிகப்படுத்துங்கள்...
சூரியனுக்கு 180 வது பாகையில்
வேறு கிரகம் வரும்போது பூமி எங்கே இருக்கும்....
அந்த இரண்டுக்கும் மத்தியில் தானே இருக்கும்.
ஏழில் என்பது மட்டும் சரி. ஆனால், அந்த நாளில் சூரியனும் சந்திரனும் பூமிக்கு எதிர் எதிர் பக்க ஏழில் தான் இருக்கும்.
அனைத்து கிரகங்களும் எப்போதுமே பூமிக்கு ஏழில் தான் இருக்கும். சூரியனுக்கு ஏழில் ஓர்கிரகம் வரும்போது பூமி அந்த கிரகத்துடன் சேர்வதில்லை. சூரியனுக்கு எதிர் பக்க ஏழில் அந்த கிரகம் இருக்கும். இது அனைத்து கிரகங்களுக்கும் பொதுவானதாகும்.
அதாவது.... சூரியனுக்கும் அந்த கிரகத்திற்க்கும் இடையே தான் பூமி நிற்க்கும். இதனை கண்களால் கூட பார்க்கலாமே... சூரியனுக்கு ஆறு ஏழு எட்டு இவற்றில் உள்ள கிரகங்கள் இரவு நேரத்தில் நமது வானில் தெரிவதால் அதன் முழு அளவிலான பிரதி பலிப்பினையும் காணலாம். பெரியதாகஎனில் சந்திரனை பௌர்ணமி மாலையில் பூமியின் மேற்க்கில் சூரியன் மேசம் எனில்... அதன் ஏழாமிடம் நமக்கு கிழக்கில் துலாம் சந்திரன்.
அனைத்து கிரகமும் அதனதன் நிலையில் பூமிக்கு ஏழில் தான்... எதாவது இரண்டு கிரகங்களை தொடர்பு படுத்தும் போது தான் அந்த இரண்டு கிரகங்களும் தங்களுக்கு இடையில் பூமியில் இருந்து எவ்வளவு பாகையில் இருந்து பயணிக்கிறார்கள் என்பதை கணிக்கிறோம்.
இந்த விளக்கப்படத்தினை பார்க்கவும். பூமி என்பது பிரபஞ்சத்தின் மையம் எனும் பார்வையினை கொண்டுதான் ராசி மண்டலம் கணிக்கப்பட்டு உள்ளது என விளங்கும். மேலும், அனைத்து கிரகங்களும் தனியாக சூரியனை சுற்றி வரும் போதும் கூட... பூமி சூரியனை சுற்றி வரும்போதும் கூட.... நாம் பூமியினை மையாமாக வைத்தே பஞ்சாங்க கணிதம் கணிக்கிறோம். ஆகவே சூரியனுக்கு 7ல் பூமி இருக்கிறது எனும் கருத்து தவறானது. ஏனெனில் பூமியில் இருந்தே ராசிகள் நட்சத்திர பாகைகள் நிர்ணயம் ஆகிறது.
உண்மையில் ராசிகட்டத்தில் சூரியனுக்கு 7ல் கிரகம் என்பதே, சூரியன் நமது பூமி இவற்றின் நேர்கோட்டில் 180 பாகைக்கு அருகாமையில் உள்ள கிரகம் என்பதே சரியாகும். குழப்பமான விஷயம் என்பதால் 3D 4D கும் அதிகமான பரந்த விண்வெளியினை 2Dயில் பதியும்பொது... பூமி என்பது ராசி நிலையின் நடு மையம் என்பது மறக்கடித்து விடப்பட்டது.

1 comment:

  1. வணக்கம் ஐயா
    எப்படி என்று எனக்கு புரியவில்லை ஐயா
    https://www.facebook.com/sharer.php?u=https%3A%2F%2Fwww.hindutamil.in%2Fnews%2Fspirituals%2F187019-5.html

    ReplyDelete