25 October 2016

முகூர்த்தம் வைப்பது மண்டபபமா? ஜோதிடமா?

சுபமுகூர்த்த நாள்

நல்ல நேரம் பார்ப்பது என்பது...

ல்ல பூஜைகள் செய்யுப்போது 
நாம் எப்படி நல்லபடியாக குளித்து 
தூய ஆடையுடுத்தி
முறையாக சின்னங்களை அணிந்து 
பூஜைக்கு தயாராகிறோமோ...
அதோ போல தான்.... 
சுப முகூர்த்தம் என்பதும்... நமது உடலை தயார் படுத்தியதை போல...



முகூர்த்த நிர்ணயம் என்பது 
ஒருநாளினை சுத்தப்படுத்தப்பட்ட நாளாக 
எந்த அழுக்கும் (தோசம்) இல்லாத நாளாக தேர்வு செய்வதாகும்.

குளித்து சின்னங்கள் அணிந்தாலே போதும் இறைவனின் அருளை பெற்று விடலாம் என கூறுவது பொருத்தமான வார்த்தையாகுமா? 

அதே போல தான்... 
நல்ல முகூர்த்தம் மட்டுமே நல்ல பலன்களை தந்து விடாது.

வழிபாடு மற்றும் அர்பணிப்பே நமக்கு வழிபாட்டின் வெற்றி ஆவது போல... 

சுப காரியங்களிலும் பலவிதமான விசயங்கள் தேவையாகிறது.

நல்லநாள் பார்ப்பது... 
நல்லது தான். ஆனால்

அது மட்டுமே போதும் என்றால்..
கடவுளேயில்லாமல் பூஜை நடத்தியதற்க்கு சமமானது போல.....
இப்படி தான் விளக்குவேன்...

ஒருவர் என்னிடம் அப்படி தான் கேட்டார்..
வளர்பிறைதான் வேணும்... 
பையன் பிறந்த நாள் இது வேண்டாம்... மேலும் இந்த முகூர்த்தத்தில் மண்டபம் இல்லை. இடையில் இந்த நாள் தான் உள்ளது. அதில் அஸ்டமி நவமி போக இரண்டு நாள் உள்ளது. அதில் முகூர்த்தம் வைத்து கொடுங்க ஜோசியரே...
நானெல்லாம் ஜோசியர் சொல்லை மீறி ஏதும் பண்ணமாட்டேனுங்க.....

இப்படித்தான் இப்பபோது நடக்கிறது
திருமணம் முகூர்த்தம் நிர்ணயத்தில்... 
அஷ்டமி நவமி பார்க்காமல் போனாலும் கூட....
எண்ணியல் பற்றி கண்டிப்பாக... 
பார்த்தே ஆக வேண்டியுள்ளது.

எண்கணிதம் அவ்வளவு விளைவுகளை 
உண்டாக்கி விடுகிறது.... 
சிறப்பாக....
5...14..23 ம் தேதிகளில் விதி எண்ணும் சரியில்லாது போக 
விவாகரத்து வரையில் போவதையும்.... அல்லது கர்பபை கட்டிகளையும் 
புத்திரதடையினையும் காண முடியும். 
மிகவும் துல்லியமான பலன்களாக... முகூர்த்த நிர்ணயத்தினை கணிக்கும் போது 
எண்கணிதத்தினையும் இணைப்பது முக்கியமானதாகும்
இல்லையேல் கடின சூழல் தான்....

முகூர்த்த நிர்ணயத்தில் இன்னும் பல விசயங்கள் 
சேர்க்க வேண்டிய காலகட்டத்தில் உள்ளோம்.....
அதில் முக்கியமானதாக எண்கணிதம் உள்ளது...
இது போல பிருகு நந்தி வரவால் இன்னும் பல விசயங்கள் 
முக்கியமாக கவனிக்க வேண்டியுள்ளதாக உணர்கிறேன்...


நல்லது கூறப்பட்டுள்ளது
நல்லது நடக்கட்டும்
அன்புடன்
அஸ்ட்ரோகண்ணா
7667745633

No comments:

Post a Comment