25 October 2016

நாய் கடி, பூச்சி கடி...

நாய் போன்ற மிருகம் கடிப்பது பற்றி ஓர் உரையாடல்....

இதனை நான் இப்படி பார்க்கிறேன். கிரகங்களின் அலைவரிசைகளை மாற்றி அல்லது சமன்படுத்த அதிர்ஷ்ட ரத்தினம் தருகிறோம். அது எப்படி வண்ணத்தினாலும் தனது வேதியல் பண்பினாலும் மேலும் உயிரோட்டமான குணத்தினாலும் நல்லது அல்லது தீயது செய்கிறதோ அதுபோல குறிப்பிட்ட விலங்கு அல்லது பூச்சிகள் சில பலன்களை தர வாய்ப்பு இருப்பதாகவே கருதுகிறேன்.


நமது இறைவர்களுக்கு முன்னோர்கள்... பலவித விலங்கு பூச்சிகளை வாகனமாக்கி இருக்கிறார்களே... ஜோதிடத்திற்க்கும் விலங்குக்கும் தொடர்பினை உணர்தலே நல்ல விசயம். பசு பாம்பு பன்றி மீன் ஆமை பல்லி பொன்வண்டு மனிதன் கூட வாகனமாகிறான்...

இதுவும் கவனிக்க வேண்டும்.
ஒரு விலங்கு கடிக்கும் போது அது நமது உடலில் உள்ள குறிப்பிட்ட கிரகத்தின் காரக உருப்புகளை பலமோ அல்லது பலவீனமோ படுத்த வாய்ப்பு உள்ளதா?
அனைவரும் இதனை அப்படியே ஆய்வில் வைக்க பலனுக்கு எப்படி வருகிறது என்பதை பார்க்கலாம்...

தீய விளைவு மட்டுமே வருமா அல்லது நல்ல குணங்களும் வர வாய்ப்பு உள்ளதா எனில் அது ஆய்வுக்கு உரிய விசயம்.
மிருகங்களை ஏழாமிடத்தினை வைத்து பார்க்கலாம்.
ஆறுக்கு உடையவர் ஏழாமிடத்தின் தொடர்பு விலங்குகளால் பயம் என கொள்ள முடியும்

மேலும்
காலபுருஷ ஏழாமிடத்தோன் கெட்டுவிட்டாலும் நாய்கடிக்க வாய்ப்பு உண்டாகும்...
எமது நண்பர் ஓர் உரையடாலில் கூறினார்.
இரத்ததினை சுத்தமாக வைத்தால் கொசுகூட நம்மை கடிக்காது.
இது அனைத்து விலங்குகளுக்கும் பொருந்தும் எனத்தான் தோன்றுகிறது. நமது உடலில் இருக்கும் வாசனை விலங்குகளை கவனிக்க வைக்கும் அளவுக்கு இல்லாமல்... இயற்க்கையோடு இருந்தால் விலங்கு பூச்சி கடியில் இருந்து தப்பிக்கலாம்.

உதாரணமாக.. 
தேன் எடுக்க செல்பவர்கள் அங்கேயுள்ள மரத்தில் உள்ள இலைகளை எடுத்து தங்களின் கைகால்களில் நன்கு கசக்கி சாற்றினை பூசிக்கொள்ளுவார்கள். அதனால் தேன் பூச்சிகள் அவர்களை கடிப்பது இல்லை. நான் நேரில் கண்டுள்ளேன். பக்கத்து வீட்டிலேயே தேன்காரர் இருந்தார்கள்.

பூச்சி கடி பற்றி பார்க்க...
நமது ஜாதக ஆறாமிடம் சார்ந்த கிரகத்தினை சற்று கவனித்து அதனை சற்று சுத்தமாக வைக்க நல்லதே நடக்கும். முக்கியமாக சுக்கிரன் பலவீனமான ஜாதகரையே நாய்கடிப்பதாக தெரிகிறது. இவர்கள் ஜாக்கிரதை யாக இருக்கலாம் தானே....

அஸ்ட்ரோகண்ணா
கொடுமுடி.7667745633

No comments:

Post a Comment