25 October 2016

இராகு கேதுவில் தலை யார் வால் யார்?

இராகு கேதுவில் தலை யார் வால் யார்?

பெரும்பாலான நேரத்தில் பாம்பு கிரகங்களின் 
உண்மையான தோற்றமும் அதன் மூலமாக 
நமக்கு முன்னோர்கள் தந்த விசயங்களும்
மறக்க வைக்கப்படுகிறது. தற்போது 
நமது குழுக்களில் உலாவும் ஒரு கருத்து

இராகு தலை
கேது வால்

இதனை பற்றி நாம் சிறிது யோசிக்கலாமா?

இந்த விசயத்தில் இராகு வால்
கேது தலை என்பதே சரியாக பொருந்தும் என நினைக்கிறேன்....

விழுங்குவதும்... தன்னுள் அனைத்தையும் வைத்து 
மறைப்பதும் கேதுவின் குணம் என்பதால் 
தலையாக கேதுவை வைக்க கூறுவார்கள்.
இதை தீவிர விவாதம் மூலமாக 
தெளிய வேண்டுமானால் இந்த கேள்விக்கு 
பதில் பெறுங்கள்....
இராகு என்பதும் கேது என்பதும் 
அந்த பாம்பினால் நிர்ணயம் ஆகிறதா.... அல்லது 
அந்த அசுரனின் உருவத்தினால் நிர்ணயம் ஆகிறதா....


நமது புராதன சிற்பங்கள் அனைத்தும் 
கேதுவுக்கு பாம்பு தலையும்
இராகுவுக்கு பாம்பு வாலையும் தான் தந்துள்ளார்கள்
நமது பஞ்சாங்கமுதல் 
பக்கத்தில் கூட தெளிவாக 
இராகுவின் வால் 
கேதுவின் தலையினை பாம்பாக வைத்துள்ளார்கள்.

இத்தனை இருந்தும் குழப்பமான 
வார்த்தை பிரயோகத்தினால் 
இராகுவை சிலர் 
மீண்டும் மீண்டும் தலையென்பதும்....
நூற்றுக்கணக்கானநண்பர்கள் 
அருமை அருமை என்பதும், 
சரியான முன்னுதாரணமாக படவில்லை 
என்பதால் இந்த பதிவினை முன் வைக்கிறேன். 
என்னை போன்ற கற்றுகுட்டிகள் 
அந்த பதிவை படித்து தவறான கருத்தினை 
கற்றுக்கொள்ளகூடாது அல்லவா?

அறிவிற்சிறந்த ஆன்றோர்களும் 
ஜோதிடத்தை கண்டறிந்த ரிஷிகளும் 
கூறியதை மட்டும் எடுத்து கூறினால் போதும்... 
பலனை மாற்றலாம் 
ஆளையே மாற்றுதல் முறையாகுமா?
இன்னும் சில உதாரணம்...
இராகு அலைச்சலும் விருத்தியும் தருவார்.... 
அப்படியானால், 
உடல் மற்றும் வால் பகுதியே பயணிக்க உதவும்.... 
அதனால் தான் அலைச்சல் உண்டாகிறது. 
அசுர தலை என்பதால் எல்லாம் இன்பமாக அனுபவிப்பார். 
கெட்ட அனைத்தும் இன்பங்களாக நினைக்கும் 
நிலைக்கு கூட சரியான உதாரணம் பொருந்துகிறது.


அடுத்து...
கேது எதையும் சுருக்கி இல்லாமல் செய்வார்....
தலையில் உள்ள வாயின் பணியே 
எதையும் விழுங்கி மறைப்பதும் 
இல்லாமல் செய்வதும் தானே... 
எவ்வளவு அற்புதமாக செயல்படுகிறது.

அசுரனாகிய இராகு தலையினால் 
ஞானம் கெடுவதும்....
தெய்வ பாம்பாகிய கேது தலையினால் 
ஞானம் உண்டாவதும் கூட 
நல்ல உதாரணம் அல்லவா...

இதனை உணரவும் புதியதை 
மிகசாதாரண இடத்தில் 
கற்றுக்கொள்ள இடம் தேவையில்லை 
மனம் தான் தேவை...
உண்மைகளை கற்றுக்கொள்ள
நிஜங்களை கண்டறியுங்கள்...


உங்களின் உண்மையான
கருத்துகள் எண்ணத்தை வளமாக்கும்...
எதிர்பார்க்கிறேன் இணைந்திருங்கள்...


மக்களின் சேவை பணியில்...
7667745633

No comments:

Post a Comment