25 October 2016

337

இந்த உலகத்தில் உள்ள அனைவருக்கும் இறைவன் சமமாகவே கொடுத்துள்ளான்.
இதையே அஷ்டவர்க கணிதம் நமக்கு காட்டி அருள்கிறது.
அஷ்டவர்க பரல் மொத்தம் 337 மட்டுமே.... 
ஏழு மாடி கட்டியுள்ள மாடி வீட்டு சீனு ஆனாலும்...
அந்த படிக்கு அடியில் குடித்தனம் நடத்தும் மாது ஆனாலும் சரி...
இவர்களிடம் யாசகம் பெறும் சாது ஆனாலும் சரி அனைவரும் அஷ்டவர்க கணிதத்தில் சமம் தான்.


337 என்பது எங்கு அதிகமாக கொட்டி சோலையாகியுள்ளது....
எங்கு குறைவாக தெளிக்கப்பட்டுள்ளது...
எங்கு காய்ந்து பாலையாகியுள்ளது என்பதை அறிந்து நடக்கும் நபர்கள் அனைவரும் வெற்றியாளர் ஆகலாம். இதனை நமக்கு சட்டென உணர வைக்கும் கதை ஒன்று உள்ளது. இது ஆரம்ப கல்வி படிக்கும் போது படித்த கதை தான் எனினும் *337ன் பார்வையில்* மீண்டும் ஓர்முறை படிக்கலாமா....

நல்ல பாம்பு ஒன்று புற்றில் வாழ்ந்து வந்தது.
அதற்கு ரொம்ப நாட்களாக தன்னுடைய இனத்தார் பெரிய மிருகங்களை கூட அப்படியே விழுங்கி விடுவதால், தாங்கள்தான் பலசாலி என்று நினைத்திருந்தது
இருந்தாலும், இதை சோதித்து பார்க்க எண்ணி, புற்றை விட்டு வெளியே வந்தது.
அப்போது அங்கு ஒரு கீரி வரவே, பாம்பு பயத்துடன் மறைந்துக் கொண்டு, ""ஆகா! கீரிதான் பலசாலி'' என்று நினைத்துக் கொண்டது.
அச்சமயம் அங்கு வந்த பூனை, கீரியை விரட்டியது. அதைப் பார்த்ததும், "பூனைத்தான் பலசாலி' என்று எண்ணியது பாம்பு.
அந்தப் பூனையை ஒரு நாய் விரட்டத் தொடங்கியது. அதைக் கண்டதும், ""பூனையை விரட்டுகிற நாய்தான் பலசாலி' என்று நினைத்தது பாம்பு.
பூனையை விரட்டிக் கொண்டு ஓடிய நாய், ஒரு மனிதன் செய்து கொண்டிருந்த பச்சைப் பானையில் விழுந்தது. அதைக் கண்டு கோபம் அடைந்த மனிதன், நாயைத் தடியால் அடித்தான்.
நாய் அலறிக் கொண்டு ஓடியது. அதைப் பார்த்துக் கொண்டிருந்த பாம்பு, ""நாயை விட மனிதன்தான் பலசாலி'' என்று எண்ணிக் கொண்டே மறைவை விட்டு வெளியே வந்தது.
மனிதன் அதைக் கண்டதும், ""ஐயோ பாம்பு!'' என்று அலறிக் கொண்டு ஓடினான். அந்தக் காட்சியை கண்ட பாம்பு, "இந்த உலகில் எல்லாரையும் விட நான்தான் பலசாலி' என்று எண்ணிக் கொண்டது.
அப்போதுதான் முன்பு பார்த்த கீரி மீண்டும் அங்கே வரவே, "அய்யோ... அம்மா!' என்று அலறிக்கொண்டு ஓட்டம் எடுத்தது பாம்பு.
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும். என எப்போதும் இறைவன் அருள் செய்து தான் உள்ளான். நமது பலத்தினை அறியாமல், அது எங்குள்ளதென தேடாமல் நமக்கு பிடித்த இடம்... பிடித்த வெற்றி... பிடித்த நட்பு... என பல பிடித்தவைகளை பிடித்திருக்கும் வரை நம்மை நமக்கு பிடிக்காமலேயே போகிறது.
இதனை உணரும் வரையில் அந்த பாம்பும் நாமும் வேறல்ல
கருத்திடுங்கள்.....

மக்களின்
அதிர்ஷ்ட ஆலோசகர்
*பொன்தாமரைக்கண்ணன்*
*ஶ்ரீராம் ஜோதிட ஆராய்ச்சிமையம்*
*கொடுமுடி, 7667745633.*

No comments:

Post a Comment