25 October 2016

குண்டலினியும் இராகு கேதுவும்...

குண்டலினியும் இராகு கேதுவும்...


இராகு கேது பற்றிய எமது சென்ற பதிவுக்கு 
கருத்து வளம் கூட்டும் அனைவருக்கும் நன்றி.
அனைத்து கோவில்களிலும் கூட 
கேது தலை பாம்பாகதான் தந்துள்ளார்கள்...
ஆன்மீக நண்பர்களின் 
லட்சியமாக இருப்பது குண்டலினி சக்தியாகும். 
அந்த குண்டலினி சக்தியானது
நமது உடலின் கீழ் பகுதியில் மறைந்துள்ளது... 
அதாவது வால் பகுதியில் இராகுவின்
 செயல்பாடுகளால் மறைந்து உள்ளது.

அங்கிருந்து சகஸ்ராரம் நோக்கி 
குண்டலினியை செலுத்த வேண்டும்.
இராகுவினால் உண்டாகும் 
புலனின்பங்களை வென்று 
அதாவது கேது தலையை நோக்கி 
தனது சக்திகளை இயக்க வேண்டும்.
வால் பகுதியில் உள்ள மூலாதாரம் 
இயங்கினால் தலையை 
நோக்கிதான் பயணிக்கிறது... 
அதாவது இராகுவினை பலவீனப்படுத்த 
அது கேதுவை நோக்கி பயணிக்கிறது. 
ஞானம் அடைகிறார்கள்.
கீழான நிலையில் உள்ளவரை 
மூலாதாரம் இயங்காது என்பார்கள்.
அதாவது...
இராகுவினால் கட்டுன்ட சக்தியினை மேலேயேற்றி கேதுவிற்க்கு கொண்டு செல்ல பயிலும் முறையே குண்டலினியாக இருக்கிறது. 
இதனால் இராகு வால்.. கேது தலை என்பதை அறிய முடிகிறது அல்லவா?

No comments:

Post a Comment