25 October 2016

7-4 காம்பினேசன்

*எண்கணிதம்- 7-4*
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண் 
7..16..25 ஆக இருந்து
விதி எண்ணாக
4 வரும் நண்பர்களே
நீங்கள் 7-4 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
(உங்கள் தேதி மாதம் வருடம்
இவற்றை கூட்டி
அதனை ஒரு இலக்கமாக
கூட்டி பார்க்கும் பொது வரும் எண்
விதிஎண் ஆகும்.)

*குணம்*
காலசர்ப தோசமுடைய நபர்களாவார்.
அனேக விசயங்களை செய்ய ஆசைப்படுவார்கள்.
ஆனால் அதனை முன்னெடுத்து
செல்லும் வழி கடினமானதாகும்.
அவசரத்தில் உணர்சிவசப்பட்டு
ஆரம்பிக்கும் அனைத்து விசயங்களும்
கடைசியில் தடையுண்டாகும்.
எனவே தீர்க்கமான சிந்தனை முக்கியம்.
ஆன்மிகம் ஞானம் யோகம் என
செல்லும் நபர்கள் பேரானந்தம் அடைவார்கள்.
மற்றவர்கள் மது மங்கை சது என
சாதாரண சிற்றின்பத்திலேயே
ஐக்கியம் அடைந்து விடுவார்கள்.
இதையே குணமாக கொண்டு
7-4 நண்பர்கள் இருப்பார்கள்.

*தொழில்*
மாற்று மருத்துவம்
விலங்கு மருத்துவம்
அனிமேசன் கிராபிக்ஸ்
மார்கெடிங் துறை
போட்டோ டெவலப்பிங்
புதிய வசதிகளை அறிமுகம் செய்தல்
பழசு ஆனால் புதுசு ரக தொழில்கள்
மத வளர்ச்சி பரப்புரை
போன்ற துறைகளில் ஈடுபட
புகழும், பணமும் உண்டாகும்.

*அதிர்ஷ்ட குறிப்பு*
பொதுவாக அனைத்து நபர்களும்
கெட்ட பழக்கம் இல்லாத நபர்கள்
நல்ல அதிர்ஷ்ட சாலிகளாக இருப்பார்கள்.
உங்களின் அதிர்ஷ்ட இரத்தினம்
வைடூரியம் கோமேதகம் ஆகும்.
கடவுள் துர்க்கை, கணபதிி ஆகும்.

*பெயர் குறிப்பு*
7-4 நபர்கள் தங்களின் பெயரினை
4... 7... 8 ம் எண்களில் வைப்பது
கடினமான வாழ்க்கை அமையும்
இதனை தவிர்ப்பது நலம்.
அனைத்தும் தவறாக போவது போல
அடிக்கடி உணர்வார்கள்.
இவர்கள் தங்களின்
பெயரினை நல்லபடி வைத்து
ஏற்றம் பெறலாம்.

மேலும் சில தகவல்களுக்கு
astronames.blogspot.in
7667745633

No comments:

Post a Comment