25 October 2016

சந்நியாசமும் புத்திர சோகமும்

குரு சில மாணவர்களை தமது இருப்பிடத்திலேயே சன்யாசம் தந்து... சிக்கலை சந்திக்கும் நிலையினை தற்போது செய்தி ஊடகங்களில் கண்டு இருப்போம்.
உண்மையில் இந்த எண்ணம் எதனால் வருகிறது.?
பெற்றோருக்கு இது புத்திரதோசம் என கொள்ளலாமா?
மேற்கண்ட கேள்விகளால் இன்று ஆன்மீக பாதைக்கு கூட தங்களின் பிள்ளைகளை அனுப்ப தயங்கும் நிலை உண்டாகிறது. இந்த சிக்கலுக்கு காரணங்கள் என ஆன்றோர்கள் பலவிசங்களை கூறும் போது... நல்ல இணைவுகளைக்கூட சன்னியாசத்துடன் இணைத்து பேச வேண்டியதாக ஆகிவிட்டது.

ஆனால், உண்மையில் இன்பத்தினை ஆன்மீக இன்பமாக்கி விடும் அமைப்பே சன்யாசம் ஆகும்....

இந்த அமைப்பினை இராகு கேதுவும் முன்னின்று தருவதால் கரணம் தப்பின் மரணம் கதையாக.... பக்தி என்பது சன்யாசமாகி விடுகிறது.
இதற்க்கு திசாபுக்தி துணை அவசியமானதாக படுகிறது. அதனால் தான் திசாபுக்தி காலத்தில் உண்டான சன்னியாசம் என்பது.... சிலகாலம் களித்து மீண்டும் சன்னியாசத்தில் இருந்து விடுத்துக் கொள்கிறார்கள்.

திடீர் இன்பம் = இராகு 
திடீர் முடிவு = கேது

இன்பம் நான்குடையோன்...
அவன் நான்கின் நான்கில் அதாவது ஏழில் இன்பம் அதிகம்.... ஏழாம் இடம் வெளியில் உள்ள ஏதோ ஒன்று நமக்கு தொடர்புக்கு வரும் ஓர் விசயம்...
அவைகள் நமது தேடலின் படி தேர்வு செய்யப்பட விதியின் பாதையில் வரும்.
அதனை மிக வேகமாக நுகர்வார்கள்.

வருவது ...!!!!
சிற்றின்ப இல்லறமா...
பேரின்ப துறவறமா...
இதில் ஒன்பதின் தொடர்பு மிகவும் அதிகமாக இருக்கலாம்..

அதாவது அந்த நபர்களுக்கு ஒன்பதாவது அதிபர் அல்லது சூரியன் இருவரில் யாராவது அல்லது இருவருமே கூட இரண்டு அல்லது நான்கில் இருக்கலாம்.

அதனால் பெற்றோரால் இன்பம்
எனகாட்டப்பட்ட பாதை....
பெற்றோருக்கு கவலையினை தருகிறது.
சன்னியாசம் சனி கேது நடுவில் குரு அகப்படுதலாலும் வரலாம்....
நல்ல தொழில் = சனி
நல்ல வருமானம் = குருவின் முன் சனி
அதுவே ஆன்மீக வழியில் சம்பாதனை குரு சனிக்கு முன் கேது....
துறவறம் = கேது தொட்ட குரு சனியினை நோக்கி நகர்தல்...

மேலே உள்ள தொடர்பில் சந்திரன் அல்லது சந்திரன் வீட்டில் இருந்து ஓர் கிரகம் தன் பார்வையினை இந்த அமைப்பின் மீது வீச எல்லாம் பாழ்... ஏமாற்றப்படுவார்.... போலி வார்த்தையால் கட்டுண்டு ஏமாந்து போவார்.

ஆனால் நோக்கம் இன்பம் நோக்கியே....
சரியாகத்தானே வருகிறது...

ஆனால் எந்த இன்பம் என்பதில் மாறுதலாகி விட்டது...

கிரகம் எப்போதும் பேசிக்கொண்டேயிறுக்கும்....
நாம் எந்த விசயத்தினை வைத்து அதனை கேட்டுக் கொள்வது என்பதிலேயே பலன்கள் மாறிப்போகிறது.

அதனை எண்கணித முறையே இதன் முடிவுகளை துல்லியப்படுத்தி வைக்கிறது. ஃபைன் ட்யூன் செய்வது போல...

இன்னும் மேலே மேலே கொண்டு போவதும் அல்லது கீழே கீழே தள்ளி விடுவதும் அவரின் பெயரினாலேயே சாத்தியப்படுகிறது. அதனால் தான் சன்னியாசம் பெறும்போது பெயர் மாற்றப்படுகிறது. அந்த புது பெயர் (தீட்சாநாமம்)அவருக்கு நன்கு பொருந்தி போக எந்த காரணத்திற்க்காக பெயர் மாற்றமோ அது நன்றாகவே (சன்னியாச வாழ்வும் கூட) நடந்து விடுகிறது...


ஶ்ரீராம் ஜோதிட ஆராய்ச்சி மையம்
V.V.பொன்தாமரைக்கண்ணன்
கொடுமுடி

7667745633

இறைவனுக்கான அர்பணிப்பு வாழ்க்கை
மிகவும் சிறப்பு தான். 
இல்லறத்திலும் கூட 
இது நடக்கும்
இன்னும் நல்லதாக...

No comments:

Post a Comment