25 October 2016

2-5 காம்பினேசன்

*எண்கணிதம்- 2-5*
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண் 
2, 11, 20, 29 ஆக இருந்து
விதி எண்ணாக
5 வரும் நண்பர்களே
நீங்கள் 2-5 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
(உங்கள் தேதி மாதம் வருடம்
இவற்றை கூட்டி
அதனை ஒரு இலக்கமாக
கூட்டி பார்க்கும் பொது வரும் எண்
விதிஎண் ஆகும்.)

*குணம்*
எந்த விசயத்தினையும் ஆழ்ந்து
ஆராயும் நபர்களாக 2-5 நபர்கள் இருப்பார்கள்.
எந்த காரியத்தினை செய்வதானாலும்
திறமையாக செய்வார்கள். சிறு சிறு
பிரச்சனை வரும்போது கூட பெரிய சிக்கல்
வந்தது போல மனம் குழப்பம் அடைவார்கள்.
அடுத்தவருக்கு ஆலோசனைதரும்போது
மிகவும் சிறப்பாக செயல்படுவார்கள்.
இவர்களின் எடுத்துக்காட்டு மற்றும்
பேச்சுதிறமை வியக்க வைக்கும்.
இவர்களின் பலமும் பலவீனமும்
பேச்சும் உள்ளது.

*தொழில்*
2-5 நண்பர்கள் முக்கியமாக
எழுத்தர்
புத்தக ஆசிரியர்
பயணம்..
மொழியியல்,
நுண் கலைகள்,
கல்லூரி ஆசிரியர்...
வக்கீல் ..
ஆன்மீக சொற்பொழிவு
மற்றும் பேச்சு சம்பந்தம் உள்ள துறைகளில்
நல்ல பெயரும் புகழும் பெறுவார்கள்.

*அதிர்ஷ்ட குறிப்பு*
2-5 நபர்கள் எப்போதும்
தயக்கத்தினை விட்டு ஒழிக்க வேண்டியது
மிகவும் அவசியமானதாகும்.
இவர்களின் அதிர்ஷ்ட கற்கள்
முத்து அல்லது மூன்ஸ்டோன், மரகதம் ஆகும்.
அதிர்ஷ்ட வழிபாட்டு கடவுள்
அம்மன், விஷ்ணு ஆகும்.

*பெயர் குறிப்பு*
இவர்கள் தங்களின் பெயர்களை
4… 8… 9 இவற்றில் வைக்காது
இருப்பதே நல்லது. இதனால்
தவறான வார்த்தைகளால் சிக்கலும்
தேவையில்லாத தடைகளும் ஆபத்துகளும்
வரும்படி ஆகும். இவர்களின்
பெயர் சிறப்பாக இருந்தால்
ஆளுமை திறன் நல்லபடி இருக்கும்.

மேலும் சில தகவல்களுக்கு
astronames.blogspot.in
7667745633

No comments:

Post a Comment