25 October 2016

உபபதா லக்கினம் அறியலாமா?

உபபதா லக்கினம் அறியலாமா?

ஜைமினி முனிவர் வகுத்த திருமண வாழ்க்கை பற்றிய சூட்சும லக்கினமே இந்த உபபதா லக்கினம் ஆகும்.
*இதன் பலன்கள்*
இந்த உபபதா லக்கினம் மற்றும் இதன் இரண்டு ஏழாம் இடங்கள் சுபபலம் பெற மனைவி பிள்ளைகளால் நலம் உண்டாகும். செல்வம் நன்கு அமையும். பலவீனம் அடைய சிக்கல் உண்டாகும். உபபதா லக்கின ஏழாமிடம் சனி இராகு கேதுவால் பாதிப்பு அடைய திருமணமே ஆகாத சூழல் கூட உண்டாகும்.
இங்கு ஆதிபத்திய பலன்களை காட்டிலும் இயற்க்கை சுபர் அசுபர் நன்கு பலன் கூற ஏதுவாக இருக்கிறது.

எப்படி_கணிப்பது
12ம் இடத்திலிருந்து
12ம் இடத்தோன்
அமர்ந்துள்ள இடம் வரை எண்ணி கண்ட எண்ணிக்கையினை
12ம் இடத்தோனில் இருந்து
மீண்டும் எண்ணி கிடைப்பதே
உபபதா லக்கினமாகும்.
ஒருவேளை 12மிடமோ
அல்லது அதன் ஏழாமிடமோ
உபபதா லக்கினமாக வந்தால்
அந்த இடத்தில் இருந்து
10வது இடத்தினை
உபபதா லக்கினமாக
கொள்ள வேண்டும்.

உதாரணம்...1
நடிகர் அமிர்தாப் பட்சன் ஜாதகத்தில்
கும்ப லக்கினம். அவரின் 12அதிபர் சனி
12கு 5ல் உள்ளார்...
எனவே அதற்க்கு 5மிடம்
கன்னியே அவரின் உபபதா
கன்னியில் சூரியன் சுக்கிரன் புதன் இரண்டில் சந்திரன் உள்ளதால் இவரின் கடைசி காலம் வரை இவரின் மனைவி பிள்ளை குடும்பத்தினரால் நல்ல மகிழ்ச்சி அடையும் படி ஆகிக் கொண்டுள்ளது. சனி என்பதால் கடுமையான உழைப்பும் செய்ய வேண்டியிருக்கிறது.

உதாரணம்... 2
கமல்காசன் இவரின் லக்கினமும் கும்பம்
12 அதிபர் சனி 9 ல்...
அதன் 9 எனில் இவரின்
உபபதா ரிசபம் ஆகும்.
அதன் இரண்டு மிதுனம் மற்றும் இராகு கேது என்பதால் திருமணம் வாழ்க்கை சிறப்பில்லை... சுப கிரகங்களும் உள்ளதால் இரண்டும் கலந்து நடக்கிறது. பணம் வருவதும் போவதுமாக இருக்கிறது.

உதாரணம்... 3
மகம் நட்சத்திர ஜாதகியம்மாவுக்கு
மிதுனலக்கினம் 12 அதிபர் சுக் 11ல்...
அதன் 11 மகரம் உபபதா
அதனை 7ன் சனி பார்க்க திருமணம் இல்லை. 2ல் சூரி புதன் நடிப்பு அரசியலால் பெரும் பணம். மகரத்தின் எட்டு என்பதால் சிக்கலுடன் கூடிய செல்வம்.

உதாரணம்...4
கழக அய்யாவுக்கு உபபதா கும்பம்
அதில் கேது ஞானியை போல வார்த்தை
இரண்டை இரண்டாமதிபதி குரு பார்க்க
செல்வம் பணம் கொட்டுகிறது.
வக்கிரம் என்பதால் 32 to 35 வயதுக்கு பின் பணமழை. ஏழின் போக இராகு மனைவி விசயத்தில் என்னா செய்தது என கூற வேண்டியதில்லை. ஆனால் அதாலேயே அவருக்கு பிள்ளை குட்டியால் பிரச்சனை தான்...
இதனை அனுபவத்தில் கண்டு பலன் அடையுங்கள்.... அப்புறம் பலன் சொல்லுங்கள்.

மக்களின்
அதிர்ஷ்ட வழிகாட்டுதலில்
ஜோதிடர் பொன்தாமரைக்கண்ணன்
கொடுமுடி 7667745633

4-5 காம்பினேசன்

*எண்கணிதம்- 4-5*
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண் 
4, 13, 22 31 ஆக இருந்து
விதி எண்ணாக
5 வரும் நண்பர்களே
நீங்கள் 4-5 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
(உங்கள் தேதி மாதம் வருடம்
இவற்றை கூட்டி
அதனை ஒரு இலக்கமாக
கூட்டி பார்க்கும் பொது வரும் எண்
விதிஎண் ஆகும்.)

*குணம்*
கடினமான உழைப்பு செய்யும்
நபர்களாக 4-5 நபர்கள் இருப்பார்கள்.
ஆற்றலிலை அடக்கி வைத்து முளுமையாக
வெளிப்படுத்தும் வித்தை கற்றவராக
இருப்பார்கள். அனைத்து திக்கிலும் ஆட்சி
செலுத்தும் இவர்களுக்கு அனைத்து
நபர்களும் நண்பர்களாக அமைவார்கள்.
நல்ல பாதையினை தேர்வு செய்து உழைத்தால் நீடித்த வெற்றி பெற்று வாழ்வார்கள்.
எதையும் முடிக்கும் ஆற்றலே
இவர்களின் அடையாளங்களாக இருக்கும்.

*தொழில்*
4-5 நண்பர்கள் முக்கியமாக
மொழியியல்
கம்ப்யூடர்
ஹார்டுவேர்
அலைச்சல் மிகுந்த வியாபாரம்
மல்டிலெவல் மார்கெடிங்
அனைத்து வியாபாரங்கள்
கெமிக்கல் சார்ந்தவைகள்
கணிதம் கற்ப்பனை சார்ந்த துறைகளில்
நல்ல பெயரும் புகழும் பெறுவார்கள்.

*அதிர்ஷ்ட குறிப்பு*
4-5 நபர்கள் உழைப்பினை மட்டுமே
கவனிக்காமல் தனது ஆரோக்கியத்தின் மீதும்
கவனம் செலுத்துதல் வேண்டும்.
இது மிகவும் அவசியமானதாகும்.
இவர்களின் அதிர்ஷ்ட கற்கள்
கோமேதகம் மரகதம் ஆகும்.
அதிர்ஷ்ட வழிபாட்டு கடவுள்
விஷ்ணு துர்க்கைஆகும்.

*பெயர் குறிப்பு*
இவர்கள் தங்களின் பெயர்களை
நல்ல அலைவரிசையில்
இருப்பது நல்லது. பலவீனமான பெயர்
தேவையில்லாத தடைகள்
வரும்படி ஆகும். இவர்களின்
பெயர் சிறப்பாக இருந்தால்
வாழ்க்கை நல்லபடி இருக்கும்.

மேலும் சில தகவல்களுக்கு
astronames.blogspot.in
7667745633

337

இந்த உலகத்தில் உள்ள அனைவருக்கும் இறைவன் சமமாகவே கொடுத்துள்ளான்.
இதையே அஷ்டவர்க கணிதம் நமக்கு காட்டி அருள்கிறது.
அஷ்டவர்க பரல் மொத்தம் 337 மட்டுமே.... 
ஏழு மாடி கட்டியுள்ள மாடி வீட்டு சீனு ஆனாலும்...
அந்த படிக்கு அடியில் குடித்தனம் நடத்தும் மாது ஆனாலும் சரி...
இவர்களிடம் யாசகம் பெறும் சாது ஆனாலும் சரி அனைவரும் அஷ்டவர்க கணிதத்தில் சமம் தான்.

3-5 காம்பினேசன்

*எண்கணிதம்- 3-5*
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண் 
3, 12, 21, 30 ஆக இருந்து
விதி எண்ணாக
5 வரும் நண்பர்களே
நீங்கள் 3-5 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
(உங்கள் தேதி மாதம் வருடம்
இவற்றை கூட்டி
அதனை ஒரு இலக்கமாக
கூட்டி பார்க்கும் பொது வரும் எண்
விதிஎண் ஆகும்.)

*குணம்*
முரட்டு குணமுடையவராக தெரியும்
நபர்களாக 3-5 நபர்கள் இருப்பார்கள்.
எந்த காரியத்தினை செய்வதானாலும்
கட்டுப்பாடுடன் செய்வார். அதே போல
பிடிவாதமான போக்கும் இருக்கும்.
அதனை சரியாக வெளிப்படுத்த முடியாதவர்கள்
போக்கிரி என பெயர் பெறுவார்கள்.
வாழ்க்கையில் எதனை பெறவும் இவர்கள்
நிறைய போராட வேண்டியிருக்கும்.
போராட்டம் கடின உளைப்பு இவைகளே
இவர்களின் அடையாளங்களாக இருக்கும்.

*தொழில்*
3-5 நண்பர்கள் முக்கியமாக
எழுத்தர்
ஆசிரியர்
விரிவுரையாளர்
மதபோதகர்
நீதிமன்றம் சார்ந்தவைகள்
பத்திரிக்கை அச்சு
இராணுவ காவல்துறை உயர் அதிகாரி
ஆராய்ச்சி விஞ்ஞானி
மற்றும் சீருடை அணிய வாய்ப்பு உள்ள துறைகளில்
நல்ல பெயரும் புகழும் பெறுவார்கள்.

*அதிர்ஷ்ட குறிப்பு*
3-5 நபர்கள் எப்போதும் தனக்கு
தோன்றுவது பற்றி மட்டும் யோசிக்காமல்
அடுத்தவரின் மனதையும் அறிய வேண்டியது
மிகவும் அவசியமானதாகும்.
இவர்களின் அதிர்ஷ்ட கற்கள்
முத்து அல்லது கனகபுஷ்பராகம், மரகதம் ஆகும்.
அதிர்ஷ்ட வழிபாட்டு கடவுள்
தக்ஷிணாமூர்த்தி பிரமன், விஷ்ணு ஆகும்.

*பெயர் குறிப்பு*
இவர்கள் தங்களின் பெயர்களை
6 ல் வைக்காது
இருப்பதே நல்லது. இதனால்
தேவையில்லாத தடைகள்
வரும்படி ஆகும். இவர்களின்
பெயர் சிறப்பாக இருந்தால்
வாழ்க்கை நல்லபடி இருக்கும்.

மேலும் சில தகவல்களுக்கு
astronames.blogspot.in
7667745633

நல்ல கதை

ஒரு துறவி கங்கையில் குளித்துவிட்டுக் 
கரையேறும் சமயம், 
அவ்விடத்தில் ஒரு குடும்பத்தைச் 
சேர்ந்த உறுப்பினர்கள், 
சத்தம் போட்டு ஒருவரை ஒருவர் 
திட்டிக் கொண்டிருக்கிறார்கள். 
அதைப் பார்த்த துறவி, 
தன் சீடர்களிடம் திரும்பி 
சிரித்துக்கொண்டே கேட்கிறார்? 
ஏன் மனிதர்கள் கோபத்தில் 
இருக்கும்போது ஒருவரை ஒருவர் 
பார்த்து சத்தம்போட்டு 
சண்டை பிடிக்கிறார்கள்?

சீடர்கள் சில நிமிடங்கள் சிந்திக்கிறார்கள்.....
பின்னர்.. சீடர்களில் ஒருவர்:= 
கோபத்தில் நாம் அமைதியை இழக்கிறோம்! 
அதனால் சத்தமிடுகிறோம்! 
துறவி:=ஆனால், உனக்கு 
மிக சமீபத்தில் இருக்கும் நபரிடம், 
ஏன் சத்தமிடுகிறாய்? 
அவர்கள் உன்னருகில்தானே நிற்கிறார்கள்! 
நீ சொல்ல வேண்டியதை 
அவர்களுக்கு மட்டும் கேட்கும் விதமாக 
எடுத்துறைக்கலாமே! 
ஒவ்வொரு சீடரும் ஒரு காரணம் சொல்கிறார்... 
ஆனால் எந்த காரணத்திலும் 
அடுத்தவர்களுக்கு உடன்பாடில்லை!

கடைசியாக துறவி பதில் கூறுகிறார்..... 
எப்பொழுது இரு மனிதர்கள், 
ஒருவர் மீது ஒருவர் கோபம் கொள்கிறார்களோ, 
அப்பொழுது அவர்களின் 
மனது இரண்டும் வெகு தொலைவுக்குச் 
சென்றுவிடுகிறது! எனவே 
தூரத்தில் இருக்கும் மனதுக்கு 
கேட்க வேண்டும் என்பதற்காகவே, 
சத்தமிடுகிறார்கள்! 
மனது எவ்வளவு தூரம் விலகி இருக்கிறதோ, 
அவ்வளவு தூரம் இவர்கள் 
தங்கள் ஆற்றலை உபயோகித்து 
சத்தம்போட வேண்டியிருக்கும்! 
அப்பொழுது தானே தங்கள் கருத்து 
வெகு தொலைவில் இருக்கும் 
மனதைச் சென்றடையும்! 
ஆனால் இதுவே, இரு மனிதர்கள் 
ஒருவர் மீது ஒருவர் 
அன்பாக இருக்கும்போது என்ன நடக்கிறது? 
அவர்கள் ஒருவரைப் பார்த்து 
ஒருவர் சத்தமிடுவதில்லை! 
அமைதியாகவும், அன்பான முறையிலும் 
தங்கள் கருத்துகளை வெளிப்படுத்துவார்கள்! 
காரணம் அவர்களின் மனது இரண்டும் 
வெகு சமீபத்திலே இருக்கும்! 
மனதிற்கு இடையேயான தூரம், 
மிகக் குறைவாக இருக்கும் அல்லது 
மனதிரண்டும் ஒன்றோடு 
ஒன்று இணைந்தே இருக்கும்!
துறவி தொடர்ந்து கூறுகிறார்...
இதைவிடவும் அதிகமாக ஒருவர் மீது ஒருவர் 
அன்பு செலுத்தும்போது என்ன நடக்கும்? 
அவர்கள் ஒருவருக்கொருவர் 
சத்தமாக பேச தேவையிருக்காது! 
அவர்களின் மனதுகள் இரண்டும் 
கிசுகிசுப்பாக பேசுவதில் இருந்தே, 
அவர்களின் கருத்துகள் பரிமாறப்படும்! 
இன்னும் இன்னும் அன்பு அதிகமாகும்போது 
வார்த்தையே தேவைப்படாது! 
அவர்கள் கண்கள் 
ஒருவரை ஒருவர் பார்க்கும்போதே, 
மனதின் எண்ணங்கள் வெளிப்பட்டுவிடும்!
துறவி கடைசியாக சீடர்களைப் பார்த்து கூறுகிறார்...
அதனால் நீங்கள் ஒருவருடன் 
ஒருவர் வாதிடும்போது, 
""உங்கள் மனதுகள் இரண்டும் 
தொலைவாகப் போய்விடாமல் 
பார்த்துக்கொள்ளுங்கள்! 
மனதின் தொலைவை அதிகப்படுத்தும் 
வார்த்தைகளை உபயோகப்படுத்தாதீர்கள்!""
அப்படி செய்யாமல் போனால், 
""ஒருநாள் உங்கள் மனங்களிரண்டின் 
தூரம் கொஞ்ஞம் கொஞ்ஞமாக அதிகமாகி, 
கடைசியில் ஒன்றுசேரும் பாதையே 
அடைக்கப்பட்டுவிடும் நிலை வந்துவிடும்.''''


நன்றி வலையுலகம்

குண்டலினியும் இராகு கேதுவும்...

குண்டலினியும் இராகு கேதுவும்...


இராகு கேது பற்றிய எமது சென்ற பதிவுக்கு 
கருத்து வளம் கூட்டும் அனைவருக்கும் நன்றி.
அனைத்து கோவில்களிலும் கூட 
கேது தலை பாம்பாகதான் தந்துள்ளார்கள்...
ஆன்மீக நண்பர்களின் 
லட்சியமாக இருப்பது குண்டலினி சக்தியாகும். 
அந்த குண்டலினி சக்தியானது
நமது உடலின் கீழ் பகுதியில் மறைந்துள்ளது... 
அதாவது வால் பகுதியில் இராகுவின்
 செயல்பாடுகளால் மறைந்து உள்ளது.

அங்கிருந்து சகஸ்ராரம் நோக்கி 
குண்டலினியை செலுத்த வேண்டும்.
இராகுவினால் உண்டாகும் 
புலனின்பங்களை வென்று 
அதாவது கேது தலையை நோக்கி 
தனது சக்திகளை இயக்க வேண்டும்.
வால் பகுதியில் உள்ள மூலாதாரம் 
இயங்கினால் தலையை 
நோக்கிதான் பயணிக்கிறது... 
அதாவது இராகுவினை பலவீனப்படுத்த 
அது கேதுவை நோக்கி பயணிக்கிறது. 
ஞானம் அடைகிறார்கள்.
கீழான நிலையில் உள்ளவரை 
மூலாதாரம் இயங்காது என்பார்கள்.
அதாவது...
இராகுவினால் கட்டுன்ட சக்தியினை மேலேயேற்றி கேதுவிற்க்கு கொண்டு செல்ல பயிலும் முறையே குண்டலினியாக இருக்கிறது. 
இதனால் இராகு வால்.. கேது தலை என்பதை அறிய முடிகிறது அல்லவா?

இராகு கேதுவில் தலை யார் வால் யார்?

இராகு கேதுவில் தலை யார் வால் யார்?

பெரும்பாலான நேரத்தில் பாம்பு கிரகங்களின் 
உண்மையான தோற்றமும் அதன் மூலமாக 
நமக்கு முன்னோர்கள் தந்த விசயங்களும்
மறக்க வைக்கப்படுகிறது. தற்போது 
நமது குழுக்களில் உலாவும் ஒரு கருத்து

இராகு தலை
கேது வால்

இதனை பற்றி நாம் சிறிது யோசிக்கலாமா?

2-5 காம்பினேசன்

*எண்கணிதம்- 2-5*
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண் 
2, 11, 20, 29 ஆக இருந்து
விதி எண்ணாக
5 வரும் நண்பர்களே
நீங்கள் 2-5 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
(உங்கள் தேதி மாதம் வருடம்
இவற்றை கூட்டி
அதனை ஒரு இலக்கமாக
கூட்டி பார்க்கும் பொது வரும் எண்
விதிஎண் ஆகும்.)

*குணம்*
எந்த விசயத்தினையும் ஆழ்ந்து
ஆராயும் நபர்களாக 2-5 நபர்கள் இருப்பார்கள்.
எந்த காரியத்தினை செய்வதானாலும்
திறமையாக செய்வார்கள். சிறு சிறு
பிரச்சனை வரும்போது கூட பெரிய சிக்கல்
வந்தது போல மனம் குழப்பம் அடைவார்கள்.
அடுத்தவருக்கு ஆலோசனைதரும்போது
மிகவும் சிறப்பாக செயல்படுவார்கள்.
இவர்களின் எடுத்துக்காட்டு மற்றும்
பேச்சுதிறமை வியக்க வைக்கும்.
இவர்களின் பலமும் பலவீனமும்
பேச்சும் உள்ளது.

*தொழில்*
2-5 நண்பர்கள் முக்கியமாக
எழுத்தர்
புத்தக ஆசிரியர்
பயணம்..
மொழியியல்,
நுண் கலைகள்,
கல்லூரி ஆசிரியர்...
வக்கீல் ..
ஆன்மீக சொற்பொழிவு
மற்றும் பேச்சு சம்பந்தம் உள்ள துறைகளில்
நல்ல பெயரும் புகழும் பெறுவார்கள்.

*அதிர்ஷ்ட குறிப்பு*
2-5 நபர்கள் எப்போதும்
தயக்கத்தினை விட்டு ஒழிக்க வேண்டியது
மிகவும் அவசியமானதாகும்.
இவர்களின் அதிர்ஷ்ட கற்கள்
முத்து அல்லது மூன்ஸ்டோன், மரகதம் ஆகும்.
அதிர்ஷ்ட வழிபாட்டு கடவுள்
அம்மன், விஷ்ணு ஆகும்.

*பெயர் குறிப்பு*
இவர்கள் தங்களின் பெயர்களை
4… 8… 9 இவற்றில் வைக்காது
இருப்பதே நல்லது. இதனால்
தவறான வார்த்தைகளால் சிக்கலும்
தேவையில்லாத தடைகளும் ஆபத்துகளும்
வரும்படி ஆகும். இவர்களின்
பெயர் சிறப்பாக இருந்தால்
ஆளுமை திறன் நல்லபடி இருக்கும்.

மேலும் சில தகவல்களுக்கு
astronames.blogspot.in
7667745633

1-5 காம்பினேசன்

*எண்கணிதம்- 1-5*
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண் 
1, 10, 19, 28 ஆக இருந்து
விதி எண்ணாக
5 வரும் நண்பர்களே
நீங்கள் 1-5 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
(உங்கள் தேதி மாதம் வருடம்
இவற்றை கூட்டி
அதனை ஒரு இலக்கமாக
கூட்டி பார்க்கும் பொது வரும் எண்
விதிஎண் ஆகும்.)

*குணம்*
இறங்கிய காரியங்களில் வெற்றியும்,
ஆண்கள் பெண்களாலும்
பெண்கள் ஆண்களாலும் லாபம் அடைதலும்,
கலாரசிகராகவும் இருப்பார்கள்.
ரகசியமான விசயங்களிலும்,
ரகசியமான கலைகளிலும்
ஈடுபாடும் நிபுணத்துவமும் உண்டாகும்.
பஞ்ச பூதங்களை அறிவார்கள்.
தியானம் யோகம் என போவோர்களும்,
மாந்த்ரீகம் மாயாஜாலம் மை குரடுவித்தை
எனப்போவோரும் என இரண்டு விதமான
நிலைகளில் மனம் அல்லாடும்.

*தொழில்*
1-5 நண்பர்கள் முக்கியமாக
நிர்வாகம்,
வியாபாரம்,
அரசியல்,
தூதுவர்,
அலங்கார துறை,
மந்திரம் யோகம்,
நுண் கலைகள்,
கல்லூரி ஆசிரியர்
வக்கீல் ஆகிய துறைகளில்
நல்ல பெயரும் புகழும் பெறுவார்கள்.

*அதிர்ஷ்ட குறிப்பு*
1-5 நபர்கள் எப்போதும்
நல்ல சிந்தனைகளில் இருப்பது அவசியம்.
அடிக்கடி குறுக்கு பாயும் மனதை
அடக்கி வைத்தல் அவசியமானதாகும்.
இவர்களின் அதிர்ஷ்ட கற்கள்
மாணிக்கம், மரகதம் ஆகும்.
அதிர்ஷ்ட வழிபாட்டு கடவுள்
சூரிய நாராயணர், சிவன், விஷ்ணு ஆகும்.

*பெயர் குறிப்பு*
இவர்கள் தங்களின் பெயர்களை
4… 7… 8… இவற்றில் வைக்காது
இருப்பதே நல்லது. இதனால்
தவறான பதில் சென்று
முட்டிக்கொள்ளும் நிலை உண்டாகும்.
பெயர் சிறப்பாக இருந்து முயன்றால்
உலகை வசமாக்கலாம்.

மேலும் சில தகவல்களுக்கு
astronames.blogspot.in
7667745633

9-4 காம்பினேசன்

*எண்கணிதம்- 9-4*
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண் 
9.. 18.. 27 ஆக இருந்து
விதி எண்ணாக
4 வரும் நண்பர்களே
நீங்கள் 9-4 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
(உங்கள் தேதி மாதம் வருடம்
இவற்றை கூட்டி
அதனை ஒரு இலக்கமாக
கூட்டி பார்க்கும் பொது வரும் எண்
விதிஎண் ஆகும்.)

*குணம்*
கடும் உழைப்பினை தர தயங்காதவர்கள்
சாகசத்தில் அதிக ஆர்வம் உண்டாகும்.
சேவைத்துறையில் இருப்பார்கள்.
விரும்பி ஏற்று சாதிப்பார்கள்.
போலீஸ் ராணுவம் போன்ற
அதிகாரம் மிக்க சீருடை அணியும்
துறைகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
பயணம் சார்ந்த அறிவுகள் அதிகம்.
அனைத்து விசயங்களிலும்
லாபம் அடையும் முயற்சிசெய்வார்கள்.
தலைமைக்கு அருகில் உள்ள பதவியினை
எளிதில் அடையலாம். அடைவார்கள்.
இதையே குணமாக கொண்டு
8-4 நண்பர்கள் இருப்பார்கள்.

*தொழில்*
போலீஸ்
ராணுவம்
சீருடை அணியும் வேறு எதுவும்
கூட்டாக செய்யும் வேலைகள்
ரியல் எஸ்டேட்
கட்டுமான பொருள் விற்பனை
நெருப்பு சம்பந்தமான
சூடான பொருள்கள் விற்பனை
நிர்வாகம்
மருத்துவ கருவிகள் தயாரிப்பு விற்பனை
தொழில்சாலை உள்ளேயுள்ள வேலைகள்
போன்ற துறைகளில் ஈடுபட
புகழும், பணமும் உண்டாகும்.

*அதிர்ஷ்ட குறிப்பு*
9.4 நண்பர்கள் பொதுவாக
எப்போதும் சிவப்பு வண்ணத்தினை
அதிகம் பயன் படுத்தவும். தயக்கமே உங்களின்
தோல்விக்கான முக்கிய காரணமாகும்.
திட்டமிட்டு உடனே தைரியமாக காரியமாற்ற
வெற்றி உங்களிடம்.
உங்களின் அதிர்ஷ்ட இரத்தினம்
பவளம் கோமேதகம் ஆகும்.
கடவுள் துர்க்கை, முருகன் ஆகும்.

*பெயர் குறிப்பு*
9-4 நபர்கள் தங்களின் பெயரினை
1... 2... 8 ம் எண்களில் வைப்பது
கடினமான வாழ்க்கை அமையும்
இதனை தவிர்ப்பது நலம்.
இதனால் தலைமையில் கோபம்...
அடிக்கடி விபத்து இழப்பு... தோல்வி வரலாம்.
இவர்கள் தங்களின்
பெயரினை நல்லபடி வைத்து
ஏற்றம் பெறலாம்.

மேலும் சில தகவல்களுக்கு
astronames.blogspot.in
7667745633

நாய் கடி, பூச்சி கடி...

நாய் போன்ற மிருகம் கடிப்பது பற்றி ஓர் உரையாடல்....

இதனை நான் இப்படி பார்க்கிறேன். கிரகங்களின் அலைவரிசைகளை மாற்றி அல்லது சமன்படுத்த அதிர்ஷ்ட ரத்தினம் தருகிறோம். அது எப்படி வண்ணத்தினாலும் தனது வேதியல் பண்பினாலும் மேலும் உயிரோட்டமான குணத்தினாலும் நல்லது அல்லது தீயது செய்கிறதோ அதுபோல குறிப்பிட்ட விலங்கு அல்லது பூச்சிகள் சில பலன்களை தர வாய்ப்பு இருப்பதாகவே கருதுகிறேன்.

8-4 காம்பினேசன்

*எண்கணிதம்- 8-4*
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண் 
8.. 17.. 26 ஆக இருந்து
விதி எண்ணாக
4 வரும் நண்பர்களே
நீங்கள் 8-4 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
(உங்கள் தேதி மாதம் வருடம்
இவற்றை கூட்டி
அதனை ஒரு இலக்கமாக
கூட்டி பார்க்கும் பொது வரும் எண்
விதிஎண் ஆகும்.)

*குணம்*
கடும் உழைப்பாளிகளாக இருப்பார்கள்.
நுண் அறிவு அதிகமாக இருக்கும்.
நேர்மையாக இருக்கும் நபர்கள் முன்னேற்றம்
நிலையாக இருக்கும்.
இவர்களின் மனதில் உள்ள விசயங்கள்
வெளியே வராது போகும்...
இரகசியமான துறைகளில் ஆர்வம் உண்டாகும்.
அதனால் தங்கள் தொழில் தேர்வில்
கவனமாக இருக்கவேண்டும்.
விண்வெளி மற்றும் வான்வெளி பற்றி
அதிக ஆர்வம் உண்டாகும்.
இதையே குணமாக கொண்டு

8-4 நண்பர்கள் இருப்பார்கள்.
*தொழில்*
பெட்ரொலியப் பொருள்கள்...
கனிமங்கள் சம்பந்தப்பட்டது...
மத ஸ்தாபகர்... போதகர்.
ஆராய்ச்சியாளர்...
மெக்கானிக் துறை....
பழைய பொருள் விற்ப்பனை...
நீதிபதி
பஞ்சாயத்து
போன்ற துறைகளில் ஈடுபட
புகழும், பணமும் உண்டாகும்.

*அதிர்ஷ்ட குறிப்பு*
8.4 நண்பர்கள் பொதுவாக
கலகலப்பாக இருந்தாலே
புகழ் பெறுவார்கள். பேசுவதற்க்கு தயங்கும்...
உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுபவர்கள்
துரதிிர்ஷ்ட சாலிகளாக இருப்பார்கள்.
உங்களின் அதிர்ஷ்ட இரத்தினம்
நீலம் கோமேதகம் ஆகும்.
கடவுள் துர்க்கை, வெங்கடாசலபதி ஆகும்.

*பெயர் குறிப்பு*
8-4 நபர்கள் தங்களின் பெயரினை
4... 6... 8 ம் எண்களில் வைப்பது
கடினமான வாழ்க்கை அமையும்
இதனை தவிர்ப்பது நலம்.
அனைத்தும் வந்தபின்னும்
மனதில் வறுமையை உணர்வீர்கள்.
இவர்கள் தங்களின்
பெயரினை நல்லபடி வைத்து
ஏற்றம் பெறலாம்.

மேலும் சில தகவல்களுக்கு
astronames.blogspot.in
7667745633

7-4 காம்பினேசன்

*எண்கணிதம்- 7-4*
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண் 
7..16..25 ஆக இருந்து
விதி எண்ணாக
4 வரும் நண்பர்களே
நீங்கள் 7-4 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
(உங்கள் தேதி மாதம் வருடம்
இவற்றை கூட்டி
அதனை ஒரு இலக்கமாக
கூட்டி பார்க்கும் பொது வரும் எண்
விதிஎண் ஆகும்.)

*குணம்*
காலசர்ப தோசமுடைய நபர்களாவார்.
அனேக விசயங்களை செய்ய ஆசைப்படுவார்கள்.
ஆனால் அதனை முன்னெடுத்து
செல்லும் வழி கடினமானதாகும்.
அவசரத்தில் உணர்சிவசப்பட்டு
ஆரம்பிக்கும் அனைத்து விசயங்களும்
கடைசியில் தடையுண்டாகும்.
எனவே தீர்க்கமான சிந்தனை முக்கியம்.
ஆன்மிகம் ஞானம் யோகம் என
செல்லும் நபர்கள் பேரானந்தம் அடைவார்கள்.
மற்றவர்கள் மது மங்கை சது என
சாதாரண சிற்றின்பத்திலேயே
ஐக்கியம் அடைந்து விடுவார்கள்.
இதையே குணமாக கொண்டு
7-4 நண்பர்கள் இருப்பார்கள்.

*தொழில்*
மாற்று மருத்துவம்
விலங்கு மருத்துவம்
அனிமேசன் கிராபிக்ஸ்
மார்கெடிங் துறை
போட்டோ டெவலப்பிங்
புதிய வசதிகளை அறிமுகம் செய்தல்
பழசு ஆனால் புதுசு ரக தொழில்கள்
மத வளர்ச்சி பரப்புரை
போன்ற துறைகளில் ஈடுபட
புகழும், பணமும் உண்டாகும்.

*அதிர்ஷ்ட குறிப்பு*
பொதுவாக அனைத்து நபர்களும்
கெட்ட பழக்கம் இல்லாத நபர்கள்
நல்ல அதிர்ஷ்ட சாலிகளாக இருப்பார்கள்.
உங்களின் அதிர்ஷ்ட இரத்தினம்
வைடூரியம் கோமேதகம் ஆகும்.
கடவுள் துர்க்கை, கணபதிி ஆகும்.

*பெயர் குறிப்பு*
7-4 நபர்கள் தங்களின் பெயரினை
4... 7... 8 ம் எண்களில் வைப்பது
கடினமான வாழ்க்கை அமையும்
இதனை தவிர்ப்பது நலம்.
அனைத்தும் தவறாக போவது போல
அடிக்கடி உணர்வார்கள்.
இவர்கள் தங்களின்
பெயரினை நல்லபடி வைத்து
ஏற்றம் பெறலாம்.

மேலும் சில தகவல்களுக்கு
astronames.blogspot.in
7667745633

ராசி கட்டத்தில் பூமி எங்கே உள்ளது?

உண்மையில் பூமிகிரகம் இராசிநிலையில் எங்கு உள்ளது?
நமது ஜாதக கட்டம் உருவாக்கப்படும் முறையினை சற்று உன்னிப்பாக கவனித்தால் ராசி நிலை கட்டத்தின் நடுவில் உள்ள காலி இடமே பூமியாகும். பூமியில் இருந்து அண்டவெளியினை காணும் படமே இராசி நிலையாகும்.
நடுவில் உள்ள இடத்தினை பூமியாக வைத்து லக்கினத்தினை அந்த நொடியில் நமது கிழக்காக வைத்து பார்க்க எல்லாம் சரியாக வரும்.
இதற்க்கு மேலும் கூட பல உண்மைகளை உணர வேண்டியுள்ளது. அனைத்து கிரகங்களும் பூமிக்கு ஏழில் தான் இருக்கும். ஏனேனில் பூமியினை நடுவில் வைத்தே அனைத்து கணிதமும்.

கோவில்வாசல் தாண்டலாமா?

கோவிலின் உள்ளே நுளையும்போது தலைவாசலின் மீது ஏறி உள்ளே போகலாமா கூடாதா?


நல்ல கேள்வி தான்...
எனக்கு தெரியலை பதிலை நீங்களே முடிவு செய்யுங்க.. 

சரி, இப்ப சொல்லுங்க....
படி இரண்டு அடி அகலம் ஒரு அடி உயரம்னு பெருசா இருந்தால்....
சின்ன பையன் இரண்டு அடி அகலம் ஒரு அடி உயரம் உள்ள கோவில் படி எப்படி தாண்டுவது....
ஏறி போவதா தாவிப்போவதா...

சரி சிறுவன் தாவித்தான் போகட்டுமே...
கிழவன் நடக்கவே ஆகாத நிலை... 
அவர் எப்படி படியினை கடப்பார்...
சூழல் இன்னும் கடினம்...

கர்பஸ்திரி வழிபட வந்துள்ளார்.
வாசலின் உள்ளே மழைகாரணமாக நீர் தேங்கியுள்ளது....
அதுவும் தீபம் ஏற்றிய எண்ணை பிசுப்பு வேறு உள்ளது...
இரண்டு அடி அகலம் 
உயரம் ஒரு அடி 
படியினை எப்படி கடப்பது...

சற்று நிதானமாக யோசித்தால்...
கோவிலில் நாம் பாவம் செய்யும் அளவிற்க்கு எந்த விசயத்தினையும் நமது முன்னோர்கள் செய்யமாட்டார்கள்... என்பதனை நம்புகிறேன். படிகளில் நிறைந்துள்ள அபரிமிதமான சக்தியோட்டத்தினை நாம் பெற வேண்டும் என்பதாலேயே...

பெரிய கோவில்களில் பெரிய படிகளை அமைத்து 
அதனை தாண்டுவதை கடினமானதாக்கி...
நோயாளிகளும்...
வயதானவர்களும்...
சிறு குழந்தைகளும்...
கர்பிணிகளும்...
படியினை தாண்டும் போது படியினில் ஏறி அந்த சக்தியினை பரிபூரணமாக பெறும்படி... கோவிலின் உள்ளே போகும் முன்னரேயே நம்மை புணிதமடைய செய்யும் அற்புத செயலே படியினை தாண்டும் போது நடக்கிறது.

எமது கருத்து என்னவெனில்...
சக்தியுள்ளவர்கள் படியினை 
தா......ண்டி செல்லுங்கள்.
படியின் மீது ஏறிச்செல்பவர்களை 
பாவம் எனக் கூறி மிரட்டாதீர். 
அது கோவிலின் கட்டிட விதிகளுக்கு எதிரானதாகும்...
இப்போது கூறுங்களேன்
படியினில் கால் வைத்தல் புண்ணியம் அல்லவா...
படியினில் கால் வைத்து போக கூடாது எனும் நம்பிக்கை மூட நம்பிக்கை தானே...
இந்த கருத்து எனக்கு சரி...
யாராவது மாற்றுகருத்து கூறினால் அவருக்கு அது சரி...
இருப்பினும் எனக்கு இது சரி...

சட்டம் அனைவருக்கும் சமமாகவே இருக்க வேண்டும்.
இருக்கும்.
அதனால் தான் சொல்கிறேன் இது சரியானது...

6-4 காம்பினேசன்

*எண்கணிதம்- 6-4*
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண் 
6.. 15.. 24 ஆக இருந்து
விதி எண்ணாக
4 வரும் நண்பர்களே
நீங்கள் 6-4 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
(உங்கள் தேதி மாதம் வருடம்
இவற்றை கூட்டி
அதனை ஒரு இலக்கமாக
கூட்டி பார்க்கும் பொது வரும் எண்
விதிஎண் ஆகும்.)

*குணம்*
மிகவும் சாதுர்யமான பேச்சும்...
நடவடிக்கையும் உள்ள நபர்கள்
அனைத்து இன்பங்களையும் அனுபவிக்க
ஆசைப்படுதலுடன் அனுபவிக்கவும்
வாய்ப்புகள் உண்டாகும்.
தனக்கு தானே எதிரி எனும்படி
காரியங்களை செய்யும்படி ஆகும்.
எதனையும் பெரியதாக செய்து
அதில் தடையுன்டாகும்படி ஆனபின்
நஷ்டம் உண்டாகும்படி ஆகும்.
சாதாரணமான வெற்றியாளராக
உள்ள நபர்களில் பலர்
6-4 நண்பர்கள் இருப்பார்கள்.

*தொழில்*
ஆடை ஏற்றுமதி இறக்குமதி
அலங்கார பொருள் விற்ப்பனை
இன்ப சுற்றுலா வாகன ஓட்டுனர்
நிதி சம்பந்தமான...
போட்டோசாப் கிராபிக்ஸ்
ஆசிரியர் விரிவுரையாளர்
போன்ற துறைகளில் ஈடுபட
புகழும், பணமும் உண்டாகும்.

*அதிர்ஷ்ட குறிப்பு*
தனது செயல்பாடே தனது
உயர்வு தாழ்வினை நிரிணயம் செய்யும்
நல்லபடி செயல்பட முயற்சி செய்யவும்.
உங்களின் அதிர்ஷ்ட இரத்தினம்
வைரம் கோமேதகம் ஆகும்.
கடவுள் துர்க்கை, மகாலட்சுமி ஆகும்.

*பெயர் குறிப்பு*
6-4 நபர்கள் தங்களின் பெயரினை 
3... 8 ல் வைக்காமல் இருப்பது 
அவசியம் ஆகும்.
பெயரினை நல்லபடி வைத்து
ஏற்றம் பெறலாம்.

மேலும் சில தகவல்களுக்கு
astronames.blogspot.in
7667745633

சந்நியாசமும் புத்திர சோகமும்

குரு சில மாணவர்களை தமது இருப்பிடத்திலேயே சன்யாசம் தந்து... சிக்கலை சந்திக்கும் நிலையினை தற்போது செய்தி ஊடகங்களில் கண்டு இருப்போம்.
உண்மையில் இந்த எண்ணம் எதனால் வருகிறது.?
பெற்றோருக்கு இது புத்திரதோசம் என கொள்ளலாமா?

3-4 காம்பினேசன்

*எண்கணிதம்- 3-4*
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண் 
3...12...21...30 ஆக இருந்து
விதி எண்ணாக
4 வரும் நண்பர்களே
நீங்கள் 3-4 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
(உங்கள் தேதி மாதம் வருடம்
இவற்றை கூட்டி
அதனை ஒரு இலக்கமாக
கூட்டி பார்க்கும் பொது வரும் எண்
விதிஎண் ஆகும்.)

*குணம்*
கடுமையான உழைப்பும்
சேவைத்துறைகளில் ஆர்வமும்
இவர்களை செவிளியர்
டிரைவர் போன்ற துறைகளில்
ஈடுபடுவார்கள்...
கம்ப்யூடர் மற்றும் மெக்கானிக்
போன்ற துறைகளில்
இருப்பார்கள்... சாதாரணமாகவே
இருக்கும் நபர்கள் தான் அதிகமாக
இருக்கிறார்கள். ஏனைனில்
சிறிய வெற்றியில் அதிக
சந்தோசம் அடைவார்கள்...
மேலும்..... குரு சண்டாள தோசம்
காரணமாக கெட்டபழக்கங்களுக்கு
அடிமையாக போவர்கள் அனேகம்.
அதனால் இவர்கள் உத்வேகமாக உழைத்து
முன்னேற்றம் காணும் 3-4 நபர்கள்
மட்டுமே நல்லபடி் இருப்பார்கள்.

*தொழில்*
செவிளியர்
சர்வர்கள்
டிரைவர்
மார்கெடிங்
எளிதாக அடுத்தவரிடம் வேலைவாங்கும்
கம்ப்யூடர் மற்றும் மெக்கானிக்
போன்ற துறைகளில் ஈடுபட
புகழும், பணமும் உண்டாகும்.
*அதிர்ஷ்ட குறிப்பு*
மது...மங்கை... போன்ற விசயங்களில்
நல்ல ஒழுக்கத்தினை காக்க நலம் பெறலாம்.
இவர்களின் அதிர்ஷ்ட ரத்தினம்
கனகபுஷ்பராகம்் கோமேதகமும் ஆகும்.
கடவுள் துர்க்கை, தக்ஷிணாமூர்த்தி ஆகும்.

*பெயர் குறிப்பு*
3-4 நபர்கள் பொதுவாக
6…8…ல் பெயர் வைப்பதினை தவிர்க்க
தோல்வியாளர் அல்லது கெட்ட பழக்கம் அடிமை
ஆகாமல் பார்த்துக்கொள்ளலாம்.

மேலும் சில தகவல்களுக்கு
astronames.blogspot.in
7667745633

5-4 காம்பினேசன்

*எண்கணிதம்- 5-4*
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண் 
5..14..23 ஆக இருந்து
விதி எண்ணாக
4 வரும் நண்பர்களே
நீங்கள் 5-4 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
(உங்கள் தேதி மாதம் வருடம்
இவற்றை கூட்டி
அதனை ஒரு இலக்கமாக
கூட்டி பார்க்கும் பொது வரும் எண்
விதிஎண் ஆகும்.)

*குணம்*
ராணுவம் போலீஸ் என்று
கூறும்படியாக நடத்தைகள் அமையும்.
காரசாரமான பேச்சுக்களையும்
பிறர் விரும்பும்படி தரும் போக்கு அமையும்.
நண்பர்களும் எதிரிகளும்
சரி சமமாக இருக்கும்.
அதிகப்படியான ஆசைகளை
அடக்கியாள வேண்டும்.
இளம் வயதில் சிறப்பான
வாழ்க்கை அமையும்.
இதையே குணமாக கொண்டு
5-4 நண்பர்கள் இருப்பார்கள்.

*தொழில்*
கிராபிக்ஸ்
டிரைவர்
மார்கெடிங்
கம்ப்யூடர்
இராணுவம்
போட்டோ
போன்ற துறைகளில் ஈடுபட
புகழும், பணமும் உண்டாகும்.

*அதிர்ஷ்ட குறிப்பு*
வாழ்க்கையில் மிக நல்ல நிலையென்பது
முன்பகுதியேயாகும். அதனை பயன்படுத்த
நல்லபடி முயற்சி செய்யவும்.
உங்களின் அதிர்ஷ்ட இரத்தினம்
மரகதம் கோமேதகம் ஆகும்.
கடவுள் துர்க்கை, விஷ்ணு ஆகும்.

*பெயர் குறிப்பு*
5-4 நபர்கள் தங்களின் பெயரினை
அதிர்ஸ்டகரமாக வைக்க வேண்டியது
அவசியம் ஆகும். வாழ்க்கை மிக சாதாரணமாக
போகும் நண்பர்கள் நடு பகுதிக்கு பின்னர்
கடினமான வாழ்க்கை அமையும் அனைவரும்
பெயரினை நல்லபடி வைத்து
ஏற்றம் பெறலாம்.

மேலும் சில தகவல்களுக்கு
astronames.blogspot.in
7667745633

4-4 காம்பினேசன்

*எண்கணிதம்- 4-4*
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண் 
4..13..22..31 ஆக இருந்து
விதி எண்ணாக
4 வரும் நண்பர்களே
நீங்கள் 4-4 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
(உங்கள் தேதி மாதம் வருடம்
இவற்றை கூட்டி
அதனை ஒரு இலக்கமாக
கூட்டி பார்க்கும் பொது வரும் எண்
விதிஎண் ஆகும்.)

*குணம்*
அலைச்சல் மிகுந்த துறைகளில் ஆர்வமும்
அதனால் வரும் நற்பெயரினை
மிகச்சிறப்பாக பயன்படுத்தும் போக்கும்
இவர்களின் சிறப்பாகும்.
பெரிய மனிதர்களின் நட்பும்
அவர்களின் ஆதரவும் பெற்று இருப்பார்கள்.
கணிணி மற்றும் எலக்ரானிக் துறைகளில்
நிபுணத்துவம் உண்டாகியிருக்கும்.
நண்பர்களுடன் மிகவும் பொழுது போக்கும்
நபர்களாக உள்ளவராவார்கள்.
போட்டோ கிராபிக்ஸ் துறையிலும்
காடுகளில் அலையும் நபராகவும்
4-4 நண்பர்கள் இருப்பார்கள்.

*தொழில்*
கலைத்துறை டெக்னாலஜி
டிரைவர்
மார்கெடிங்
கம்ப்யூடர் மற்றும் மெக்கானிக்
போன்ற துறைகளில் ஈடுபட
புகழும், பணமும் உண்டாகும்.

*அதிர்ஷ்ட குறிப்பு*
வாழ்க்கையில் மிக நல்ல அல்லது
மிகவும் கீழ்நிலையில் இருக்க நேரிடும்.
இதனை மனதில் கொண்டு நல்லபடி முயற்சி செய்யவும். கோமேதகம் ஆகும். கடவுள் துர்க்கை, பிரத்தியங்கிரா இது போன்ற தேவிகள் ஆகும்.

*பெயர் குறிப்பு*
4-4 நபர்கள் பொதுவாக
8…ல் பெயர் வைப்பதினை தவிர்க்க
தோல்வியாளராகவும், திடீர் விபத்துகள்
ஆகாமல் பார்த்துக்கொள்ளலாம்.

மேலும் சில தகவல்களுக்கு
astronames.blogspot.in
7667745633

2-4 காம்பினேசன்

*எண்கணிதம்- 2-4*
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண் 
2..11..20..29 ஆக இருந்து
விதி எண்ணாக
4 வரும் நண்பர்களே
நீங்கள் 2-4 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
(உங்கள் தேதி மாதம் வருடம்
இவற்றை கூட்டி
அதனை ஒரு இலக்கமாக
கூட்டி பார்க்கும் பொது வரும் எண்
விதிஎண் ஆகும்.)

*குணம்*
கடமை தவறாதவர்...
நேரம் தவறாதவர்...
அதை பற்றியும் பெரிதாக
அலட்டிக்கொள்ளாத குணம்...
பெரிய சிரமம் இல்லாமலேயே
காரியம் ஆற்றுதல்...
இப்படியும், கலாரசிகனாகவும்...
நல்ல நடிப்பு, நடனம்,
இப்படியும் இருப்பார்கள்.
சம்பாதனைக்கு பவிதமான வருமானம்
வைத்திருக்கும் இவர்கள்
பெரும்பாலும் சுயநலவாதியாக
இருக்க கூடும். பெரிய உபாயங்களை
செய்து பெயர் பெறுபவர்களாக
2-4 னர்கள் இருப்பார்கள்.

*தொழில்*
கலை, கவிதை, ரசனை,
கற்பனை, மொழி
விரிவுரையாளர்...
வக்கீல்.. வாதம்...
பாரம்பரியமான தொழில்கள்...
அதிக மக்கள் புழங்கும் இடங்கள்
ஆகிய தொழில்களில் எடுபட
புகழும், பணமும் உண்டாகும்.

*அதிர்ஷ்ட குறிப்பு*
வாதம் மொழி சம்பந்தமான
துறைகளில் அல்லது இடத்தில்
இருக்க நலம் பெறலாம்.
இவர்களின் அதிர்ஷ்ட ரத்தினம்
முத்துவும் கோமேதகமும் ஆகும்.
கடவுள் துர்க்கை, மாரி ஆகும்.

*பெயர் குறிப்பு*
2-4 நபர்கள் பொதுவாக
9…8…ல் பெயர் வைப்பதினை தவிர்க்க
தோல்வியாளர் அல்லது கெட்ட பழக்கம் அடிமை
ஆகாமல் பார்த்துக்கொள்ளலாம்.

மேலும் சில தகவல்களுக்கு
astronames.blogspot.in
7667745633

முகூர்த்தம் வைப்பது மண்டபபமா? ஜோதிடமா?

சுபமுகூர்த்த நாள்

நல்ல நேரம் பார்ப்பது என்பது...

ல்ல பூஜைகள் செய்யுப்போது 
நாம் எப்படி நல்லபடியாக குளித்து 
தூய ஆடையுடுத்தி
முறையாக சின்னங்களை அணிந்து 
பூஜைக்கு தயாராகிறோமோ...
அதோ போல தான்.... 
சுப முகூர்த்தம் என்பதும்... நமது உடலை தயார் படுத்தியதை போல...



முகூர்த்த நிர்ணயம் என்பது 
ஒருநாளினை சுத்தப்படுத்தப்பட்ட நாளாக 
எந்த அழுக்கும் (தோசம்) இல்லாத நாளாக தேர்வு செய்வதாகும்.

குளித்து சின்னங்கள் அணிந்தாலே போதும் இறைவனின் அருளை பெற்று விடலாம் என கூறுவது பொருத்தமான வார்த்தையாகுமா? 

அதே போல தான்... 
நல்ல முகூர்த்தம் மட்டுமே நல்ல பலன்களை தந்து விடாது.

வழிபாடு மற்றும் அர்பணிப்பே நமக்கு வழிபாட்டின் வெற்றி ஆவது போல... 

சுப காரியங்களிலும் பலவிதமான விசயங்கள் தேவையாகிறது.

நல்லநாள் பார்ப்பது... 
நல்லது தான். ஆனால்

அது மட்டுமே போதும் என்றால்..
கடவுளேயில்லாமல் பூஜை நடத்தியதற்க்கு சமமானது போல.....
இப்படி தான் விளக்குவேன்...

ஒருவர் என்னிடம் அப்படி தான் கேட்டார்..
வளர்பிறைதான் வேணும்... 
பையன் பிறந்த நாள் இது வேண்டாம்... மேலும் இந்த முகூர்த்தத்தில் மண்டபம் இல்லை. இடையில் இந்த நாள் தான் உள்ளது. அதில் அஸ்டமி நவமி போக இரண்டு நாள் உள்ளது. அதில் முகூர்த்தம் வைத்து கொடுங்க ஜோசியரே...
நானெல்லாம் ஜோசியர் சொல்லை மீறி ஏதும் பண்ணமாட்டேனுங்க.....

இப்படித்தான் இப்பபோது நடக்கிறது
திருமணம் முகூர்த்தம் நிர்ணயத்தில்... 
அஷ்டமி நவமி பார்க்காமல் போனாலும் கூட....
எண்ணியல் பற்றி கண்டிப்பாக... 
பார்த்தே ஆக வேண்டியுள்ளது.

எண்கணிதம் அவ்வளவு விளைவுகளை 
உண்டாக்கி விடுகிறது.... 
சிறப்பாக....
5...14..23 ம் தேதிகளில் விதி எண்ணும் சரியில்லாது போக 
விவாகரத்து வரையில் போவதையும்.... அல்லது கர்பபை கட்டிகளையும் 
புத்திரதடையினையும் காண முடியும். 
மிகவும் துல்லியமான பலன்களாக... முகூர்த்த நிர்ணயத்தினை கணிக்கும் போது 
எண்கணிதத்தினையும் இணைப்பது முக்கியமானதாகும்
இல்லையேல் கடின சூழல் தான்....

முகூர்த்த நிர்ணயத்தில் இன்னும் பல விசயங்கள் 
சேர்க்க வேண்டிய காலகட்டத்தில் உள்ளோம்.....
அதில் முக்கியமானதாக எண்கணிதம் உள்ளது...
இது போல பிருகு நந்தி வரவால் இன்னும் பல விசயங்கள் 
முக்கியமாக கவனிக்க வேண்டியுள்ளதாக உணர்கிறேன்...


நல்லது கூறப்பட்டுள்ளது
நல்லது நடக்கட்டும்
அன்புடன்
அஸ்ட்ரோகண்ணா
7667745633

1-4 காம்பினேசன்

*எண்கணிதம்- 1-4*
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண் 
1..10..19..28 ஆக இருந்து
விதி எண்ணாக
4 வரும் நண்பர்களே
நீங்கள் 1-4 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
(உங்கள் தேதி மாதம் வருடம்
இவற்றை கூட்டி
அதனை ஒரு இலக்கமாக
கூட்டி பார்க்கும் பொது வரும் எண்
விதிஎண் ஆகும்.)

*குணம்*
நண்பேண்ட... என உறவு கொண்டாடும்
நண்பர்கள் அநேகம் இவர்களுக்கு
அமைவார்கள். அரசு வழி ஆதாயம்
பெரும் நபர்கள் நண்பர்கள் ஆவார்கள்.
ஜனங்களின் ஆதரவு பெறுவது எப்படி என
பாடம் நடத்தும் அளவுக்கு இவர்களின்
செயல்பாடுகள் இருக்கும். குடும்ப வாழ்வில்
பிணக்குகள் வந்தாலும் சமாளித்து
வெளியில் தெரியாமல் சிரிக்கும் குணம்
கொண்டு இருப்பார்கள். கேட்ட சிநேகம்
அமையாமல் பார்த்துக்கொண்டால்
எல்லாம் நலமாகும்.

*தொழில்*
அரசியல்... விமரிசனம்..
கம்ப்யூடர்... வான் பொருள்கள்..
வெளியில் சுற்றித்திரியும் தொழில்கள்...
மார்கெடிங்.... பங்கு வர்த்தகம்...
கற்பனை முக்கியத்துவம் வாய்ந்தவைகள்...
பழைய தொழில் புது வடிவில்....
இது போன்ற துறைகளில்
இவர்கள் ஈடு படும் பொது
மேன்மை அடைகிறார்கள்.

*அதிர்ஷ்ட குறிப்பு*
சாகவாச தோஷம் உண்டு.
உன் நண்பனை பற்றி சொல்
உன்னை பற்றி கூறுகிறேன்...
என்பது இவர்களுக்கு தானோ.
வெளிர் எமிதிஸ்ட், மாணிக்கம், கோமேதகம்
இவர்களின் அதிர்ஷ்ட ரத்தினங்கள் ஆகும்.
சிவன், துர்க்கை தெய்வங்கள் ஆகும்.

*பெயர் குறிப்பு*
1-4 நண்பர்கள் முக்கியமாக
8ல் பெயர் வைப்பதை தவிர்க்கவும்.
பொறுப்பில்லாத வாழ்க்கை
வாழும் 1-4 நபர்களை பெயர் எண்
மாற்றம் மூலமாக சரியாக முடிகிறது.

மேலும் சில தகவல்களுக்கு
astronames.blogspot.in
7667745633

9-3 காம்பினேசன்

*எண்கணிதம்-9-3 *
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண் 
9..18..27 ஆக இருந்து
விதி எண்ணாக
3வரும் நண்பர்களே
நீங்கள் 9-3 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
(உங்கள் தேதி மாதம் வருடம்
இவற்றை கூட்டி
அதனை ஒரு இலக்கமாக
கூட்டி பார்க்கும் பொது வரும் எண்
விதிஎண் ஆகும்.)

*குணம்*
உழைப்பினாலேயே சாதனைகள்
சாத்தியம் எனும் முழக்கம்
இவர்களிடம் வெளிப்படும்.
தைரியமான நபராக அறியப்படும் இவர்கள்
பாசத்தினால் கட்டுப்பட்டு விடுவார்கள்...
இவர்கள் தனியாக இயங்குவதை காட்டிலும்
ஏதாவதே கடமையில் இருக்கும் போது
சிறப்பாக செயல்படுவார்கள்.
அதனால் அதிகார வேலையில் இருக்கும் நபர்கள் வெற்றியாளர்களாகவும் சாதனையாளர்களாகவும்
மாறுவதும்... சாதாரண வேலையில் உள்ளவர்கள்
சோம்பல் நிறைந்த மந்தமான நிலையில் உள்ளதையும் கூட பார்க்கலாம்.
பெயர் பொருந்தாத நபர்கள்
அடிக்கடி காயம் அடையும்படியும் பகழ் மாறும் நிலையினையும் அடைவார். பெயர் சுமாராக அமைந்தவர் கூட அனேகமாக
சிறப்பாகவே இருப்பார்கள்.

*தொழில்*
போலீஸ்.. ராணுவம்..
ரியல் எஸ்டேட்...
கட்டுமானம் சம்பந்தமானவை...
பணம் கொடுக்கல் வாங்கல்
தங்கம் நிலம் சொத்து அடகு பிடித்தல்...
அறங்காவலர்...
மத ஸ்தாபகர்
ஆன்மீக பொருள் விற்பனை
ஆன்மீக பொருள் தயாரிப்பு
டைலரிங்...
போன்ற துறைகளில் மிகவும் பெரிய
வெற்றியாளர் ஆவார்.

*அதிர்ஷ்ட குறிப்பு*
அதிகாரம் உயர்பதவி அல்லது தனக்கு கீழ் சிலராவது உள்ள படி வேலை உடையவர்களாக
இருப்பது மிகவும் முக்கியமாகும்.
கனக புஸ்பராகமும்,
பவளம் ரத்தினமும் அதிர்ஷ்டம் அளிக்கும்.
முருகன் தக்ஷிணாமூர்த்தி
இவர்களே அதிர்ஷ்ட தெய்வங்கள் ஆகும்.

*பெயர் குறிப்பு*
9-3 காம்பினேசன் நபர்கள்
2...6... இவற்றில் பெயர்
வைப்பதை தவிர்க்கவும்.
அப்படி உள்ளவர்கள் எளிதில் தோல் நோயும் அடிக்கடி காயங்கள் படும் நிலையும் மின்சாரம் தண்ணீரில் கூட ஜாக்கிரதையாக இருக்கும் நிலை அடைவார்கள்.

மேலும் சில தகவல்களுக்கு
astronames.blogspot.in
7667745633

8-3 காம்பினேசன்

*எண்கணிதம்-8-3 *
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண் 
8..17..26 ஆக இருந்து
விதி எண்ணாக
3வரும் நண்பர்களே
நீங்கள் 8-3 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
(உங்கள் தேதி மாதம் வருடம்
இவற்றை கூட்டி
அதனை ஒரு இலக்கமாக
கூட்டி பார்க்கும் பொது வரும் எண்
விதிஎண் ஆகும்.)

*குணம்*
வாழ்க்கையின் முதல் பகுதியில்
கடவுள் நம்பிக்கை இல்லாதவராகவும்..
கடவுளை பற்றிய மாற்றுக்கருத்துள்ள
நபராக இருப்பார். நேர்மையான மனிதர்
என அனைவரிடமும் நற்பெயர் பெறுவார்.
நீதிபதி, கடும் உழைப்பாளி, எதனையும்
கடுமையாக திட்டமிட்டு செய்யும் போக்கு,
இவைகளால் வெற்றியாளராக இருப்பார்கள்.
பெயர் பொருந்தாத நபர்கள்
மிகவும் கடுமையான குடும்ப சிக்கலை
சந்திப்பார்கள். பிற்பகுதி அனேகமாக
சிறப்பாகவே இருக்கும்.

*தொழில்*
நீதித்துறை.. பஞ்சாயத்து...
மதங்களுக்கு எதிரானவைகள்...
பூமிக்கு கீழ் உள்ள கனிமங்கள்,
விண்வெளி ஆராய்ச்சி
அறிவியல் ஆய்வு....
அழுக்கான தொழில்கள்...
மனநலம்.... ராணுவம்....
உடனடியாக அழியும் பொருள் தயாரிப்பு
போன்ற துறைகளில் மிகவும் பெரிய
வெற்றியாளர் ஆவார்.

*அதிர்ஷ்ட குறிப்பு*
நேர்மையும் நாணயமும் உடையவர்களாக
இருப்பது மிகவும் முக்கியமாகும்.
வெளிர் நீளமும், கனக புச்பராகமும்,
எமிதிஸ்ட் ரத்தினமும் அதிர்ஷ்டம் அளிக்கும்.
வேங்கடாசலபதி... தக்சிணாமூர்த்தி
இவர்களே அதிர்ஷ்ட தெய்வங்கள் ஆகும்.

*பெயர் குறிப்பு*
8-3 காம்பினேசன் நபர்கள்
4….6….8…. இவற்றில் பெயர்
வைப்பதை தவிர்க்கவும்.
அப்படி உள்ளவர்கள் விதியின் கைப்பாவையாக
மாறி விடுகிறார்கள்.

மேலும் சில தகவல்களுக்கு
astronames.blogspot.in
7667745633

7-3 காம்பினேசன்

*எண்கணிதம்- 7-3*
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண் 
7..16..25 ஆக இருந்து
விதி எண்ணாக
3 வரும் நண்பர்களே
நீங்கள் 7-3 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
(உங்கள் தேதி மாதம் வருடம்
இவற்றை கூட்டி
அதனை ஒரு இலக்கமாக
கூட்டி பார்க்கும் பொது வரும் எண்
விதிஎண் ஆகும்.)

*குணம்*
பணம் என்னடா பணம் என
பாடும் இவர்கள் நல்ல அறிவும்
கலைகளில் தேர்ச்சியும் பெற்றவர்கள்
இவர்கள் உள்ள இடங்களில்
நிறைய பணம் புழக்கம்
இருப்பது இவர்களின்
உயர்வுக்கு உரமாகும்.
நிதி நிர்வாகம் தரகு
இவற்றிலும் ஈடுபாடு உண்டு.
வேதாந்தத்தில் ஈடுபட்டு
கடவுளை அனுபவிப்பார்கள்.
இல்லறம் சிறப்பாக இருக்காது.

*தொழில்*
7-3 நபர்கள்
நடிப்பு நடனம்
கொடுக்கல் வாங்கல்
தரகு சம்பந்தமானவைகள்
மூலிகை மருத்துவம்...
மருந்து விற்பனை
கெமிகல்ஸ்
உணவுதுறை
ஆன்மீகம் ஆராய்ச்சி
இது போன்ற துறைகளை
தேர்வு செய்யும் பொது நல்ல
புகழ் பெறுவார்கள்.

*அதிர்ஷ்ட குறிப்பு*
சித்தர்களின் ஜீவசமாதி தரிசனம்
நல்ல மன நிலையினை தரும்.
மூன்ஸ்டோன் அல்லது வைடூரியம்
கனகபுஷ்பராகம் அணிவது
நல்ல அதிர்ஷ்ட வாய்ப்புகளை
உண்டாக்கும். தட்சிணாமூர்த்தி,
விநாயகர் இவர்களது வழிபாட்டு கடவுளாகும்.

*பெயர் குறிப்பு*
7-3 நண்பர்கள்
6.... 9 ல் பெயர் வைக்க வேண்டாம்
தங்களின்
பெயரை சரியாக
வைப்பதன் மூலம்
தங்களுக்கான சரியான முன்னேற்றம் அடைவார்கள்.

மேலும் சில தகவல்களுக்கு
astronames.blogspot.in
7667745633