9, 18, 27 தேதிகளில் பிறந்த நேயர்களே
துணிவும் பணிவும் கொண்ட வெற்றி வீரரான உங்களுக்கு, எதுவெல்லாம்
தேவையோ அதுவெல்லாம் கிடைக்கும். மன மகிழ்வுக்கு அளவே இல்லை. சரித்திரம் போன்றது
இந்த 2016ம் ஆண்டு. பொருளாதார நிலை மிகவும் உயர்வு பெரும். பூர்வீகச் சொத்துக்கள்,
வாகன விற்பனை, நிலத்தால் பணம் என்று வந்து கொண்டே இருக்கும். மங்கள காரியங்கள்
மனதுக்கு பிடித்ததுபோல அமையப்பெறும். குழந்தை பாக்கியம் கிட்டும். பெண்கள்
கணவருடன் இணக்கமாக நடந்து நற்பெயர் பெறுவார்கள். தேவைகளை பூர்த்தி செய்து
மகிழ்வார்கள். பிறந்த வீட்டு சொத்துக்களும் உண்டு. மாணவர்கள் மதிப்பெண்களை
பெறுவதில் மும்முரம் காட்டி அனைவருடைய பாராட்டுதல்களையும் பெறுவார்கள்.
உடல் நிலையுடன், மனதும் மகிழ்வாக
இருக்கும். வாகனம், ரியல் எஸ்டேட், உணவகங்கள், உற்பத்தி, ஏற்றுமதி
இறக்குமதி செய்வோர் உயர் நிலையைப் பெறுவார்கள். வியாபாரிகளின் நீண்ட கால
திட்டங்கள் நிறைவு பெற்று மனதில் மிகுந்த மகிழ்ச்சியை அளித்திடும். பணியாளர்கள்
தங்கள் பதவி உயர்வு, கேட்ட இட மாறுதல், விரும்பிய கடன்கள், வாகனம் எல்லாம்
பெற்று மகிழ்வார்கள்.
அரசியல்வாதிகளுக்க பதவிகள் வந்து மகிழ்வூட்டும். பயணம்
சிறப்பளிக்கும். பொருளாதாரம் பன்மடங்கு உயரும்.
கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களை
பெற்று உயர்வு பெறுவார்கள். நினைத்தபடி பண பலன் பெறலாம். பாராட்டும் உண்டு. விவசாயிகள்
புதுமை முறையில் பயிர் விளைச்சல் செய்து, வியாபார யுக்தியுடன் செயல்பட்டு பணத்தை
குவிப்பார்கள்.
No comments:
Post a Comment