8, 17, 26 தேதிகளில் பிறந்த நேயர்களே
கடமை வீரராக வலம் வரும்
நீங்கள் இந்த 2016ம் ஆண்டு பொறுமையுடன் நிதானமும் கொண்டு நடப்பது மிக அவசியம்.
யாருக்கும் எந்த வகையிலும் ஜாமீன் ஏற்க வேண்டாம். சற்று தன்னை அடக்கியாள முயற்சி
செய்யுங்கள். கடன் சுமைகள் அதிகரிக்கலாம். இருப்பதைக் கொண்டு செலவுகளை
கட்டுப்படுத்தி வாழ பழகுவது நல்லது. இதற்கு திட்டமிடல் ஒன்றே அருமருந்து. ஏதேனும்
பிரச்னைகளை எதிர்கொள்ள நேரலாம்.
திருமண காரியங்களில் தடை பிரிவு உண்டாக வாய்ப்பு
அதிகம். பொறுமையே வெற்றிக்கு வழி. பெண்கள் தங்கள் செல்வாக்கை தாமே
குறைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளை தவிர்க்கவும். மாணவர்கள் மதிப்பெண் குறைகளை
ஏற்படுத்தி மன உளைச்சல் பெறுவார்கள். தீவிர முயற்சி தேவை. உடல்நிலையிலும் ஏதேனும் ஒருவகையில் உஷ்ண,
நீர் சார்ந்த உறுப்புகள் குழப்பத்தை ஏற்படுத்தும். பத்திய முறைகளும், உணவு கட்டுப்பாடும் அவசியம்.
சொந்த தொழில்
செய்பவர்கள் தொழிலாளர்களுடன் பிரச்னைகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம். புதிய
நண்பர்களால் ஏமாற்றத்துக்கு உள்ளாகலாம். அனைத்து நபர்களும் சட்டத்துக்கு உட்பட்டு
நடப்பது நலம். சிக்கல் வரும் கவனம். அன்புடன் நடந்து கொள்ளுங்கள். பணியில் கெடுபிடி கூடும். ஏச்சு பேச்சு, பிரச்னை என்று வந்துகொண்டே இருக்கும். அரசியல்வாதிகள் தன்னிச்சைப்படி
செயல்பட்டு தண்டனைக்கு உள்ளாகலாம். கலைத்துறையினர் உள்ளதை வைத்து நல்லதை செய்து
கொள்ளுங்கள். கவனம். விவசாயிகள் செயல்பாடு குறையும். ஆள், பணம் பற்றாக்குறையால்
விளைச்சல் பாதிக்கும்.
No comments:
Post a Comment