3, 12, 21, 30 தேதிகளில் பிறந்த நேயர்களே
பாரம்பரியத்தினை கொண்டாடும் கட்டுப்பாடான குணமுடைய உங்களுக்கு 2016 ஆண்டில்
நினைத்த உயர்வுகளை பெறுவீர்கள். பிரபலமானவர்கள் நட்பு அதிகமான ஆதாயத்தை
தேடித்தரும். கைநிறைந்த வருமானம், திட்டங்கள் எல்லாம் நிறைவேறும், கொடுத்து வைத்தவைகள் அனைத்தும் திரும்ப வரும். மகிழ்வான நிலைதான். பெற்றோர்
ஆசிகளுடன் தாங்கள் நினைத்தவர்களை கைபிடிப்பார்கள். புதிய வாகனம், வீடு உண்டாகும். பலம் கூடும். நலம் கூடும். மகிழ்ச்சி அதிரிக்கும். பெண்கள் கணவரால் புகழப்படுவார்கள்.
புகுந்த வீட்டில் புகழும் பாராட்டும் பெறுவார்கள். குழந்தைகளால் குதூகலம் உண்டு.
புதிதாக எண்ணம்போல் நகை வாங்கி குவிப்பார்கள். மாணவர்கள் உழைப்பு மாபெரும்
வெற்றிகளைபெற உதவிடும். பெற்றோர், ஆசிரிர்களுக்கு
பெருமை சேர்ப்பாரகள்.
சொந்த தொழில் செய்பவர்கள் வெளிநாட்டு
மாநில ஒப்பந்தங்கள் மூலம் வெகுவான வருமானத்தை குவிப்பார்கள். அரசாங்க ஆதரவும்
உண்டு. தொழிலாளர்கள் ஒற்றுமையும் மகிழ்வு தரும் வகையில் அமையும்.
உணவகங்கள், ஜவுளி, பலசரக்கு, ஸ்டேஷனரி வியாபாரிகள் நினைத்ததைவிட அதிக வருமானம் பெறலாம். பணியாளர்களுக்கு
பண பலன்கள் அதிகம் கிடைத்து மகிழ்விக்கும். பதவி உயர்வு தரும்.
கலைத்துறையினருக்கு
அயல்தேச வரவேற்பு புகழ் தரும் வகையில் அமைந்திடும். அரசாங்க பாராட்டும் உண்டு. விவசாயிகளின்
நீண்டகால எண்ணங்கள் ஈடேறும். அருகில் உள்ள நிலங்களை வாங்கி மகிழ்வார்கள்.
விளைச்சல் பெருகும்
No comments:
Post a Comment