ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-17
மேசம்
மேசம் ராசியினருக்கு ராசிக்கு 11 ல் லாபஸ்தானத்தில் கேது மாறுகிறார்.. ராகு 5ஆம் இடத்துக்கு செல்கிறார்..பாவகிரகங்கள் லாபஸ்தானத்துக்கு வருவது நல்லது.அதனால் லாபம் பெருகும்.சேமிப்பு உயரும்...கும்பத்துக்கு கேது செல்வதால் மேசம் ராசியினர் நினைத்த காரியங்கள் அனைத்தும் தடையின்றி நிறைவேறும்.5அம் இடத்துக்கு ராகு வருவதால் சிம்மத்தில் இருக்கும் குருவால் ராகு குரு சேர்க்கையால் பூர்வீகத்துக்கும் குழந்தைகளுக்கும் வந்த சோதனைகள் விலகும்...2016 ஜூன் மாதம் குருப்பெயர்ச்சிக்கு பின்னர் பூர்வீகத்தில் சில பிரச்சினைகள் வரலாம் குழந்தைகளுக்கு சின்ன சின்ன மருத்துவ செலவுகள் வரலாம்..இதுவரை தொழிலில் இருந்த மந்தம் விலகும் தொழில் முன்னேற்றம் உண்டாகும் வருமானம் உயரும்.அஷ்டம சனி நம்மை கடுமையாக படுத்தி வந்தாலும் கேது தொழில் ஸ்தானத்தை விட்டு விலகி லாபத்துக்கு வருவது நிச்சயம் நன்மையை தரும்.அருகில் இருக்கும் ராகு கேது கோயில் சென்று வரவும்..
ரிசபம்
ரிசப ராசினருக்கு ராகு ராசிக்கு நான்கில் வருகிறார்..கேது 10 ஆம் இடமாகிய தொழில் ஸ்தானத்துக்கு வருகிறார்...இது சுமாரான பலன்களையே தரும் .சுக ஸ்தானத்துக்கு ராகு வரும்போது சொத்துக்கள் சார்ந்த சிக்கல்கள் உண்டாக்கும் தாய்க்கு உடல்நிலை பாதிக்கும்.மருத்துவ செலவுகள் ,இட மாற்றம்,அலைச்சல் ,உண்டாகும் தொழிலுக்கு கேது வருவதால் பிறக்கும்போது கும்ப ராசியில் செவ்வாய் இருப்பவர்கள் தொழில் கடுமையாக பாதிக்கும்.தொழில் கூட்டாக இருந்தால் கவனமாக இருக்கவும் பார்ட்னரால் ஏமாற்றம் உண்டாகலாம்... சொத்துக்கள் சம்பந்தமான டாக்குமெண்டுகள் சரியா இருக்கான்னு பார்த்துக்குங்க..உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்க...திருப்பதி சென்று வந்தால் நல்லது
மிதுனம்
மிதுனம் ராசிக்கு ராகு மூன்றாம் இடத்துக்கு வருகிறார் ராகுவை போல கொடுப்பார் இல்லை என்று சொல்கிறோம் அது இவர்களுக்கு இப்போது பொருந்தும்.ராகு மூன்றில் வந்தால் இரட்டிப்பு லாபம் உண்டு.வருமானம் ,சேமிப்பு பெருகும் தொழில் முன்னேற்றம் உண்டாகும்..நல்ல பேச்சு திறமை கூடும்.பெரிய மனிதர்களின் தொடர்பு உண்டாகும்.நினைத்த காரியம் தடையின்றி நடைபெறும்..கேது 9ஆம் இடத்தில் மாறுவதால் தந்தைக்கும் தந்தை வழி உறவுக்கும் பாதிப்பான காலம்.வெளியூர்,வெளிநாடுகளில் வசிப்போருக்கு முன்னேற்றமான காலமாக இருக்கும்.ஸ்ரீரங்கம் ஒருமுறை சென்று வரலாம்
கடகம்
உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்துக்கு ராகு வருகிறார் கேது எட்டாம் இடத்துக்கு வருகிறார் .இரண்டில் ராகு தன லாபத்தை தரும்.திடீர் வருமானம் அதிர்ஷ்டத்தை தரும் அடுத்த குருப்பெயர்ச்சி வரை நல்ல யொகமுண்டு.பெரிய கடன் பிரச்சினைகள் சட்டென முடிக்கும் ஆற்றல் கொண்டது இந்த தன ராகு.கேது எட்டாம் இடத்துக்கு வருவதால் விஷக்கடி ஆபத்து உண்டு.விவசாயம் செய்வோர் கவனமுடன் செயல்படவும்.ராகு இரண்டுக்கு வருவதால் பேச்சுக்கு மதிப்பு,மரியதை அதிகரிக்கும்..தொழிலில் புதிய ஏற்றங்களும்,மாற்றங்களும் உண்டாக்கும்.. திருப்பதி சென்று வரலாம்
சிம்மம்
சிம்மம் ராசியினருக்கு ராசியிலியே ராகு வருகிறார்...கேது ஏழாம் இடத்துக்கு வருகிறார் .போனமுறை தன ஸ்தானம்,குடும்ப ஸ்தானத்தில் ராகு அமர்ந்து கடன் தொல்லை ,குடும்பத்தில் நிம்மதி யின்மை உண்டாக்கினார் இப்போது ராகு தன ஸ்தானத்தை விட்டு நகர்ந்ததே பெரிய யோகம்தான்.அந்த அடிப்படையில் இந்த ராகு கேது பெயர்ச்சி நல்லதே செய்யும்.
இருந்தாலும்,இது நாகதோசம் அடிப்படையில் ராசிப்படி அமைகிறது .இது சுமாரான பலன்களையே தரும் உங்கள் ராசியில் சந்திரனுடன் ராகு சேர்வதல் சந்திர கிரகணம் போலத்தான்.மனதில் குழப்பம்,சோர்வு,கவலை அதிகரிக்க செய்யும் என்பதால் வாரம் ஒருமுறை அருகில் இருக்கும் கோயிலுக்கு சென்று அரைமணி நேரம் அமைதியாக அம்ர்ந்து விட்டு வாருங்கள்..கடன் தொல்லை தீரும்,.குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாக்கும்.இரவு பயணங்களை தவிர்க்கவும்.
இருந்தாலும்,இது நாகதோசம் அடிப்படையில் ராசிப்படி அமைகிறது .இது சுமாரான பலன்களையே தரும் உங்கள் ராசியில் சந்திரனுடன் ராகு சேர்வதல் சந்திர கிரகணம் போலத்தான்.மனதில் குழப்பம்,சோர்வு,கவலை அதிகரிக்க செய்யும் என்பதால் வாரம் ஒருமுறை அருகில் இருக்கும் கோயிலுக்கு சென்று அரைமணி நேரம் அமைதியாக அம்ர்ந்து விட்டு வாருங்கள்..கடன் தொல்லை தீரும்,.குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாக்கும்.இரவு பயணங்களை தவிர்க்கவும்.
கன்னி
உங்கள் ராசிக்கு இதுவரை ஜென்மத்தில் இருந்து வந்த ராகு இனி 12ஆம் இடமாகிய விரய ஸ்தானத்துக்கு செல்கிறார் இனி எல்லாம் ஜெயமே.ஏழரை சனி முற்றிலும் விலகி விட்டது ஒரே எதிரி ராகுவும் விலகிவிட்டார் ..அதுவும் மறைந்து கெட்டு விட்டதால் இனி மகிழ்ச்சியும் சந்தோசமும் பெருகும்.நினைத்த ஆசைப்பட்ட காரியங்கள் தடையின்றி நடைபெறும்.வருமானம் அதிகரிக்கும் சேமிப்பு உயரும்.உறவுகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். விலகி இருந்த நட்பு,உறவுகள் ,இனி பகை மறந்து ஒன்று சேர்வர். 6ல் கேது வருவதால் எதிரிகள் அழிவர்.எதிர்ப்புகள் மறையும்.கடன் தொல்லைகள் தீரும்.நோய் தீரும்.சந்தோசமான காலம்.
துலாம்
உங்கள் ராசிக்கு ராகு லாபத்துக்கு வருகிறார் இதுவரை ராசிக்கு 12ல் இருந்து ராகு உங்களை அலைக்கழித்தார் இப்போது ராகு லாபத்துக்கு வருவதால் இனி சேமிப்பு உண்டாகும் வருமானம் இரட்டிப்பாகும்..உங்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி மிக யோகமாக அதிர்ஷ்டமாக அமைகிறது...5ல் கேது குழந்தைகளின் உடல்நலனில் கவனம் தேவை பூர்வீக சொத்து சார்ந்த பிரச்சினைகள் வரும்.சகோதரனால் சங்கடம் உண்டாகும்.. 3ல் ராகு இளைய சகோதரனுக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கும்.வருமானம் பல வழிகளிலும் வந்து சேரும்.
விருச்சிகம்
ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்திலும், கேது நான்காம் இடத்துக்கும் வருகிறார்கள் .ராசிக்கு தொழில் ஸ்தானத்து வரும் ராகு தொழிலில் பெரிய முன்னேற்றம் தருவார் ...தொழில் ஆதாயம் பெரிய மனிதர்கள் தொடர்பு உண்டாகும்...தாத்தா,பாட்டிக்கு ஆகாத காலம் .பிரிவினை இழப்பு உண்டாக்கும்.கேது நான்கில் வருவதால் உடல்நலன் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.ஏற்கனவே ஜென்ம சனி உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு மன உளைச்சலை உண்டாக்கி கொண்டிருக்கும் வேளையில் நாலில் கேது ,மருத்துவ செலவுகளை தரும்.இடுப்பு,கைகால் வலியை தரும் அலைச்சலை உண்டாக்கும்..இது சுமாரான பலன்களையே தரும்.திருச்செந்தூர் சென்று முருகனை தரிசித்து வரவும்..
தனுசு
ராசிக்கு 9ஆம் இடத்தில் ராகு வருகிறார் கேது ராசிக்கு 3ல் மறைகிறார்.வெளிநாடு வெளிமாநில நண்பர்களின் தொடர்பு உண்டாகும் பெரிய மனிதர்கள் ஆதரவால் பெரும் சாதனைகள் செய்வீர்கள்..நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும்,தந்தைக்கு மருத்துவ செலவுகள் உண்டாகும்.. இளைய சகோதரனுக்கு சில மருத்துவ செலவுகள் ,மாமனாருக்கு பாதிப்பு உண்டு.9ல் ராகு அதிர்ஷ்டத்தை உண்டாக்கும் ஏழரை சனி நடந்தாலும் குரு பலன் இருப்பதால் பெரிதாக பாதிக்காது குலதெய்வம் கோயில் சென்று வரவும்.
மகரம்
ராசிக்கு இரண்டில் கேது வருகிறார் ..எட்டில் ராகு வருகிறார் ராகு எட்டாம் இடம் ஆயுள் ஸ்தானத்துக்கு வருகிறார் என பீதிய்டைய வேண்டாம்..எட்டு மறைவு ஸ்தானம் என்பதால் அதிர்ஷ்டம் உண்டாகும்..ராகு திசை நடப்போருக்கு மட்டும் எட்டில் ராகுசோதனைகளை தரும் காளஹஸ்தி சென்று வழிபட்டு வருவது அவசியம்.இரண்டில் கேது இருப்பதால் குடும்பத்தில் வீண் வாக்குவாதம் உண்டாக்கலாம் ...எட்டில் ராகு அதிக அலைச்சலை தரும்.மனக்குழப்பம்,பயம் தந்தாலும் திடீர் அதிர்ஷ்டமும் உண்டு எதிரிகள் தொல்லை நீங்கும் கடன் பாதிப்புகள் விலகும்.
கும்பம்
ராசிக்கு ஏழில் ராகு வருகிறார் ஏழாம் இடம் வாழ்க்கை துணையை குறிக்கும் கணவன் /அல்லது மனைவி ஸ்தானத்துக்கு ராகு வருவதால் அவர்கள் உடல் ஆரோக்கியம் சற்று பாதிக்கப்படலாம் ஆனால் நண்பர்களால் நிறைய ஆதாயம் உண்டு.திருமனம் ஆகாதவர்களுக்கு திருமனம் கூடி வரும்.கடன் தொல்லைகள் தீரும் வருமானம் அதிகரிக்கும்.சேமிப்பு உயரும்..கேது ஜென்மத்துக்கு வருவதால் விண் பயம் ,மன சோர்வு காணப்படும் விண் புலம்பல்கள் பலன் தராது.தாழ்வு மனப்பான்மை அதிகரிக்கும்.உற்சாகமாக இருங்கள் நல்லதே நடக்கும்.
மீனம்
ராசிக்கு இதுவரை ஜென்மத்தில் இருந்து சோதனை மேல் சோதனை கொடுத்து வந்த கேது இனி ராசிக்கு 12ல் மறைகிறார் இனி நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும் உங்கள் துன்பங்கள் தீரும் பனக்கஷ்டம் இனி மெல்ல மெல்ல தீர்ந்து இயல்புக்கு வரும்.தொழிலில் இருந்த மந்தம் விலகி சுறுசுறுப்பு உண்டாகும்..ராகு ராசிக்கு 6ல் வருவதால் வம்பு,வழக்குகள் இனி தீரும்.கடன் முழுதும் அடைபடும்.சொத்துக்கள் ,வாங்கும் யோகமும் வீடு கட்டும் யோகமும் வந்து சேரும் திருமண முயற்சிகள் தடங்கலின்றி நடைபெறும்..எதிரிகள் தொல்லை இனி இருக்காது பகையாகி விலகியவர் மீண்டும் ஒன்று சேர்வர்.
No comments:
Post a Comment