31 December 2015

2016ம் ஆண்டு பலன்கள் - 7 16 25

7, 16, 25 தேதிகளில் பிறந்த நேயர்களே

எதற்கும் அலட்டிக்கொள்ளாத குணமும் ஞானமும் கொண்ட உங்களுக்கு இந்த 2016ம் ஆண்டு பல புதிய நட்புக்கள் மூலம் புகழ் பெற வைக்கும். நீண்டகாலமாக தடைபட்ட திட்டங்கள் எல்லாம் நிறைவேற்றம் பெறும். வெளிநாட்டு தொடர்புகள் மகிழ்வாக அமைந்திடும். கரைந்த கையிருப்புகள் மீண்டும் வந்து சேரும். இதுவரை எடுத்துக்கொண்ட எல்லா பணிகள் மூலமும் வருமானம் பெருகும். மங்கள காரியங்கள் மனதுக்கு பிடித்ததுபோல் அமைந்து வரும். பெண்கள் கணவர் இணக்கத்தை பெறுவார்கள். குழந்தைகளால் ஏற்படும் கல்விச்செலவு அதிகரிக்கும். நல்லதே நடக்கும். மாணவர்கள் திட்டமிட்டு செயல்பட்டு மதிப்பெண்களை அதிகரிக்கும் முயற்சிகளில் வெற்றி பெறுவார்கள்.


வெளி வட்டாரப் பழக்கங்களை அதிகரிக்கும். உடல்நிலை நல்ல முன்னேற்றம் பெறும். மன இறுக்கங்கள் விலகும். எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல்ஸ், ரியல் எஸ்டேட், நாடுவிட்டு நாடு ஒப்பந்தங்கள் செய்யும் தொழில் அதிபர்கள் மிகப்பெரிய ஏற்றத்தை பெறுவார்கள். வியாபாரிகள் விற்பனை அதிகரிக்கும். எதை செய்ய வேண்டும் என்று விரும்பினார்களோ அதை செய்து முடித்தே தீருவார்கள். வருமானமும் பல மடங்கு உண்டு. பணியாளர்கள் தங்கு தடையின்றி பணியை செய்து தலைமையிடம் நற்பெயர் பெறுவார்கள். நினைத்ததுபோல் நடத்திக்கொள்வார்கள். 

கேட்ட கடன் தொகைகளும் வரும். அரசியல்வாதிகள், அந்த பகுதி மக்களால் போற்றப்படுவார்கள். தங்களை உயர்த்திக்கொள்ள பல புதிய யுக்திகளை கையாண்டு வெற்றியும் பெறுவார்கள். கலைஞர்கள் எதிர்பாராத ஏற்றத்தை பெறுவார்கள். வெளிநாடுகளுக்குச் சென்று பொருளாதாரத்தை உயர்த்திக்கொள்வார்கள். விவசாயிகள் புதிய உழவு கருவிகள், கால்நடைகள் வாங்கி மகிழ்வதுடன் புதுமையாக விவசாயம் செய்து புகழ் பெறுவார்கள். 

No comments:

Post a Comment