பொது பலன்கள்
இந்த ஆண்டு சிவசத்தி யோகம் பெற்று பிறக்கிறது. இதனால் பெண்களுக்கான
புகழ் கூடும். உலக அளவில் பெண்களுக்கான சமத்துவம் குறித்து அதிகம் பேசப்படும்.
இந்தியாவை பொறுத்த மட்டில் அரசியல்வாதிகளுக்கு
அதிர்ஷ்டகரமான ஆண்டு. அதிகப்படியான பேச்சினால் பிரச்சினைகள் உண்டாகும்.
ரியல்
எஸ்டேட் தொழில் மிக வெற்றிகரமாக அமைந்திடும். அறிவியல் கலைத்துறை படித்தவர்களுக்கு
உன்னதமான பதவிகள் வந்து சேரும். சென்ற வருடம் கடுமையான சிரமத்தில் இருந்தவர்கள்
அனைவரும் அதிலிருந்து விடுதலை பெறுவார்கள். குறிப்பாக 1, 7, எண்காரார்கள். நீண்டநாள்
பதவியை எதிர்பார்த்து காத்திருந்தவாகளுக்கு உடனடியாக உயர்பதவிகள் வந்து
மகிழ்வூட்டும். சில நாடுகளில் திடீர் புரட்சிகள்
ஏற்படும்.
பித்தம், வாதம் சம்பந்தமான நோய்கள் வரலாம். பொதுவாக பலருக்கு ஆண் தன்மை குறையலாம். கட்டுப்பாடுடன் உள்ள உணவுகளால்
நன்மை கிடைத்திடும். உடல் நிலையில் உஷ்ணம் அதிகரிக்கலாம். ஆபரணங்கள் அதிகம்
சேரும். காடுகள் அதிகரிக்கும். தண்ணீர் பற்றாக்குறையால் பல தேசங்கள் அவதியுறும்.
நெருப்புகளால் பல தொழிற்சாலைகள் அவதிக்குள்ளாகும். மிகுந்த பாதுகாப்பு எச்சரிக்கை
அவசியம். அரசியல்வாதிகள் நல்ல முன்னேற்றம் பெறுவார்கள்.
No comments:
Post a Comment