31 December 2015

2016ம் ஆண்டு பலன்கள் - 6 15 24

6, 15, 24 தேதிகளில் பிறந்த நேயர்களே

வாழ்க்கையினை கொண்டாடும் கலா ரசிகர்களே இந்த 2016ம் வருடம் சென்ற வருடத்தை விட பன்மடங்கு நன்மையை தரும். திடீர் அறிமுகங்கள் மூலம் ஆதாயம்பூர்வீகச் சொத்துக்கள் மூலம் வருவாய் என்று நன்மைகள் குவிந்திடும்.  பொருளாதார ஏற்றம் உண்டு.
சுபகாரியங்களில் இருந்த முட்டுக்கட்டைகள் விலகும். மனம் போல மணவாழ்க்கை அமையும். நீண்ட காலமாக கிடைக்காத மழலைப்பேறும் உண்டு. வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும். பெண்கள் புதுமைப் பொருட்களை வாங்கி மகிழ்வார்கள். கணவருடன் ஏற்பட்ட மனத்தாபங்கள் அகலும். மாணவர்கள் சாதனைகள் பல புரிந்து கல்வி நிறுவனத்துக்கே பெருமை தேடித்தருவார்கள்.


பண வரவுகள் வந்துகொண்டே இருக்கும். விற்பனை அதிகரிக்கும். சாலையோர வியாபாரிகள் கூட எதிர்பார்த்ததைக் காட்டிலும் அதிகமான வருவாயை பெறலாம். மேலும் உணவுப் பொருட்கள் மூலமும் ஆதாயத்தை குவிக்கலாம். வலிமையும், பலமும் மனதில் ஏகப்பட்ட மகிழ்ச்சியை அள்ளி வழங்கும். சொந்த தொழில் செய்வோர் அரசாங்க ஆதரவை முழுமையாகப் பெறலாம். அயல்நாடுகளில் தங்கள் முத்திரையை பதிக்கலாம். பணியில் இருப்பவர்கள் சுதந்திரமான போக்குடன் செயல்பட, அதிகாரிகள் நட்பு அதிகரிக்கும். 

அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவிகள் வந்து சேரும். தொண்டர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். ஆதாயம் குவியும்.

கலைஞர்கள் புது ஒப்பந்தங்கள் பெறுவர்கள். திறமைகளை வெளிப்பாடு செய்து பலராலும் போற்றப்படுவார்கள். விவசாயிகள் பணப்பயிர் மூலம் வருமானத்தை குவிப்பார்கள். அருகில் உள்ள நிலங்களையும் வாங்குவார்கள். 

No comments:

Post a Comment