31 December 2015

2016ம் ஆண்டு பலன்கள் - 2 11 20 29

2, 11, 20, 29 தேதிகளில் பிறந்த நேயர்களே

துணிச்சலை துணை கொண்டு போராடும் குணம் கொண்ட உங்களுக்கு 2016 ஆண்டு சற்று கூடுதல் உழைப்பை ஏற்படுத்தி ஏற்றம் பெற வைக்கும். ஏற்கனவே செய்து வைத்த முயற்சிகளுக்கு ஏற்படும் பலன்களைப் பெற்று உயர்வு பெறவேண்டும். சுபகாரியங்கள் மனதுக்கு இதமாக அமைந்திடும். இருப்பினும் இதனால் ஏற்படும் மன உளைச்சலை தவிர்க்க இயலாது.
பெண்களின் திட்டங்களில் அதிக தடுமாற்றம் ஏற்படலாம். கணவருடன் இணக்கமற்ற நிலை ஏற்படுமாதலால் விட்டுக்கொடுத்து செல்லும் பக்குவம் வேண்டும். குழந்தைகளாலும் கூடுதல் செலவுகள் ஏற்படும். மாணவர்கள் படிப்பு, விளையாட்டு இரு துறைகளிலும் அதிக ஆர்வத்துடன் செயல்பட்டு உயர்வு பெறவேண்டும்.


அவசியம் உணவு கட்டுப்பாடு தேவை. உஷ்ணத்தை ஏற்படுத்தும் உணவுகளை தவிர்க்கவும். சொந்த தொழில் செய்பவர்கள் ஏற்கனவே போட்டு வைத்த திட்டங்கள் நடைமுறைக்கு கொண்டு வர முயற்சிப்பது நலம். புதிதாக ஏதேனும் இருந்தால் நன்கு சிந்தித்து செயல்படவும். கடன்கள் வாங்குவதை தவிர்க்கவும். பணியாளர்கள் அதிகாரிகளிடம் மதிப்பும், மரியாதைகளுடன் நடந்து கொள்ளவும். பால் பொருள் குளிர்பான வியாபாரம் செய்வோர் லாபம் அடைவர்.


அரசியல்வாதிகள், தலைமையிடம் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். யாரிடமும் வாக்குறுதிகள் அளிக்க வேண்டாம். கலைத் துறையினர்  அதிக உழைப்பினால் முன்னேறுவார். வாய்ப்புகள் தானாக வராது என்பதை உணர்ந்து செயல்படுங்கள். விவசாயிகள் அதிகமான கடன் சுமைகளால் சற்று சோர்வு அடைவார்கள். கால்நடைகளாலும் செலவுகள் ஏற்படும். திட்டமிட்டு செயல்படவும்.

No comments:

Post a Comment