31 December 2015

2016ம் ஆண்டு பலன்கள் - 5 14 23

5, 14, 23 தேதிகளில் பிறந்த நேயர்களே

எதற்கும் கலங்காத மனோதிடம் கொண்ட நல்ல பண்பு கொண்ட உங்களுக்கு 2016ம் வருடம் வெற்றிகளை வீட்டுக்கு கொண்டு வரும்.  நிறைவான வருமானம், எடுத்த காரியங்களில் எல்லாம் முன்னேற்றம் வழிகாட்டும். சுபகாரியங்கள் தங்கு தடையின்றி படிப்படியாக நடந்தேறும். காதலர்களுக்கு வெற்றி உறுதியாகும். உடல்நிலை வெகு நிறைவாக செயல்படும். பல வியாதிகள் தங்களிடம் இருந்து ஓடிப்போகும்.  இரும்பு, கெமிக்கல், வாகன உற்பத்தி, கரும்பாலைகள், மருந்து உற்பத்தி, கட்டடம் கட்டுவது போன்ற துறையினர் அதிகமான வருமானத்தை அடைவார்கள்.
பெண்கள் பிறந்த வீட்டுக்கு பெருமை சேர்ப்பார்கள். கணவர் அன்பை பெறுவாகள். குழந்தைகளால் குதூகலம் உண்டு. மாணவர்கள் மன நிறைவுடன் செயல்பட்டு கல்வியில் பெரிய வெற்றி பெறுவார்கள். விளையாட்டிலும் வீரம் காட்டுவார்கள்.

குடும்பத்தினருடன் குதூகலப் பயணம் செய்வார்கள். வியாபாரிகள் வெளிநாட்டு பொருட்களை விற்பனைக்கு விடுப்பதன் மூலம் அதிக ஆதாயம் பெறுவார்கள். சக ஊழியர்களிடம் மதிப்பும் மரியாதையும் நிச்சயம் உண்டு. பணியாளர்கள் கேட்ட இடத்துக்கு மாறுதல் பெறலாம். 

அரசியல்வாதிகளுக்கு அரசியலில் ஏற்படும் மாற்றங்கள் தங்களுக்கு சாதகமாக அமைந்து, எதிர்பாராத ஏற்றங்களை பெற்று மகிழ்வார்.

கலைஞர்கள் பாராட்டுப் பெறுவார்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். விவசாயிகள் அதிக விளைச்சல் பெறுவார்கள். உழவு கருவிகள் வாங்குவார்கள். விருப்பமான நிலங்கள் வாங்குவார்கள். புதிய வீடும் வாங்கலாம். 

No comments:

Post a Comment