08 March 2023

பிருகு நந்தி நாடி & சக்கர பத்ததி

 

பிருகு நந்தி நாடி ஜோதிடம்

கணிதங்கள் இல்லாத துல்லிய பலன் கூறும் எளிய ஜோதிட முறையே பிருகு நந்தி நாடி
பிருகு நந்தி நாடி முறையில் ஜாதகத்தை ஆய்வு செய்யும்போது இலக்கினம் என்ற ஒன்றை கருத்தில் கொள்வது இல்லை. பழைய ஜோதிட(பராசரர்) முறையானது பாவகங்களை எடுத்து, பாவகாரகங்களை வைத்து, தசா புத்தியை மையமாக வைத்துப் பலன் சொல்லப்படுகிறது. பிருகு நந்தி நாடி முறையில், பாவகாரகங்களை விடுத்து பிரதானமாக கிரக காரகங்களை வைத்துப் பலன் கூறப்படுகிறது.
கோள்களின் காரகத்துவங்களைக் கொண்டு பலன்கள் அறியப்படுகின்றன. கோள்களின் சஞ்சாரம் ஒரு ஜாதகரின் வாழ்க்கையில் எப்படி மாறுதல்களை ஏற்படுத்தும் என கூறுகிறது. ஒருவருடைய பிறந்த ஜாதகமானது, அவர் எந்த மாதிரிப் பலன்களை அனுபவிக்கப் பிறந்தவர் எனக் காட்டுகிறது. அந்தப் பலன்களை எப்போது அனுபவிப்பார் என்பதை நாடி முறையில் துல்லியமாக கூற முடியும்.
சில முக்கிய கோட்பாடுகளை சிறப்பாக கூறலாம். குறிப்பாக ராசிக் கட்டத்தில் ஒரு கிரகம் தனித்து இருந்தால், அந்த கிரகமாகப்பட்டது எந்தவிதமான பலனையும் தருவது இல்லை. மாறாக, ஒரு கிரகமானது, வேறு ஒரு கிரகத்துடன் இணைந்து, ஒரு வீட்டில் இருந்தால், அந்த இணைவுக்குத் தக்கபடி நல்ல பலனையோ அல்லது கெட்ட பலனையோ தரும்.
இதுபோன்ற நூற்றுக்கணக்கான ரகசியங்களை ஒழிவு மறைவு இன்றி நமது பத்துமணி நேரத்திற்கும் மேலான பாடங்களில் கற்றுக்கொள்ளுங்கள்.


No comments:

Post a Comment