நட்சத்திரங்களும் தேவதைகளும்
ஜோதிடத்தில் பலன்களை தருவது மூன்று மாபெரும் சக்திகள் ஆகும். இதில், கிரகங்கள் ராசிகள் பற்றியும், ராசிகளின் அடிப்படையில் அமைந்த நட்சத்திரங்கள் பற்றியும் அறிந்துள்ளோம்.
இந்த வழியே, பல்வேறு விரிவான நட்சத்திர பலன்களை பற்றி கூறும் பாடங்களை மனப்பாடம் செய்துசெய்து பல்வேறு குழப்பத்தில் ஆழ்ந்த நபர்கள் உள்ளார்கள்.
இதில், எந்த பிரிவில் நீங்கள் இருந்தாலும் சரி, வேதம் கூறும் நட்சத்திர பலன்களையும் உள்வாங்கிக் கொள்ளும் போதுதான், பலன்களை நிர்ணயிப்பது 100 % துல்லியத்தினை நோக்கி செல்லும்.
ஸ்ரீராம் ஜோதிடாலயம் வழங்கும், வேதம் கூறும் நட்சத்திர பலன்கள் பாடங்கள் பலன்களை பற்றி மட்டுமே கூறப்போவாதில்லை. மாற்றாக, பலன்களை மாணவர்களே நிர்ணயிக்கும் யுக்திகளை மிக விரிவான பாடங்களாக தரவுள்ளோம். (18+ மணி நேர வீடியோ பாடங்கள்)
உதாரணமாக, அசுவினி, மகம், மூலம் மூன்றும் கேதுவின் நட்சத்திரங்கள். ஆனால், இவற்றின் பலன்கள் முற்றிலும் வெவ்வேறாக இருக்கிறது.
அசுவினி மகிழ்ச்சியான ஒன்றாகவும், எளிதில் ஆசைப்படும் குணத்துடனும், அதை அடைய முயற்சி செய்யும். தன்னிடம் நியாயம் இல்லையெனில் எதிர் தரப்புக்கே நன்மை செய்யும் படி செய்யும். இது, மகத்திடம் தனது முயற்சியின் பலனை மட்டுமே நம்பி செயல்படும் குணமாக வெளிப்படுகிறது. கடைசியாக, மூலத்திடம், அடைந்தே தீர்வது எனும் முனைப்பில் அனைத்தினையும் துவம்சம் செய்யும் கோபாவேஷம் குணம் மிகுந்துள்ளதையும் காண்கிறோம்.
இது ஏன் என அறிய ஆவலுடன் உள்ளீரா?
ஆம் எனில்... உங்களுக்கான இந்த ஆன்லைன் வகுப்பறையில் இணையுங்கள்...
இந்த வகுப்பில் கலந்து கொள்வது புத்தம்புதிய அனுபவத்தினையும், உயர்ந்த வழிகாட்டலையும் தரும் என்பது உறுதி. இத்தனை விரிவாக ஜோதிட நட்சத்திரங்களை பற்றி இதற்கு முன்பு அறிந்திருக்க மாட்டீர்கள். நேரடி வகுப்பாக இருந்தால் முழுதாக 5 நாட்கள் இந்த வகுப்பிற்கு தேவைப்படும். இந்த அற்புத வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள இறைவனின் ஆசி அனைவருக்கும் கிடைக்கட்டும்.
No comments:
Post a Comment