ஜோதிடத்தின் புதிய பரிணாமம்
ஜோதிடம் என்பது மூன்று காலங்களையும் படம் பிடித்துக் காட்டும் காலக் கண்ணாடியாகும். ஜெயமினி சூத்திரம் மூலமாக பல்வேறு பலன்களை மிக நுணுக்கமாக அறிய முடியும்.
நமது முன்னோர்களான ஞானிகள் பலவித ஜோதிடமுறைகளை நமக்கு தந்து அருளி உள்ளார்கள். அதில் பராசரர் ஜோதிடத்திற்கு ஒரு வடிவத்தைக் கொடுத்தார். வராகமிகிரர் இன்று நாம் அறிந்துள்ள பாரம்பரிய ஜோதிட முறையை தந்துள்ளார். ஜெயமினி அவர்கள் இவர்களுக்கு அடுத்து வந்தவர் ஆவார். பராசரர் வராகமிஹிரர், கூறிய சூட்சுமங்களை உள்வாங்கி, தனது அற்புத ஞானத்தினால் "ஜெயமினி சூத்திரம்" என்ற புதிய ஜோதிட முறையை உலகுக்கு அறிமுகப்படுத்தினார். பாரம்பரிய முறையே ஜோதிட பலன் கூறும் முறைகளின் தாய் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இவற்றினை கொண்டு புத்தம்புதிய பலன் கூறும் முறைகளை அமைத்து தந்தவர் மகரிஷி ஜெயமினி ஆவார்.
ஜெயமினி சூத்திரக் சிறப்புகளை சொல்லவேண்டுமானல்,
12 வகையான லக்னம் (ஆருடபதம் உபபதம் கோச பதம் என்று...), ஏழு காரகர்கள் (ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு காரக பெயர்கள் அதாவது ஆத்மகாரகர் அமாத்திய காரகர் என...), மிக முக்கியமாக பார்வை பற்றி... ராசிக்கும் பார்வை உண்டு என்ற புதிய நிலையை ஜெயமினி அறிவித்தார். மேலும், காரகாம்சம், பிரம்மா, ருத்ரா, மகேஸ்வரன், அர்க்கலா என்ற பலவிதமான புதிய சொற்கள் பற்றியும் இந்த 15 மணி நேர பயிற்சியில் கற்றுக்கொள்ள உள்ளோம். மேலும் இந்த ஜோதிட முறையானது பிருகு நாடி ஜோதிட விதிகளுக்கும் பொருத்தமாயுள்ளது என்பது இன்னும் சிறப்பு மிக்கதாகும்.
No comments:
Post a Comment