வர்க்க சக்கரங்கள்
(24+ மணிநேர வகுப்பு)
இராசி மண்டலம் 360 பாகையாக அமைந்துள்ளது. 360 பாகையும் 12-இராசிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. எனவே ஒரு இராசிக்கு 30 பாகையாக அமையும். ஒவ்வொரு இராசியின் 30 பாகை பல பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. ஒவ்வொரு பிரிவும் வர்க்கங்கள் அல்லது Divisional Chart என்று அழைக்கப் படுகிறது.
ஒவ்வொரு வர்க்கங்களும் ஜாதகரின் ஆயுள், செல்வம், கல்வி, திருமணம், குழந்தைகள், உத்தியோகம். ஆன்மீகம் போன்றவற்றை விளக்குகிறது. பதினாறு வர்க்கங்களை மகரிஷிகள் விளக்கியுள்ளார்கள். இத்துடன் ஜெயமினி முனிவர் அருளிய பஞ்சமாம்சம் D5, சஷ்டாம்சம் D6, அஷ்டாம்சம் D8 ஆகிய மூன்று வர்க்கங்களுடன் சேர்த்து மொத்தம் 19 வாவையான வர்க்கங்களை பற்றி மிக விரிவாக அறியலாம்.
24 மணி நேரத்திற்கும் அதிகமான (1,225 நிமிடம்) பாடங்கள்.
1. இராசி (D1) - ஒரு இராசி 30 பாகைகள் கொண்டது. இதன் மூலம் அனைத்து பலன்களும் அறியலாம்.
2. ஹோரா (D2) - 30 பாகை கொண்ட ஒரு இராசி 2 பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. ஹோரா ஜாதகரின் செல்வநிலையைக் குறிக்கிறது.
3. திரேக்காணம் (D3) - 30 பாகை கொண்ட இராசி 3 சமமான பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. திரேக்காணத்தின் மூலம் சகோதர சகோதரிகளைப் பற்றி அறியலாம். மேலும். உடம்பிலுள்ள மச்சம். மரு. காயங்கள் விபத்துக்கள்
பற்றியும் அறியலாம்.
4. சதுர்த்தாம்சம் (D4) - 30 பாகை கொண்ட ஒரு இராசி 4 சமமான பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. சதுர்த்தாம்சத்தின் மூலம் ஜாதகரின் அதிர்ஷ்டம். குழந்தைப் பருவம். சொத்துக்கள் போன்றவற்றை அறியலாம்.
5. சப்தாம்சம் (D7) - 30 பாகை கொண்ட ஒரு இராசி 7 சமமான பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. சப்தாம்சத்தின் மூலம் குழந்தைகள் பற்றிய விபரம் அறியலாம்.
6. நவாம்சம் (D9) - 30 பாகை கொண்ட ஒரு இராசி 9 சமமான பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. நவாம்சத்தின் மூலம் களத்திரம்.
திருமணவாழ்க்கை. சமூக அந்தஸ்து மற்றும் கிரகங்களின் பொதுவான பலத்தைப் பற்றி அறியலாம். நவாம்சம் தர்மாம்சம் எனவும் அழைக்கப்படுகிறது.
7. தசாம்சம் (D10) - 30 பாகை கொண்ட ஒரு இராசி 10 சமமான பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. தசாம்சத்தின் மூலம் தொழில் மற்றும் ஜீவனத்தை அறியலாம்.
8. துவதசாம்சம் (D12) - 30 பாகை கொண்ட ஒரு இராசி 12 சமமான பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. துவதசாம்சத்தின் மூலம் பெற்றோர்கள் மற்றும் இரத்த சம்பந்தமுள்ள நெருங்கிய உறவினர்களைப் பற்றிய விபரங்களை அறியலாம்.
9. சோடசாம்சம் (D16) - 30 பாகை கொண்ட ஒரு இராசி 16 சமமான பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. சோடசாம்சத்தின் மூலம் வாகனங்கள். சுகபோகப் பொருட்கள் மற்றும் மகிழ்ச்சியை அறியலாம்.
10. விம்சாம்சம் (D20) - 30 பாகை கொண்ட ஒரு இராசி 20 சமமான பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. விம்சாம்சம் மூலம் ஆன்மீகத் தொடர்பு. செயலாற்றும் தன்மை. செயல்களில் ஈடுபாடு போன்றவற்றை அறியலாம்.
11. சதுர்விம்சாம்சம் (D24) - 30 பாகை கொண்ட ஒரு இராசி 24 சமமான பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. சதுர்விம்சாம்சத்தின் மூலம் உயர்கல்வி. அறிவாற்றல் மற்றும் கல்வியில் சாதனை நிகழ்த்துதல் போன்றவற்றை அறியலாம்.
12. சப்த விம்சாம்சம் (அ) பாம்சம் (D27) - 30 பாகை கொண்ட ஒரு இராசி 27 சமமான பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. பாம்சத்தின் மூலம் ஜாதகரின் புறத்தோற்றம். பலம். மனநிலை. ஆன்மீகத் தொடர்பு முதலியவற்றை அறியலாம்.
13. திரிசாம்சம் (D30) - 30 பாகை கொண்ட ஒரு இராசி 5 சமமற்ற பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. திரிசாம்சத்தின் மூலம் ஜாதகருக்கு ஏற்படும் துன்பங்கள். தீமைகள். துரதிர்ஷ்டம் போன்றவற்றை அறியலாம்.
14. கவேதாம்சம் (D40) - 30 பாகை கொண்ட ஒரு இராசி 40 சமமான பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. கவேதாம்சத்தின் மூலம் அதிர்ஷ்டம். தாயார் வழிச் சொத்துக்களை பற்றி அறியலாம்.
15. அக்ஷவேதாம்சம் (D45) - 30 பாகை கொண்ட ஒரு இராசி 45 சமமான பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. அக்ஷவேதாம்சத்தின் மூலம் தந்தை வழிச் சொத்துக்களை பற்றி அறியலாம்.
16. சஷ்டியாம்சம் (D60) - 30 பாகை கொண்ட ஒரு இராசி 60 சமமான பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. சஷ்டியாம்சம் இராசி சக்கரத்தை போன்றே பலவிதமான பலன்களையும் அறிய பயன்படுகிறது. மேலும் இதன்மூலம் முற்பிறப்பின் கர்மா மற்றும் இப்பிறப்பில் நடைபெறும் பலன்களை அறியலாம்.