1, 10, 19, 28 தேதிகளில்
பிறந்தவர்களே
அதிகார குணமும் அயராத உழைப்பும் கொண்ட
உங்களுக்கு, இந்த 2016ம் ஆண்டு மிக சிறப்பாக துவங்கப்போகிறது. போட்டு வைத்த திட்டங்கள்
எல்லாம் வரிசையாக வெற்றியடையும் நேரம் இது. வருமானத்துக்கு பஞ்சமே இல்லை. புதிது
புதிதாக வருமானத்துக்கு வழி கிடைக்கும். இரும்பு, மருந்து, அரசாங்கம். எலக்ட்ரானிக்ஸ், கமிஷன் போன்ற துறையில் பணம் வந்து குவியும். எதிர்பார்த்ததுபோல் மங்கள
காரியம் நிகழும். புதிதாக வீடு கட்டலாம். வெகு நாளாக துரத்தி வந்த சில நோய்கள்
முற்றிலும் விலகி ஓடும். வலிமையும்
பலமும் உடல்நிலையில் ஏற்படும்.
பெண்கள் கணவருடன் இணக்கமான சூழ்நிலையை
பெறுவார்கள். ஆபரணங்களை வாங்கி குவிப்பார்கள். குழந்தைகளுக்கு நல்ல இடத்தில் வரன்
அமையும். எதிலும் முதன்மை பெறுவார்கள். வெற்றிகளை குவிப்பார்கள். கல்வியில் கவனம்
செலுத்துவார்கள். சொந்த தொழில் செய்வோரின் எண்ணங்கள்
ஈடேறும். மருந்து, இரும்பு உருக்காலை, எலட்ரிக் பொருட்கள் தயாரிப்பு விற்பனை செய்பவர்கள் லாபம் ஈட்டுவர். அரசாங்க காண்ட்ராக்டர்கள் நினைத்ததை சாதிப்பார்கள்.
வியாபாரிகள்
புதிய கிளைகளை ஆங்காங்கே திறப்பார்கள். புதிய வகை பொருட்களை விற்பனைக்கு
விடுப்பதால் மக்கள் செல்வாக்கு பெறுவார்கள். கையிருப்புகளும் அரசாங்க ஆதரவும்
பெருகும். கடன்களில் இருந்து விடுதலையடைவார்கள். அரசாங்க, தனியார் பணியாளர்கள் தங்கள் பதவி உயர்வுகளை எளிதில் பெற்று உயர்வு
பெறுவார்கள். வீடு, கார் கடன்களை பெறலாம். புதிய
உத்வேகத்தை பெறுவார்கள்.
அரசியல்வாதிகள் சாதாரண நிலையில்
இருந்து மிகப் பிரமாண்டமான உயர்வுகளை பெற்று மகிழ்வார்கள். தலைமையிடம் மிக இணக்கம்
பெறுவார்கள். ஏற்கனவே வழக்குகளில் சிக்கி இருந்தால் விடுதலை பெறுவார்கள். யோசித்து
பேசுதல் நலம் பயக்கும். கலைஞர்கள் நினைத்ததை
சாதித்துக்கொள்ளும் நேரம் இது. விவசாயிகள் மாபெரும் புரட்சிகளை செய்து உற்பத்தியை
பெருக்குவார்கள்.