21 January 2014

ஒருவனின் தலையெழுத்தினை யார் அமைக்கிறார்?

ஒருவனின் வாழ்க்கை அவனது முன் ஜென்ம வினைப்படிதான் அமைகிறது என சாஸ்த்திரம் கூறுகிறது. நம் யாருடய வாழ்க்கையும் அவரவர் இஷ்ட்டப்படி அமையாது. நாம் முன்னர் செய்துவந்த செயல்களும், செய்துகொண்டு இருக்கும் செயல்களும் சேர்ந்தே, நமது எதிர்காலத்தினையும் வெற்றி தோல்விகளையும் தரும் வாழ்க்கையினை, அமைத்துக் கொடுக்கின்றது

     ஆகவே, கடந்த ஜென்மத்தின் செய்த செயல்களே, ஒருவற்கு ஜாதகமாக அமைகிறது. இறைவன் நேரடியாக எந்த உயிரையும் கட்டுப்படுத்தி பலாபலன்களை கொடுப்பதில்லை. தன்னுடய பிரதிநிதியாக நவகிரகங்களை படைத்து, உயிர்களின் கர்மவினைகளுக்கேற்ப பலன்களை கொடுக்கும் அதிகாரத்தினையும், சக்திகளையும் தந்துள்ளான். கர்மா சம்பந்தமான விளைவுகளை நாம் அனுபவிக்கும் போது நவகிரகங்கள் தரும் பலங்களில் தெய்வம் தலையிடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இருப்பினும் எந்த மனிதன் இந்த ஜென்மத்தில் நீதி, நேர்மை, உண்மை, இறைவனின் மீது பற்றுதல் கொண்டு இருக்கிறானோ அவனின் துயரங்களை இறைவன் குறைக்கின்றான்.



     இந்த ஜாதகர் நல்லவர், கெட்டவர் என பாராபட்சம் இன்றி நமது வாழ்க்கையினை நிர்ணயம் செய்து வழி நடத்துவது நவகிரகங்களே. அவர்கள் தங்களின் இயல்புபடி கொடுக்க வேண்டிய பலன்களை தவறாமல் தருவார்கள்.   

No comments:

Post a Comment