01 January 2014

5 14 23 ம் தேதி பிறந்தவர்களின் பொதுவான குணங்கள்


இந்த எண்ணின் ஆதிக்கக் கோள் அறிவன்(புதன்).பிறப்பு எண் 5ந்தைப் பெற்று பிறந்தவர்கள் எந்த விதமான சிக்கலான விவகாரங்களையும் தீர்த்து வைப்பதில் வல்லவர்கள்.
           பகைவர்களையும் ஒன்று படுத்தி வைப்பதில்தீரர்களாக இருப்பார்கள். எனினும் பிறர் ஆலோசனைகளையும் கேட்டு நடப்பார்கள். பெரிய தொழிற் சாலைகளை நிர்வகிக்கக் கூடியவர்களும், தலைவர்களாகவும் , நீதிபதிகளாகவும் கூட இருப்பார்கள். இவர்களின் வேலை செய்பவர்களிடம் அன்புடன் நடப்பார்கள். இந் இவர்களில் பெரும்பாலோர் உயரமாக இருப்பார்கள். வசீகரமானமுகமும், எவரையும் ஈர்க்கும்காந்தக் கண்களும் கொண்டவர்கள். எதையும் மனதில் வைத்துக் கொள்ளத் தெரியாதவர்கள். மனதில் தோன்றுவதை உடனே வெளியே பேசும் தன்மை கொண்டவர்கள். வேகமாக சிந்திக்கும் ஆற்றல் படைத்தவர்கள். அதே போன்று வேகமாக செயல் படத் துடிக்கும் எண்ணம் கொண்டவர்கள். எதிலும் வேகமே இவர்களின் லட்சியம். எவ்வளவு பெரிய காரியமானாலும் துணிந்து செயல் படுவார்கள். மற்றவர்களால் முடியாததை தன்னால் செய்ய முடியும் என்பதே இவர்களது எண்ணம். புதிது புதிதாக எதையாவது செய்து பேரும், புகழும் பெற வேண்டும் என்பதே இவர்கள் லட்சியம். முடிந்தவரையில் அடுத்தவர்களின் உதவியை பெற மாட்டார்கள். தானாகவே எதையும் செய்து முடிக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.  இவர்களால் அதிகஅளவில் சம்பாதிக்க முடியும். அதேசமயம் செலவு செய்வதிலும் சலித்தவர்கள் அல்லர். சேமிப்பு பற்றி கவலை படாதவர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்ய சிறிதும் தயங்க மாட்டார்கள். இதனால் இவர்களைக் கொண்டு எந்தக் காரியத்தையும் செய்து கொள்ளலாம். இவர்கள் மனதில் தோன்றியஎண்ணப்படி நடப்பதால் எவ்வளவு பெரியதுன்பம் வந்தாலும் அதிலிருந்து எளிதாக விடுபட்டுவிடுவார்கள். அரசியல், விஞ்ஞானம், ஆன்மீகம்போன்றவற்றில் இவர்களதுபங்கு அதிகம் இருப்பதைக் காணலாம். அறிவன் ஆதிக்கம் இருப்பதால் கணிதம், சட்டம் போன்றவற்றிலும் பிரகாசிப்பார்கள். கண்டதும் காதல் எனும் வகையை சேர்ந்தவர்கள். எனவே அவசரமாக திருமணம் செய்துகொண்டு பின்னால் வருந்து பவர்களும் உண்டு. நன்குயோசித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும். இல்லை யெனில் மணவாழ்க்கை சிறப்பாக இருக்காது. கருத்து வேற்றுமைஏற்படவாய்ப்புண்டுசமயங்களில் அதுவே பெரிய சண்டையாக மாறி விடும். குடும்ப வாழ்க்கையை விட வெளி வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்துவார்கள். அதனால்உற்சாகம் அடைவார்கள். இவர்கள் உடல் வலிமையை விட மன வலிமை அதிகம் கொண்டவர்கள். கடுமையாக சிந்திக்கக் கூடியவர்கள். ஆதலால் மனம் அலை பாய்ந்து அமைதி இழக்கும். இதனால் நரம்புத்தளர்ச்சி, வாதம், மூளை தளர்ச்சி போன்ற நரம்புத் தொடர்பான நோய்கள்ஏற்படும். பெயர் எண் சரியாக அமையாது போனால் சோம்பலான சாதாரண வழ்க்கையினை வாழ்வார்கள்.

No comments:

Post a Comment