9 எண்ணுக்குரிய கோள் செவ்வாய். பொதுவாக இவர்கள் சுறுசுறுப்பானவர்கள். சுதந்திரமாக செயல் படுவதில் விருப்பம் உள்ளவர்கள்.
முன்கோபியான இவர்கள் எவரையும் தூக்கியெறிந்து பேசும் குணம் உள்ளவர்கள்.பிறப்பு எண் 9ஐப் பெற்று பிறந்தவர்கள் தன் இச்சைப் படியே நடப்பார்கள். எந்த ஒரு வேலையைச் செய்தாலும் அதை நல்ல முறையில் முடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதில் குறை ஏதேனும் இருந்து யாராவது சுட்டிக் காட்டினாலும் அதை ஏற்று கொள்ள மாட்டார்கள். உற்றார், உறவினர்களுடன் உல்லாசமாகப் பொழுதைக் கழிப்பார்கள். எங்கு சென்றாலும் தனிமையில் செல்ல மாட்டார்கள். நண்பர்களுடனேயே செல்வார்கள். தொழில் முறை எதுவானாலும் அதில் ஆர்வம் இருக்காது. இந்த நிலையை மாற்றி கொண்டால் நல்லது மனதில் உள்ளதை பட்டென வெளிப்படையாக சொல்லி விடுவர். இவர்களில் பெரும்பாலோருக்கு ஆராய்ச்சி மனப்பான்மை இருக்கும்எந்த ஒருவேலையை செய்தாலும். அதை சரிவர செய்வார்கள் செவ்வாய் பலமாக இருந்தால் இவர்கள் பொறியியல் துறையிலும் அறுவை சிகிச்சை நிபுணர்களாகவும் ரியல் எஸ்ட்டேட் துறையிலும் இருப்பர். இந்த எண் உடையவர்கள் மிகுந்த மனோ பலம் உடையவர்கள் தமக்கென்று ஒரு கூட்டத்தை ஏற்படுத்திக் கொள்வார்கள் எந்த விதமான எதிர்ப்பு வந்தாலும் சமாளிக்கும் திறன் உடையவர்கள். பெண்களால் இவர்களுக்கு கெட்ட பெயர் ஏற்பட வாய்ப்புண்டு.பெயர் சரியாக அமையாதவர்களுக்கு அடிக்கடி விபத்துக்களும் இரத்தக்காயங்களும் ஏற்படும். பெயர் மாற்றம் மூலம் பொன்னான வாழ்க்கையினை அடையலாம்.
No comments:
Post a Comment