01 January 2014

6 15 24 ம் தேதி பிறந்தவர்களின் பொதுவான குணங்கள்


6ம் எண்ணின் ஆதிக்கக் கோள் வெள்ளி (சுக்கிரன்) ஆகும். விடாமுயற்சி, சாதிக்க வேண்டும் என்ற வைராக்கியம் கொண்டவர்கள். எனவே, இவர்கள் செல்வத்தோடும், செல்வாக்கோடும் விளங்குவார்கள்.
 பிறப்பு எண் 6-ஐப் பெற்று  பிறந்தவர்கள் ஒரு இடத்திலிருந்து நிலையான தொழிலைச் செய்ய மாட்டார்கள். புதுப் புதுத் திட்டங்களை மனதில் போட்டுக் குழப்பிக் கொண்டே இருப்பார்கள். அதிகாரம், அடக்கி ஆளுதல், பிறரை மகிழ்வித்து பொருளீட்டும் கலைத்துறை போன்ற வற்றில் இவர்களைக் காணலாம். பொதுவாக நடுத்தரஉயரம் உடையவர்கள். நன்கு அமைந்த உடல் வாகு கொண்டவர்கள். முதுமையிலும் இளமையாகத் தோன்றுவார்கள். எப்போதும் இன்பமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். அழகை ரசிப்பதில் ஆர்வம் உள்ளவர்கள். கலைகளில் அதிக ஆர்வம் உடையவர்கள். ஒருவிதமான காந்தகச்தி உடையவர்கள்.அதனால் மற்றவர்களை தன்பக்கம் இழுக்கும் வல்லமை உள்ளவர்கள். தன்பால் அன்பு கொண்டவர்களுக்காக எதையும் செய்யத் தயங்க மாட்டார்கள். பிறர்நன்றாக வாழ்வதைக் கண்டு பொறாமை கொள்ள மாட்டார்கள். எந்த காரியத்தில் ஈடு பட்டாலும் நன்கு சிந்தித்த பின்பே அதில் இறங்குவார்கள். புகழ் பெற்ற கலைஞர்கள் பலர் இந்த எண்ணில் இருப்பதைக் காணலாம். எல்லா வகையான இன்பங்களையும் அனுபவிக்கும் குணமுடையவர்கள். இவர்களிடம் காதல் விவகாரங்கள் அதிகம் இருக்கும். சிற்றின்பத்தில் அதிக நாட்டம் இருக்கும். அதனால் ஒழுக்கம் தவற வாய்ப்புண்டு.இதை இவர்கள் சரி செய்து கொள்ளுதல் அவசியம். இவர்கள் பொருளீட்ட அதிக அளவில் சிரமம் எடுக்க வேண்டியது இல்லை. சிறிது முயற்சி செய்தே நல்ல வருமானத்தை அடைவார்கள். அழகு சாதனங்கள், வாசனைப் பொருட்கள், ஆடை, ஆபரணங்கள் போன்ற வற்றிற்காக அதிக அளவில் பணம் செலவழிப்பார்கள். இவர்களில் பெரும் பாலோர் நடிப்புத் துறையில் சிறந்து விளங்குவார்கள். எழுத்து, சினிமா, நாடகம் போன்றத் துறைகளிலும் இவர்கள் நன்கு பிரகாசிப்பார்கள். அலங்காரப் பொருட்கள் தயாரிப்பது அல்லது விற்பனை செய்வது, நவரத்தின விற்பனை போன்ற தொழில்கள் இலாபகரமானது. இவர்களுக்கு அழகும், பண்பும் நிறைந்த மனைவி அமைவார்கள். பிறரை பார்த்த மாத்திரத்தில் சரியாக எடை போடக் கூடியவர்கள். நகைச்சுவையுடன் பேசும் ஆற்றல் உள்ளவர்கள். கலைகளிலும் சிறந்து விளங்குவார்கள். இந்த தேதி பிறந்தவர்கள் இடத்துக்கு ஏற்றவாறு பேசுவதில் வல்லவர்கள். அடக்கமான குணங்களைக் கொண்டவர்கள். காரியத்தை சாதித்துக் கொள்ளுவதில் வல்லவர்கள். இவர்களுக்கு பதவிகளும், பெரிய இடத்து சம்பந்தமும் தேடி வரும். மற்றவர்களை விட இவர்களுக்கு துணிச்சல் அதிக அளவில் இருக்கும். பெயர் சரியாக அமையாதவர்கள்  ஆகாத காரியங்களில் பெரும் முயற்சி எடுத்துக்கொண்டு கடைசியில் தோல்வி அடைந்து மன வேதனை அடைவார்கள். இவர்களுக்கு எந்த நேரத்திலும் மனஅமைதி இருக்காது. எந்த ஒரு காரியத்தையும் பிறர் குறுக்கீடின்று செய்யவே விரும்புவார்கள். இவர்கள் மனம் அடிக்கடி மாறிக் கொண்டே இருப்பதால் எந்த ஒரு காரியமும் உருப்படியாக நடைபெறாமல்போகும். இந்தநிலையை இவர்கள் மாற்றிக் கொண்டால் வாழ்க்கையில் முன்னேறலாம்.

No comments:

Post a Comment