7ம் எண்ணுக்கு உரிய கோள் கேது. அமைதியும், சாந்தமும் உடையவர்கள். புத்திக் கூர்மையும், அதிக அளவு ரசிப்புத் தன்மையும் கொண்டவர்கள். தெய்வீக வழி பாட்டில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள்.
பிறப்பு எண் 7ப் பெற்று பிறந்தவர்கள் எந்தத் தொழிலில் ஈடுபட்டாலும் பணத்தை சேமிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் இருப்பார்கள். நன்றாக உழைக்க வேண்டும், நல்ல வருமானம் பெற வேண்டும் என்றே நினைப்பார்கள். மற்றவர்கள் செலவில் தன்காரியத்தை சாதித்துக் கொள்ளும் திறமை உள்ளவர்கள். இவர்களுக்கு எவராவது தீமை செய்தால் அதை உடனே எதிர்க்காமல், சமயம் வாய்க்கும் போது நடவடிக்கை எடுப்பார்கள். இவர்களை ஏமாற்ற முடியாது. எடுத்த காரியத்தை எப்படி பட்டாவது முடிக்கக் கூடியவர்கள். சோதிடத்திலும் , மதத் தொடர்பான செயல்களிலும் தீவிரமானவர்களை அந்த எண்ணில் அதிகம் காணலாம். இவர்களில் பெரும்பாலோர் உயரமாக இருப்பார்கள். மாநிறம் உடையவர்கள். உடல் பலத்தை விட மனோ பலம் அதிகம். எதிர் காலத்தைப் பற்றிய சிந்தனை அதிகம் இருக்கும். சிறிய துன்பத்தைக் கூட தாங்கும் சக்தி இல்லாதவர்கள். எவரையும் பின் பற்றும் குணம் கிடையாது. எதிலும் தன் விருப்பப்படியே செய்யும் மனப்பான்மை கொண்டவர்கள். இவர்களின் சொல்லுக்கு பிறர் கட்டுப் படுவார்கள். இவர்களில் பெரும் பாலோர் நல்ல உழைப்பாளிகளாக இருப்பார்கள். வேலையில் அதிக நேரம் ஈடுபடுவார்கள். சாதகமான சூழ் நிலையில் எவ்வளவு பெரிய செயலையும் எளிதில் முடித்து விடுவார்கள். பார்ப்பதற்கு கண்ணியமான தோற்றம் உடையவர்கள். வார்த்தைகளை அளந்தேபேசுவார்கள். சிறிது தன்னம்பிக்கை மிகுந்து காணப்படும் போது அதிகஅளவில் பேசுவார்கள். சில நேரங்களில் ஊமையோ என எண்ணும் வகையில் மௌனம் சாதிப்பார்கள். பெரும்பாலும் முன் கோபக்காரர்கள். இதனால் நல்ல நண்பர்கள் அமைவது கடினம். எந்த துன்பம் வந்தாலும் அதை மனதிற்குள்ளேயே வைத்துக் கொள்ளும் குணமுடையவர்கள். எக்காரணத்தைக் கொண்டும் பிறரிடம் காட்டிக் கொள்ள மாட்டார்கள். இவர்களால் எந்தக் கலைகளையும் எளிதாகக் கற்றுக் கொள்ள முடியும். எதிலும் தனித் தன்மை கொண்டவர்கள். எதிலும் புதுமை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். துன்பப் படுபவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். இவர்கள் பெரும் பாலும் அதிஸ்ட்டசாலிகள் அல்ல. ஓயாத உழைப்பினால்தான் முன்னேற முடியும். இவர்கள் நம்பிக்கைக் குரியவர்கள். நம்பியவர்களை கை விட மாட்டார்கள். தங்கள் குடும்பத்தினரை அதிகஅளவில் நேசிக்கும் குணம் உடையவர்கள். அவர்களுடைய நலனுக்காகவும்,முன்னேற்றத்திற்காகவும் அதிகமாக ஈடுபடுவார்கள். வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் மாறி மாறி வந்து கொண்டிருக்கும். இவர்களில் பெரும்பாலோருக்கு மனதிற்கு ஏற்ற மனைவி அமைவதில்லை. குடும்ப வாழ்க்கையும் அமைதி தரும் என்று சொல்ல முடியாது. குடும்ப வாழ்க்கையை வெறுக்கும் நிலையும் ஏற்படலாம். அதனால் ஆன்மீகத் துறையில் அதிக அளவில் நாட்டம் ஏற்படும். மலச் சிக்கல்தான் இவர்கள் முதல் எதிரி. அதிக அளவில் வேர்த்தல், தோல் நோய், வாதத் தொடர்பான நோய்கள் வர வாய்ப்புண்டுகீரை வகைகளை அதிக அளவில் சாப்பிட்டு நோய்வராமல் தடுத்துக் கொள்ளலாம். இந்த தேதியில் பிறந்தவர்கள் குழந்தை மனம் கொண்டவர்கள். கலையிலும், காதலிலும் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். இவர்களின் குடும்ப வாழ்க்கை சிரமமானதாக இருக்கும். தவறான காதல் விவகாரங்களில் ஈடுபடாமல் இருந்தால் வாழ்க்கை சிறப்படையும். இந்த தேதியில் பிறந்தவர்கள் வணக்கத்திற்குரிய மனிதர்களாக விளங்குகின்றனர். நீதிபதிகள், மதத் தலைவர்கள், ஆணையர்கள் இந்த எண்ணில் அதிகம் காணலாம். பெயரினை அதிர்ஷ்டமாக்கி கொள்ளுவதன் மூலம் இவர்களுக்கு சிறப்பான வாழ்க்கை அமையும்.
No comments:
Post a Comment