29 January 2014

வாஸ்து சாஸ்திரப்படி ஒரு மனை எப்படி இருக்க வேண்டும்?

மனை என்பது சதுரம் அல்லது செவ்வகமாக இருத்தல் அவசியம்.

கட்டடம் கட்டும் போது வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் அதிக காலியிடம் இருத்தல் அவசியம்.

வடகிழக்கு பகுதி பள்ளமாகவும் / கனமில்லாமலும், தென்மேற்கு பகுதி உயரமாகவும் / கனமாகவும் இருத்தல் அவசியம்.

ஒரு இடத்திற்கு அமைக்கப்படும் தலைவாசல் கட்டாயம் உச்சத்தில் தான் இருக்க வேண்டும்.


ஒரு இடத்தின் தெருக்குத்து மற்றும் தெரு தாக்கம், உட்புற மற்றும் வெளிப்புற படிக்கட்டுகள் அமைக்கப்படும் நிலையை அறிவது அவசியம்.

vasththu vasthu sastra saasthira sastram 

வாஸ்த்து எப்படி செயல் படுகிறது? ஒரு அறிவியல் ரீதியான விளக்கம்

21 January 2014

ஒருவனின் தலையெழுத்தினை யார் அமைக்கிறார்?

ஒருவனின் வாழ்க்கை அவனது முன் ஜென்ம வினைப்படிதான் அமைகிறது என சாஸ்த்திரம் கூறுகிறது. நம் யாருடய வாழ்க்கையும் அவரவர் இஷ்ட்டப்படி அமையாது. நாம் முன்னர் செய்துவந்த செயல்களும், செய்துகொண்டு இருக்கும் செயல்களும் சேர்ந்தே, நமது எதிர்காலத்தினையும் வெற்றி தோல்விகளையும் தரும் வாழ்க்கையினை, அமைத்துக் கொடுக்கின்றது

     ஆகவே, கடந்த ஜென்மத்தின் செய்த செயல்களே, ஒருவற்கு ஜாதகமாக அமைகிறது. இறைவன் நேரடியாக எந்த உயிரையும் கட்டுப்படுத்தி பலாபலன்களை கொடுப்பதில்லை. தன்னுடய பிரதிநிதியாக நவகிரகங்களை படைத்து, உயிர்களின் கர்மவினைகளுக்கேற்ப பலன்களை கொடுக்கும் அதிகாரத்தினையும், சக்திகளையும் தந்துள்ளான். கர்மா சம்பந்தமான விளைவுகளை நாம் அனுபவிக்கும் போது நவகிரகங்கள் தரும் பலங்களில் தெய்வம் தலையிடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இருப்பினும் எந்த மனிதன் இந்த ஜென்மத்தில் நீதி, நேர்மை, உண்மை, இறைவனின் மீது பற்றுதல் கொண்டு இருக்கிறானோ அவனின் துயரங்களை இறைவன் குறைக்கின்றான்.



     இந்த ஜாதகர் நல்லவர், கெட்டவர் என பாராபட்சம் இன்றி நமது வாழ்க்கையினை நிர்ணயம் செய்து வழி நடத்துவது நவகிரகங்களே. அவர்கள் தங்களின் இயல்புபடி கொடுக்க வேண்டிய பலன்களை தவறாமல் தருவார்கள்.   

15 January 2014

ஆங்கில எழுத்துக்களின் எண் மதிப்பு ( The numerical value of English alphabet )

The numerical value of English characters
ஆங்கில எழுத்துக்களின் எண் மதிப்பு

1  A,I,J,Q,Y,          SUN                  (சூரியன்)  
2  B,K,R,               MOON             (சந்திரன்)
3  C,G,L,S,           JUBITER           (குரு)
4  D,M,T,             RAGU               (ராகு)
5  E,H,N,X,           MERCURY        (புதன்)
6  U,V,W,             VENUS              (சுக்கிரன்)
7  O,Z,                 KETHU              (கேது)
8  F,P,                  SATURN           (சனி)
9 NO characters    MARS               (செவ்வாய்)

  

02 January 2014

எண்கணிதம் ஒரு அறிமுகம்

    அன்புள்ள நண்பர்களே!
ஜோதிடம் என்பது கடல் போன்றது. அதில் கணக்கில் அடங்கா  பலன் கூறும் வழி முறைகள் உள்ளது. மிகவும் புராதன காலம் தொட்டே ஜோதிடம் மற்றும் வானவியல் சாஸ்திரங்கள் உள்ளது.

   ஜோதிடம் என்பது நாம் பிறக்கும் பொது உள்ள கிரக நிலைகளை வைத்து நம்முடைய வாழ்வில் நடைபெறும் பலாபலன்களை கூறும் ஒருகலையாகும். இந்த ஜோதிட அறிவியலை நமது பழங்கால ஞானிகளும் சித்தமகா முனிவர்களும் வழிவழியாக அறிந்து வைத்து இருந்தார்கள். அதன் ஒரு பிரிவாக 'சப்த ஒலி சாஸ்திரம்' இருந்து வருகிறது.

     அந்த சப்த ஒலி சாஸ்திரங்களே, இன்றைய நியுமராலாஜி எனும் எண்கணிதம் என்ற பெயரில், உலகம் முழுதும் உள்ள மக்களால் பின்பற்றப்படுகின்றது.

01 January 2014

9 18 27 ம் தேதி பிறந்தவர்களின் பொதுவான குணங்கள்


9 எண்ணுக்குரிய கோள் செவ்வாய். பொதுவாக இவர்கள் சுறுசுறுப்பானவர்கள். சுதந்திரமாக செயல் படுவதில் விருப்பம் உள்ளவர்கள்.
     முன்கோபியான இவர்கள் எவரையும் தூக்கியெறிந்து பேசும் குணம் உள்ளவர்கள்.பிறப்பு எண் 9ஐப் பெற்று  பிறந்தவர்கள் தன் இச்சைப் படியே நடப்பார்கள். எந்த ஒரு வேலையைச் செய்தாலும் அதை நல்ல முறையில் முடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதில் குறை ஏதேனும் இருந்து யாராவது சுட்டிக் காட்டினாலும் அதை ஏற்று கொள்ள மாட்டார்கள். உற்றார், உறவினர்களுடன் உல்லாசமாகப் பொழுதைக் கழிப்பார்கள். எங்கு சென்றாலும் தனிமையில் செல்ல மாட்டார்கள். நண்பர்களுடனேயே செல்வார்கள். தொழில் முறை எதுவானாலும் அதில் ஆர்வம் இருக்காது. இந்த நிலையை மாற்றி கொண்டால் நல்லது மனதில் உள்ளதை பட்டென வெளிப்படையாக சொல்லி விடுவர். இவர்களில் பெரும்பாலோருக்கு ஆராய்ச்சி மனப்பான்மை இருக்கும்எந்த ஒருவேலையை செய்தாலும். அதை சரிவர செய்வார்கள் செவ்வாய் பலமாக இருந்தால் இவர்கள் பொறியியல் துறையிலும் அறுவை  சிகிச்சை நிபுணர்களாகவும் ரியல் எஸ்ட்டேட் துறையிலும் இருப்பர். இந்த எண் உடையவர்கள் மிகுந்த மனோ பலம் உடையவர்கள் தமக்கென்று ஒரு கூட்டத்தை ஏற்படுத்திக் கொள்வார்கள் எந்த விதமான எதிர்ப்பு வந்தாலும் சமாளிக்கும் திறன் உடையவர்கள். பெண்களால் இவர்களுக்கு கெட்ட பெயர் ஏற்பட வாய்ப்புண்டு.பெயர் சரியாக அமையாதவர்களுக்கு அடிக்கடி விபத்துக்களும் இரத்தக்காயங்களும் ஏற்படும். பெயர் மாற்றம் மூலம் பொன்னான வாழ்க்கையினை அடையலாம்.

8 17 26 ம் தேதி பிறந்தவர்களின் பொதுவான குணங்கள்

8 எண்ணுக்குரிய கோள் சனி எனவே சனியின் குணாதிசயங்கள் இவர்களிடத்தில் காணப்படும். எப்போதும் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருப்பர்.
       பிறப்பு எண் 8-பெற்று  பிறந்தவர்கள் கொஞ்சம் முன் கோபக் காரர்களாக இருப்பார்கள். இவர்கள் பேச்சில் அதிகாரத் தோரணை இருக்கும்.  இதனால் உற்றார் , உறவினர் கூட நெருங்கிப் பேச பயப்படுவார்கள். முன் கோபம் இருந்தாலும் பிறகு சாந்தமாகப் போய் விடுவார்கள். எந்த காரியத்தையும் அக்கரையோடு செய்து முடிப்பார்கள். வேலை செய்யும் இடத்தில் தகராறு காரணமாக அடிக்கடி வேலையை மாற்ற வேண்டி வரும். வருமானம் இதனால் தடைபடும். 30 வயதுக்கு மேல் நிலைமை சீரடையும் பொதுவாக மற்றவர்கள் இவர்களை தவறாகவே எடை போடுவர்.எனவே இவர்கள் தனிமையையே விரும்புவர்.எதிலும் நிதானமாகவே இருப்பர்.ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு  இருக்காது. அப்படியே ஈடுபட்டாலும் அதில் ஒரு வெறித்தனம் இருக்கும். சனியின் ஆதிக்கம் குறைவாக உள்ளவர்கள் எதிலும் அக்கரை இன்றி காலம் களிப்பார்கள். பொதுவாக இவர்கள் இரும்பு நிலக்கரி கட்டிட ஒப்பந்தம் போன்ற தொழில்களில் ஈடுபட்டால் இலாபமடைவர்.வாழ்க்கையின் முற்பகுதியில் பிரச்சினைகள் அதிகமிருக்கும் ஆனால் பிற்பகுதியில் பிரச்சினைகள் தீர்ந்து சாந்தமான வாழ்க்கை அமையும். பொதுவாக வாழ்க்கையின் பெரிய வெற்றியாளர்களையும், பெரிய தோல்வியாளர்களையும் இந்த எண்ணினர்களிடம் காணலாம்.பெயர் சரியாக அமைத்து சிக்கல் இன்றி வெற்றி வீரராய் வாழலாம். 

7 16 25 ம் தேதி பிறந்தவர்களின் பொதுவான குணங்கள்


7ம் எண்ணுக்கு உரிய கோள் கேது. அமைதியும், சாந்தமும் உடையவர்கள். புத்திக் கூர்மையும், அதிக அளவு ரசிப்புத் தன்மையும் கொண்டவர்கள். தெய்வீக வழி பாட்டில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள்.
 பிறப்பு எண் 7ப் பெற்று  பிறந்தவர்கள் எந்தத் தொழிலில் ஈடுபட்டாலும் பணத்தை சேமிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் இருப்பார்கள். நன்றாக உழைக்க வேண்டும், நல்ல வருமானம் பெற வேண்டும் என்றே நினைப்பார்கள். மற்றவர்கள் செலவில் தன்காரியத்தை சாதித்துக் கொள்ளும் திறமை உள்ளவர்கள். இவர்களுக்கு எவராவது தீமை செய்தால் அதை உடனே எதிர்க்காமல், சமயம் வாய்க்கும் போது நடவடிக்கை எடுப்பார்கள். இவர்களை ஏமாற்ற முடியாது. எடுத்த காரியத்தை எப்படி பட்டாவது முடிக்கக் கூடியவர்கள். சோதிடத்திலும் , மதத் தொடர்பான செயல்களிலும் தீவிரமானவர்களை அந்த எண்ணில் அதிகம் காணலாம். இவர்களில் பெரும்பாலோர் உயரமாக இருப்பார்கள். மாநிறம் உடையவர்கள். உடல் பலத்தை விட மனோ பலம் அதிகம். எதிர் காலத்தைப் பற்றிய சிந்தனை அதிகம் இருக்கும். சிறிய துன்பத்தைக் கூட தாங்கும் சக்தி இல்லாதவர்கள். எவரையும் பின் பற்றும் குணம் கிடையாது. எதிலும் தன் விருப்பப்படியே செய்யும் மனப்பான்மை கொண்டவர்கள். இவர்களின் சொல்லுக்கு பிறர் கட்டுப் படுவார்கள். இவர்களில் பெரும் பாலோர் நல்ல உழைப்பாளிகளாக இருப்பார்கள். வேலையில் அதிக நேரம் ஈடுபடுவார்கள். சாதகமான சூழ் நிலையில் எவ்வளவு பெரிய செயலையும் எளிதில் முடித்து விடுவார்கள். பார்ப்பதற்கு கண்ணியமான தோற்றம் உடையவர்கள். வார்த்தைகளை அளந்தேபேசுவார்கள். சிறிது தன்னம்பிக்கை மிகுந்து காணப்படும் போது அதிகஅளவில் பேசுவார்கள். சில நேரங்களில் ஊமையோ என எண்ணும் வகையில் மௌனம் சாதிப்பார்கள். பெரும்பாலும் முன் கோபக்காரர்கள். இதனால் நல்ல நண்பர்கள் அமைவது கடினம். எந்த துன்பம் வந்தாலும் அதை மனதிற்குள்ளேயே வைத்துக் கொள்ளும் குணமுடையவர்கள். எக்காரணத்தைக் கொண்டும் பிறரிடம் காட்டிக் கொள்ள மாட்டார்கள். இவர்களால் எந்தக் கலைகளையும் எளிதாகக் கற்றுக் கொள்ள முடியும். எதிலும் தனித் தன்மை கொண்டவர்கள். எதிலும் புதுமை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். துன்பப் படுபவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். இவர்கள் பெரும் பாலும் அதிஸ்ட்டசாலிகள் அல்ல. ஓயாத உழைப்பினால்தான் முன்னேற முடியும். இவர்கள் நம்பிக்கைக் குரியவர்கள். நம்பியவர்களை கை விட மாட்டார்கள். தங்கள் குடும்பத்தினரை அதிகஅளவில் நேசிக்கும் குணம் உடையவர்கள். அவர்களுடைய நலனுக்காகவும்,முன்னேற்றத்திற்காகவும் அதிகமாக ஈடுபடுவார்கள். வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் மாறி மாறி வந்து கொண்டிருக்கும். இவர்களில் பெரும்பாலோருக்கு மனதிற்கு ஏற்ற மனைவி அமைவதில்லை. குடும்ப வாழ்க்கையும் அமைதி தரும் என்று சொல்ல முடியாது. குடும்ப வாழ்க்கையை வெறுக்கும் நிலையும் ஏற்படலாம். அதனால் ஆன்மீகத் துறையில் அதிக அளவில் நாட்டம் ஏற்படும். மலச் சிக்கல்தான் இவர்கள் முதல் எதிரி. அதிக அளவில் வேர்த்தல், தோல் நோய், வாதத் தொடர்பான நோய்கள் வர வாய்ப்புண்டுகீரை வகைகளை அதிக அளவில் சாப்பிட்டு நோய்வராமல் தடுத்துக் கொள்ளலாம். இந்த  தேதியில் பிறந்தவர்கள் குழந்தை மனம் கொண்டவர்கள். கலையிலும், காதலிலும் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். இவர்களின் குடும்ப வாழ்க்கை சிரமமானதாக இருக்கும். தவறான காதல் விவகாரங்களில் ஈடுபடாமல் இருந்தால் வாழ்க்கை சிறப்படையும். இந்த  தேதியில் பிறந்தவர்கள் வணக்கத்திற்குரிய மனிதர்களாக விளங்குகின்றனர். நீதிபதிகள், மதத் தலைவர்கள், ஆணையர்கள் இந்த எண்ணில் அதிகம் காணலாம். பெயரினை அதிர்ஷ்டமாக்கி கொள்ளுவதன் மூலம் இவர்களுக்கு சிறப்பான வாழ்க்கை அமையும்.

6 15 24 ம் தேதி பிறந்தவர்களின் பொதுவான குணங்கள்


6ம் எண்ணின் ஆதிக்கக் கோள் வெள்ளி (சுக்கிரன்) ஆகும். விடாமுயற்சி, சாதிக்க வேண்டும் என்ற வைராக்கியம் கொண்டவர்கள். எனவே, இவர்கள் செல்வத்தோடும், செல்வாக்கோடும் விளங்குவார்கள்.
 பிறப்பு எண் 6-ஐப் பெற்று  பிறந்தவர்கள் ஒரு இடத்திலிருந்து நிலையான தொழிலைச் செய்ய மாட்டார்கள். புதுப் புதுத் திட்டங்களை மனதில் போட்டுக் குழப்பிக் கொண்டே இருப்பார்கள். அதிகாரம், அடக்கி ஆளுதல், பிறரை மகிழ்வித்து பொருளீட்டும் கலைத்துறை போன்ற வற்றில் இவர்களைக் காணலாம். பொதுவாக நடுத்தரஉயரம் உடையவர்கள். நன்கு அமைந்த உடல் வாகு கொண்டவர்கள். முதுமையிலும் இளமையாகத் தோன்றுவார்கள். எப்போதும் இன்பமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். அழகை ரசிப்பதில் ஆர்வம் உள்ளவர்கள். கலைகளில் அதிக ஆர்வம் உடையவர்கள். ஒருவிதமான காந்தகச்தி உடையவர்கள்.அதனால் மற்றவர்களை தன்பக்கம் இழுக்கும் வல்லமை உள்ளவர்கள். தன்பால் அன்பு கொண்டவர்களுக்காக எதையும் செய்யத் தயங்க மாட்டார்கள். பிறர்நன்றாக வாழ்வதைக் கண்டு பொறாமை கொள்ள மாட்டார்கள். எந்த காரியத்தில் ஈடு பட்டாலும் நன்கு சிந்தித்த பின்பே அதில் இறங்குவார்கள். புகழ் பெற்ற கலைஞர்கள் பலர் இந்த எண்ணில் இருப்பதைக் காணலாம். எல்லா வகையான இன்பங்களையும் அனுபவிக்கும் குணமுடையவர்கள். இவர்களிடம் காதல் விவகாரங்கள் அதிகம் இருக்கும். சிற்றின்பத்தில் அதிக நாட்டம் இருக்கும். அதனால் ஒழுக்கம் தவற வாய்ப்புண்டு.இதை இவர்கள் சரி செய்து கொள்ளுதல் அவசியம். இவர்கள் பொருளீட்ட அதிக அளவில் சிரமம் எடுக்க வேண்டியது இல்லை. சிறிது முயற்சி செய்தே நல்ல வருமானத்தை அடைவார்கள். அழகு சாதனங்கள், வாசனைப் பொருட்கள், ஆடை, ஆபரணங்கள் போன்ற வற்றிற்காக அதிக அளவில் பணம் செலவழிப்பார்கள். இவர்களில் பெரும் பாலோர் நடிப்புத் துறையில் சிறந்து விளங்குவார்கள். எழுத்து, சினிமா, நாடகம் போன்றத் துறைகளிலும் இவர்கள் நன்கு பிரகாசிப்பார்கள். அலங்காரப் பொருட்கள் தயாரிப்பது அல்லது விற்பனை செய்வது, நவரத்தின விற்பனை போன்ற தொழில்கள் இலாபகரமானது. இவர்களுக்கு அழகும், பண்பும் நிறைந்த மனைவி அமைவார்கள். பிறரை பார்த்த மாத்திரத்தில் சரியாக எடை போடக் கூடியவர்கள். நகைச்சுவையுடன் பேசும் ஆற்றல் உள்ளவர்கள். கலைகளிலும் சிறந்து விளங்குவார்கள். இந்த தேதி பிறந்தவர்கள் இடத்துக்கு ஏற்றவாறு பேசுவதில் வல்லவர்கள். அடக்கமான குணங்களைக் கொண்டவர்கள். காரியத்தை சாதித்துக் கொள்ளுவதில் வல்லவர்கள். இவர்களுக்கு பதவிகளும், பெரிய இடத்து சம்பந்தமும் தேடி வரும். மற்றவர்களை விட இவர்களுக்கு துணிச்சல் அதிக அளவில் இருக்கும். பெயர் சரியாக அமையாதவர்கள்  ஆகாத காரியங்களில் பெரும் முயற்சி எடுத்துக்கொண்டு கடைசியில் தோல்வி அடைந்து மன வேதனை அடைவார்கள். இவர்களுக்கு எந்த நேரத்திலும் மனஅமைதி இருக்காது. எந்த ஒரு காரியத்தையும் பிறர் குறுக்கீடின்று செய்யவே விரும்புவார்கள். இவர்கள் மனம் அடிக்கடி மாறிக் கொண்டே இருப்பதால் எந்த ஒரு காரியமும் உருப்படியாக நடைபெறாமல்போகும். இந்தநிலையை இவர்கள் மாற்றிக் கொண்டால் வாழ்க்கையில் முன்னேறலாம்.

5 14 23 ம் தேதி பிறந்தவர்களின் பொதுவான குணங்கள்


இந்த எண்ணின் ஆதிக்கக் கோள் அறிவன்(புதன்).பிறப்பு எண் 5ந்தைப் பெற்று பிறந்தவர்கள் எந்த விதமான சிக்கலான விவகாரங்களையும் தீர்த்து வைப்பதில் வல்லவர்கள்.
           பகைவர்களையும் ஒன்று படுத்தி வைப்பதில்தீரர்களாக இருப்பார்கள். எனினும் பிறர் ஆலோசனைகளையும் கேட்டு நடப்பார்கள். பெரிய தொழிற் சாலைகளை நிர்வகிக்கக் கூடியவர்களும், தலைவர்களாகவும் , நீதிபதிகளாகவும் கூட இருப்பார்கள். இவர்களின் வேலை செய்பவர்களிடம் அன்புடன் நடப்பார்கள். இந் இவர்களில் பெரும்பாலோர் உயரமாக இருப்பார்கள். வசீகரமானமுகமும், எவரையும் ஈர்க்கும்காந்தக் கண்களும் கொண்டவர்கள். எதையும் மனதில் வைத்துக் கொள்ளத் தெரியாதவர்கள். மனதில் தோன்றுவதை உடனே வெளியே பேசும் தன்மை கொண்டவர்கள். வேகமாக சிந்திக்கும் ஆற்றல் படைத்தவர்கள். அதே போன்று வேகமாக செயல் படத் துடிக்கும் எண்ணம் கொண்டவர்கள். எதிலும் வேகமே இவர்களின் லட்சியம். எவ்வளவு பெரிய காரியமானாலும் துணிந்து செயல் படுவார்கள். மற்றவர்களால் முடியாததை தன்னால் செய்ய முடியும் என்பதே இவர்களது எண்ணம். புதிது புதிதாக எதையாவது செய்து பேரும், புகழும் பெற வேண்டும் என்பதே இவர்கள் லட்சியம். முடிந்தவரையில் அடுத்தவர்களின் உதவியை பெற மாட்டார்கள். தானாகவே எதையும் செய்து முடிக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.  இவர்களால் அதிகஅளவில் சம்பாதிக்க முடியும். அதேசமயம் செலவு செய்வதிலும் சலித்தவர்கள் அல்லர். சேமிப்பு பற்றி கவலை படாதவர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்ய சிறிதும் தயங்க மாட்டார்கள். இதனால் இவர்களைக் கொண்டு எந்தக் காரியத்தையும் செய்து கொள்ளலாம். இவர்கள் மனதில் தோன்றியஎண்ணப்படி நடப்பதால் எவ்வளவு பெரியதுன்பம் வந்தாலும் அதிலிருந்து எளிதாக விடுபட்டுவிடுவார்கள். அரசியல், விஞ்ஞானம், ஆன்மீகம்போன்றவற்றில் இவர்களதுபங்கு அதிகம் இருப்பதைக் காணலாம். அறிவன் ஆதிக்கம் இருப்பதால் கணிதம், சட்டம் போன்றவற்றிலும் பிரகாசிப்பார்கள். கண்டதும் காதல் எனும் வகையை சேர்ந்தவர்கள். எனவே அவசரமாக திருமணம் செய்துகொண்டு பின்னால் வருந்து பவர்களும் உண்டு. நன்குயோசித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும். இல்லை யெனில் மணவாழ்க்கை சிறப்பாக இருக்காது. கருத்து வேற்றுமைஏற்படவாய்ப்புண்டுசமயங்களில் அதுவே பெரிய சண்டையாக மாறி விடும். குடும்ப வாழ்க்கையை விட வெளி வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்துவார்கள். அதனால்உற்சாகம் அடைவார்கள். இவர்கள் உடல் வலிமையை விட மன வலிமை அதிகம் கொண்டவர்கள். கடுமையாக சிந்திக்கக் கூடியவர்கள். ஆதலால் மனம் அலை பாய்ந்து அமைதி இழக்கும். இதனால் நரம்புத்தளர்ச்சி, வாதம், மூளை தளர்ச்சி போன்ற நரம்புத் தொடர்பான நோய்கள்ஏற்படும். பெயர் எண் சரியாக அமையாது போனால் சோம்பலான சாதாரண வழ்க்கையினை வாழ்வார்கள்.

4 13 22 31ம் தேதி பிறந்தவர்களின் பொதுவான குணங்கள்

        இந்த எண்ணின் ஆதிக்கக் கோள் இராகு ஆகும்உள்ளவர்கள். தன் சொந்த முயற்சியில் ஏதேனும் ஒன்றை உருவகப் படுத்துவதில் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள். 
          இந்த  தேதியில் பிறந்தவர்கள், விஞ்ஞானகணித ஆராய்ச்சியில் இறங்கி அதில் புகழ் பெறுவர். . இவர்கள் தன் நலம் கருதாது ,பொது மக்கள் சேவையிலும் ஈடு படுவார்கள். பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற கொள்கையை உடையவர்கள். இவர்கள் போக்கைப் பற்றி பிறர் என்ன கூறினாலும் அதை காதில் போட்டுக் கொள்ள மாட்டார்கள். தன் திட்டப் படியே நடப்பார்கள். இவர்களுக்கு அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்காது. கிடைத்தது போது மென்ற மனம்  இவர்களில் பெரும் பாலோர் நடுத்தர உயரமுடையவர்களாகவே இருப்பார்கள். இரட்டை நாடி உடையவர்கள் ஆகவும், கண்கள் சிறியதாகவும் காணப் படுவார்கள். பெரிய தலையும், அடர்த்தியான தலைமுடியும் கொண்டவர்களாக இருப்பார்கள். மிகவும் பரந்த மனப்பான்மை கொண்டவர்கள். அதே சமயம் மிகவும் உணர்ச்சி வசப் படக் கூடியவர்கள். மிகவும் சிரமத்துடனேயே இவர்கள் பொருள் ஈட்ட வேண்டியது இருக்கும். ஆனால் கிடைத்த பணத்தை மிகவும் மகிழ்ச்சியுடன் செலவுசெய்வார்கள். நல்ல பேச்சாளர்கள். எழுத்தாலும், பேச்சாலும் சமூகத்தை சீர் திருத்த பார்ப்பார்கள். எப்போதும் மற்றவர்கள் பேசும் வார்த்தைக்கு எதிர் வார்த்தையே பேசுவார்கள். எவரையும் நம்ப மாட்டார்கள். நன்கு தீர விசாரித்த பின்பே நம்பும் தன்மை கொண்டவர்கள். அதிக நண்பர்கள் இவர்களுக்கு இருக்க மாட்டார்கள். அதிக அளவு புத்தி கூர்மை உள்ளவர்கள். எனவே வாழ்க்கையை தீவிரமாக ஆராயும் தன்மை கொண்டவர்கள். எல்லா வற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள.ஒரு செயலில் ஈடு பட்டால் அதை முடிக்கும் வரை ஓயமாட்டார்கள். அதிக அளவில்பணம் சம்பாதிப்பார்கள். ஆனால்சேமிக்கும் பழக்கம் இவர்களிடம் இல்லை கையில் பணம் இல்லா விட்டாலும் மிக்க மகிழ்ச்சி உடனேயேஇருப்பார்கள்.பொறாமை இவர்களிடம் கிடையாது. சிறு வயதில் ஓடி விளையாடுவதிலும், சுகமானவாழ்க்கையிலும்,முன்னேற வேண்டுமென்ற எண்ணம் இருக்கும். ஆனால் வயது ஆக ஆக வேதாந்தஎண்ணங்கள் மனதில் தோன்றி அதில் ஈடுபடுவார்கள். அரசியல், சட்டம், மருத்துவத்துறை போன்றவற்றில் சிறந்து விளங்குவார்கள்.தரகுத் தொழிலும் லாபமுடையதே. காதல் என்பதை சிந்திப்பதற்கே நேரம் இல்லாதவர்கள். ஆனாலும் இளம் வயதிலேயே இவர்களுக்கு திருமணம் நடைபெற்று விடும். பெற்றோர்கள் பார்த்து நடத்தி வைக்கும் திருமணமாகவே இருக்கும். இவர்களில் பெரும் பாலோருக்கு பித்தத் தொடர்பான நோய்கள் ஏற்படலாம். அதனால் பித்ததொடர்பான பொருட்களை தவிர்ப்பது நல்லது. பலமின்மை, சோகை, குடல், தலை, இடுப்பு போன்றவற்றில் நோய்கள் ஏற்படலாம் துணிச்சலும்,பலமும் மிக்கவர்கள். அதிக அளவு கண்டிப்புதன்மை கொண்டவர்கள். உணவு உண்பதிலும், இல்லறத்திலும் மிதமாக இருக்க வேண்டியது அவசியம். இனிமையாகவும், கவர்ச்சியாகவும் பேச பழகுதல் நன்மை பயக்கும். சிறு வயதில் இருந்தே துன்பத்தை அனுபவிக்க வேண்டி வரும்.மிக்க வல்லமைஉடைய இவர்கள் நேர்மையுடனும், நாணயமாகவும் நடந்து கொண்டால் உயர்ந்த நிலையை அடையலாம். மனவலிமையும்,மனோஆற்றல் கொண்டவர்களாகவும் விளங்குவார்கள். மித மிஞ்சிய புத்தி கூர்மை உடையவர்கள். இவர்கள் சாதாரணமானவர்கள் அல்லர். வேதாந்த எண்ணங்களில் ஈடுபாடு கொண்டவர்கள்.4ம் எண்ணில் பிறந்தவர்களுக்கு நன்மை தரும் நிறம்மஞ்சள். கோமேதகம் அதிக நன்மை தரும் கல்லாகும்.தெற்கு திசை நன்மை தரும். மிக்க வல்லமை உடைய இவர்கள் நேர்மையுடனும், நாணயமாகவும் நடந்து கொண்டால் உயர்ந்த நிலையை அடையலாம். இந்த தேதியில் பிறந்தவர்கள் துணிச்சலும், பலமும் மிக்கவர்கள். அதிக அளவு கண்டிப்பு தன்மை கொண்டவர்கள். உணவு உண்பதிலும், இல்லறத்திலும் மிதமாக இருக்க வேண்டியது அவசியம்.இனிமையாகவும், கவர்ச்சியாகவும் பேச பழகுதல் நன்மை பயக்கும். நிர்வாகத்திறமையும், சாமர்த்தியமும் உடையவர்கள். நேர்மையுடனும், நாணயமாகவும் நடந்துகொள்வது நலம்.இந்த தேதி பிறந்தவர்கள் தைரியசாலிகளாகவும், மனவலிமையும், மனோஆற்றல் கொண்டவர்களாகவும் விளங்குவார்கள்.  பெயர் எண் சரியாக அமையாதவர்கள், சிறு வயதில் இருந்தே துன்பத்தை அனுபவிக்க வேண்டி வரும்.