ஜோதிடம். பலிக்குமா...
சித்தர்களும் முனிவர்களும் ஜோதிடத்தை நமக்கு அளித்த மகான்களும் பலநூறான்டுகள், கிரகங்களையும் அவைகள் இடம் பெயரும் போது நமது வாழ்க்கையில் என்ன நடக்கிறது. குறிப்பிட்ட கிரக நிலை இருக்கும் போது பிறந்த நபரின் வாழ்வின் ஏற்றத்தாழ்வு எந்த அடிப்படையில் உண்டாகிறது என அனைத்தையும் கண்டறிந்து, அதனை எதிர்காலம் அறியும் கணிதமாக மாற்றி அமைக்க முடியுமா? என ஆராய்ந்து அவரவர்களின் ஆய்வு முடிவுகளை வெளியிட்டு உள்ளார்கள். எல்லா பலன் அறியும் வழிகளும் கிரகங்களை கொண்டே என்பதால் கணிதம் செய்வது பொதுவான ஒன்றாகவே இருக்கிறது.
பலன் அறியும் வழிமுறை மட்டும் பலவிதமான ஆராய்ச்சி முடிவுகள் கொண்டவைகளாக பலவிதமான வழிமுறைகள் கொண்டு இருக்கிறது.
இவற்றில்.....
திசாபுத்தி மட்டுமே பலன் தரும் என்போரும்...
அஷ்டவர்க கணிதமே...
நாடி ஜோதிடமே....
நட்சத்திர சாரம் உப அதிஉப பாதாதிபரே எனவும்.... இன்னும் அனேக பலன் கூறும் வழிகள் இருக்கிறது.
இதில் அனைத்துமே உண்மையானது... அனைத்துமே சக்திவாய்ந்தது... அனைத்துமே நாம் பிறந்த விநாடி யில் நம்மீது பதிந்த கிரக அமைப்பினை கொண்டு கணித்தவைகளே...
இதில் பொய் உண்மையென இரண்டு இருக்க சாத்தியம் இல்லை. உண்மை மட்டுமே...
இதில் பொய் உண்மையென இரண்டு இருக்க சாத்தியம் இல்லை. உண்மை மட்டுமே...
ஒரு புகைவண்டி தினமும் ஒரிடத்திலிருந்து காலை 6 மணிக்கு கிளம்பி இன்னோரிடத்தை மதியம் 12 மணிக்கு அடைகிறது. அங்கே கிளம்பி மாலையில் மீண்டும் வேறோ் இடத்தை அடையும் என்று கொண்டால் அங்கே நடுவில் இருக்கும் ரயில் நிலையத்தில் நிற்கும் ஒருவர் தன்னுடைய கடிகாரத்தில் 12 மணி நெருங்கும் போது சில நிமிடங்களில் ரயில் வந்து விடும் என்று கூறலாம்.
இங்கே கடிகாரத்திற்கும் ரயிலுக்கும் நேரடி சம்பந்தமில்லை. கடிகாரத்தில் காணும் நேரத்தை வைத்துக் கொண்டு ரயிலின் வருகையை கணிக்கிறோம். சில தவிர்க்க முடியாத காரணத்தினால் வண்டி தாமதமாக வரலாம்... மிகவும் அபூர்வமாக வண்டி வராமலே கூட போகலாம்.
அதுபோலவே... நமது ஞானியர் கணித்து வைத்த பலன்கள்... நமது முன் ஜென்ம அல்லது இப்பிறப்பில் செய்த நல்ல தீய கர்மாவின் தலையீட்டால்... சற்று தாமதமாக வரலாம். அல்லது, வராமலே கூட போகலாம்.
அனைத்து விசயங்களையும் பிசிரில்லாமல் தருவது கிரகங்கள் மட்டும் அல்ல.... மழை வரலாம் என்று வானிலை அறிக்கை சொன்னால் குடை கொண்டு செல்வது போல... நமது வினைப் பயன்களின் விளைவுகளையும் தெரிந்துகொண்டால்... அவற்றை எதிர்கொள்ள போராட தயாராகலாம். இது தான் ஜோதிட கணிப்புகள் மூலம் கிடைக்கக் கூடிய நன்மை. நம் வாழ்வில் நடக்கும் எல்லாமே முன்வினைப் பயன்கள் மூலம் தீர்மானிக்கப்பட்டவை அல்ல. வண்டி வருவது ஜாதகம் பார்த்து ஜோதிடர் அறிவிப்பார். தங்களின் நற்கர்மாவே அதனை நமக்கு ஏற்ற படி பயனுள்ள படி அனுபவிக்க வழி செய்யும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
காலம் முழுக்க தீய கர்மா செய்துவிட்டு, திடீரென தனது அதிகாரம்.. பதவி... பணபலம் கொண்டு புண்ணியம் செய்கிறேன் என செய்யும் காரியங்கள் அடியில்லாத பாத்திரங்களில் ஊற்றிய நீராக காணாமல் போகும். நற்செய்கை என்பது நமது ஆன்மாவில் இருந்து உண்டாகும் விசயம். ஊரையே கொளுத்தி விட்டு.... யாகதீயினால்... இறைவனை பணம் கொண்டு கருவரையில் காண்பதால் மட்டும் நற்பலன் அடைய முடியாது.
பரிகாரம் என்பது இனி எனது வழி அறவழியே என்ற பிரமாணத்தினால் செயல்படும்....
அன்பினால் உயர்வு பெறும்...
பண்பினால் உறுதி பெறும்....
அன்பினால் உயர்வு பெறும்...
பண்பினால் உறுதி பெறும்....
No comments:
Post a Comment