சூரியன் ஏன் இராஜாவாக உள்ளது.?
நவ கிரகங்களில் சூரியனை நாம் அரசனாக பார்க்கிறோம். அரசனுக்கான பண்புகள் என்ன அதை எப்படி சூரியனிடம் மட்டும் இருக்கிறது என நூல்கள் கூறுகிறது என்ற ஆய்வின் முடிவுகளை வெளியிடுகிறேன்.
சந்திரன்....
தனது இல்லம் வந்த குருவிற்கு பலமளித்து செவ்வாயினை பலவீனமாக்குகிறார்.
செவ்வாய்....
தனது இல்லம் வந்த சூரியனை பலமாக்கி.. சந்திரன்... சனியை பலவீனமாக்குகிறார்.
புதன்....
தனது இல்லம் வந்த சுக்கிரனை பலவீனமாக்கி தன்னை மட்டுமே பலமாக்கி கொள்கிறார்.
குரு.....
இல்லம் வந்த சுக்கிரனை எதிரணியானாலும் பலமாக்கி புதனை பலவீனமாக்குகிறார்.
சுக்கிரன்.....
இல்லம் புகுந்த சந்திரன்... சனியினை பலமாக்கி சூரியனை பலவீனமாக்குகிறார்.
சனி......
தன்னிடம் வந்த குருவினை பலவீனமாக்கி செவ்வாயினை பலமாக்கி வைக்கிறான்.
ஆனால்... நமது சிங்கம் மட்டும் இந்த விசயத்தில் அடக்கி வாசிக்கும்.
பகையாளியினை கூட பலவீனமாக்காத அற்புதமான பண்பு... அதனால் தான் சூரியன் ராஜாவாக மதிக்கப்படுகிறது.
குடிமக்களில் நல்லவரும் இருப்பார் தீயவரும் இருப்பார். உறவும் இருக்கும் பகையும் இருக்கும். இப்ப சொல்லுங்கள்.
ஏதோ புரிவது போல உள்ளதா....??????
No comments:
Post a Comment