05 April 2016

எல்லா விசயங்களையும் சொல்றீங்களே?

கேள்வி: 
இப்படி பலன் கூறும் ரகசியங்களை முகநூலில் பதியும் போது.... உங்கள் தனித்துவமான முறையினை எப்படி பாதுகாப்பீர்?

பதில்:
அறிவும்....
பணமும்....
இன்னும் எதாகிலும் என்ன?
நாம் எதை கொண்டு வந்தோம்
இழப்பதற்க்கு
எதை உணர்ந்தாலும்
கண்டு அறிந்தாலும்
அது இறைவனால் உருவாக்கப்பட்டதே
ஜோதிடம்...
இன்று ஒருவருக்கு கூறும் பலன்கள்
நாளையே இன்னொருவருக்கு பலனுரைக்கும் போது வருவதேயில்லை....
வந்தாலும் அது பொருந்துவதும் கடினமாக இருக்கிறது.
இதில் மறைத்து ஒழிக்க என்ன உள்ளது
கண்டறிந்த விசயங்களை நான் உருவாக்கவில்லை. எதற்கு மறைக்க....
சித்தர் பெருமக்கள் அப்படி நினைத்திருந்தால் நானும் நீங்களும் இன்று சேர்ந்து இருக்க மாட்டோம்.
ஞானிகளின் சிந்திய எச்சங்களின் மிச்சங்கள் கூட நமது ஆயுளின் நீளத்தில் புள்ளியிலும் புள்ளியாக எங்கோ ஒரு தூரத்தில்....
இதில்... பெரியவரும் சிரியவரும்... யார் உள்ளார்கள்.
என்னிலும் எல்லோரும் வலியோரே....
ஜோதிடம் நல்வழி காட்டட்டும்
ஜோதிடம் நற்கதி நல்கட்டும்
நல்லதே சொல்லலாம்...
நல்லதே நடக்கட்டும்...
நடக்கும்.

No comments:

Post a Comment