05 April 2016

காதல்.... சாதல்.... மோதல்.... யாருக்கு அமையும்?

காதல்.... சாதல்.... மோதல்....
லக்கினத்தோனின் ஏழாமிட சம்மந்தமே நல்ல மனையாளின் காதலுக்கான முதல் படிநிலையாகும்.

இரண்டாம் இடத்தோன் மற்றும் சுக்கிரன், மற்றும் கொஞ்சம் புதன் தொடர்பு, இவர்களே நமது கனவுகள் கற்பனைகள் வர்ணிப்புகளை உருவாக்கி... அதனையே உலகமாக மாற்றும் அதியுன்னத பணியிணை செய்கிறார்கள். கற்பனையான வர்ணிப்புகள், காதல் வந்தவுடன் தாண்டவம் ஆடுகிரதல்லவா அது இப்படித்தான்.

நான்குக்கு உடையவர் மற்றும் சந்திரன் இவர்களின் உதவியினாலே... ஒருவரது காதல் உடல் சார்ந்த அல்லது மனம் சார்ந்த... புனித காதல்.. அமர காதல்... இன்பக்காதலை கூறிட்டு பார்க்கும் படி வைக்கும்.

6ம் இடம் அசுர காதல்... பற்றி தனி ஆய்வுக்கு எடுக்கலாம்.(பலாத்காரம் இதில் இருக்கும்) 

இவற்றினால் நாம் பெறும் பலன்களை நிச்சயமாக இராகுவே நிர்ணயிக்கிரான். செவ்வாய் சனியோடு சேராத இராகு காதலை வாழ வைக்கவும் செய்கிறான். துஷ்ட ஸ்தானங்களில் இருக்கும் கிரகங்களினால்... காதல் தடையுடன் முடிவு பெறுக்கிறது.

இதில் சில கிரக பார்வை சேர்க்கையால் நல்ல தீய என நாம் பிரித்து பார்த்து கூறிம்போதும்... காதல் சுமையாகும்.

இறைதூதர்களின்... துறவிகளின்... பிரமச்சாரிகளின் காதல், உலகத்தையே வசமாக்கும்.
இவர்களின் காதல் உயர்வானது. இவற்றில் குருபகவானின் விளையாட்டினால் இவர்களுக்கு திருமணம் அமையாது போகும்.... சூரியன்+சுக்கிரன் பதம் பார்க்க இவர்களை காதல் உலகம் அறியும் படி ஆகும்.

No comments:

Post a Comment