இறந்து வீடு அடைப்பில் (தனிஷ்டா பஞ்சமி) உள்ளவர்கள் நல்ல விசேசங்களில் கலந்து கொள்ள கூடாதா?
×++++++++++++++++++++++++++++++++++++++++++++++×
×++++++++++++++++++++++++++++++++++++++++++++++×
இறந்தவர்களின் ஆத்மா மேல் உலகம் செல்ல தடையுள்ள நட்சத்திரம்ங்களே தனிஷ்டாபஞ்சமி தினங்களாகும். இதில் இறந்த ஆன்மா மேலுலகம் செல்லாது நம்மையும் வாழ்ந்த வீட்டினையும் சுற்றிவரும். எல்லா ஆன்மாக்களும் பாசிடிவ் அலைவரிசையில் சேர்ந்து விடுவது இல்லை.
தீராத ஆசைகள்... துவேசம் கொண்ட ஆன்மாக்களும் இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில், நாம் வீட்டில் உடணடியாக விசேசங்கள் செயும் போது அந்த ஆன்மா துன்பப்படும். நேர்த்திகடன்.... பெரிய விரதம் இருப்பதால் நாம் நல்ல சக்தியால் வீட்டினை நிறைக்கும் போது அந்த ஆன்மாவினால் வீட்டிற்கு வரமுடியாமல் போகலாம். அதனால் ஆன்மாவானது நம்மை சபிக்கும் நிலையும் உண்டாகும்.இதை தவிற்க்கவே...வீட்டில் சுப காரியங்கள் செய்யக்கூடாது என பொதுவில் சொல்லி வைத்துள்ளார்கள்.
இந்த நிலையில் உள்ள நபர்கள்.....
இறப்புக்கு பின் முப்பது நாட்கள் கழித்து புண்ணிய க்ஷேத்திரங்களில் பூஜைகள் செய்வது நன்மையினை அளிக்கும். பூஜை என்பது நமது கர்மாவினை சார்ந்த விசயம். அதனால் பித்ரு தோஷம் நீங்க நமது பித்ருக்களே ஆசிர்வாதம் தர வழியுண்டாகும்.
No comments:
Post a Comment