05 April 2016

ஜோதிடம் உண்மையா பொய்யா?

ஜோதிடம். பலிக்குமா...
சித்தர்களும் முனிவர்களும் ஜோதிடத்தை நமக்கு அளித்த மகான்களும் பலநூறான்டுகள், கிரகங்களையும் அவைகள் இடம் பெயரும் போது நமது வாழ்க்கையில் என்ன நடக்கிறது. குறிப்பிட்ட கிரக நிலை இருக்கும் போது பிறந்த நபரின் வாழ்வின் ஏற்றத்தாழ்வு எந்த அடிப்படையில் உண்டாகிறது என அனைத்தையும் கண்டறிந்து, அதனை எதிர்காலம் அறியும் கணிதமாக மாற்றி அமைக்க முடியுமா? என ஆராய்ந்து அவரவர்களின் ஆய்வு முடிவுகளை வெளியிட்டு உள்ளார்கள். எல்லா பலன் அறியும் வழிகளும் கிரகங்களை கொண்டே என்பதால் கணிதம் செய்வது பொதுவான ஒன்றாகவே இருக்கிறது.

நவகிரக தேவதா யக்ஞ பூஜை 16-04-2016

நவகிரக தேவதா யக்ஞ பூஜை.
""""""""""”""""""""""""""""""""""""""""""""
நவகோள்களின் அருள் கடாக்க்ஷம் பெறும் அற்புத சக்தி தரும் யாகவேள்வி பூஜை...
பரிகார ஸ்தல பூமியாகிய கொடுமுடி யில் நடத்த திருவருள் கிடைத்துள்ளது.
அன்பர்களின் துயர் தீர்க்கும் காரிய சித்தி புணித ரக்க்ஷை இந்த பூஜையின் பிரசாதமாக ஏற்பாடாகிறது. அற்புதமான பலனை உண்டாக்கும் வல்லமை பெற்ற பூஜையினை கூட்டுவழிபாடாக நடத்த உள்ளோம். சங்கல்ப்ப காணிக்கை ரூபாய்600 மட்டுமே.
இடம்:கொடுமுடி
நாள்: 16.04.2016 சனிக்கிழமை

நிகழ்வுகள்....
காலை 6.00மணி பூஜை ஆரம்பம்.
7.00am கணபதி, கிராமதேவதா பூஜை
8.44am சங்கல்ப்பம் நவகிரக பூஜாரம்பம்
12.30pm யக்ஞ பூர்ணாகுதி...
1.30pm பிரசாதம் வழங்குதல்...

வெளியூர் நன்பர்களுக்கு பிரசாதம் தபாலில் அனுப்பப்படும். கட்டணம் வங்கியில் செலுத்தவும்.
நன்றி.. நன்றி... நன்றி...

மறை ஞானம் அறியலாமா?

பொதுவாக இரண்டு மூன்று எட்டாம் இடங்களின் தொடர்புகளே மறைபொருள் ரகசிங்களை உணர உதவும்.
இதனுடன் புதன் சனி இவர்களின் தொடர்பினையும் பார்த்தால் இது பற்றி அறியலாம்

திசை... புத்தி... அந்தரம் கணிக்க...

திசை... புத்தி... அந்தரம் கணிக்க...
~~~~~~~~~~~~~~~~~~
நமக்கு தேவையான திசையில்... தேவையான புத்தி கண்டு பிடிக்க...
உதாரணமாக....
சுக்ரனில் சந்திர புத்தி
சுக்20×சந்10=200 இதை கடைசி ஒறு இலக்கத்தினை மட்டும் மூன்றில் பெருக்கி நாளாகவும்.... முன்னால் உள்ளதை புத்தியின் மாதமாகவும் வைத்து கொள்ள துல்லியம். சுக்..சந்.புத்தி 20மாதம் 0நாள்.

அந்தரம் காண...
~~~~~~~~~~~
பெருக்கி வந்த தொகையை 200 அதனை நாட்களாக்க 30ல் பெருக்கவும் அதனுடன் மொத்த திசாவருடங்கள் 120ல் வகுத்தால் வரும் விடையுடன் தேவையான அந்தர நாதனின் வருடம் பெருக்க கிடைப்பதே...
அந்தர நாள்கள்.
6000÷120=50 சுக்...சந்திர அடிப்படை எண்
இதில் சூரியன் அந்தர காலம் காண...
50×6சூரி=300 இதில் கடைசி இலக்கத்தில் புள்ளி வைத்து முன் உள்ளதை நாளாக பயன்படுத்தவும்.
சுக்...சந்திர...சூரிய அந்தரம்... 30.0 நாட்கள்.
விடை சரியா என பார்த்து பழக எளிமையாக வரும்.

அந்தரம் காண இன்னும் எளிய வழி..
திசை×புத்தி×அந்தரம்÷40= அந்தர நாள்.
சுக்20*சந்10*சூரி6/போது40=அந்தர நாள்30

காதல்.... சாதல்.... மோதல்.... யாருக்கு அமையும்?

காதல்.... சாதல்.... மோதல்....
லக்கினத்தோனின் ஏழாமிட சம்மந்தமே நல்ல மனையாளின் காதலுக்கான முதல் படிநிலையாகும்.

இரண்டாம் இடத்தோன் மற்றும் சுக்கிரன், மற்றும் கொஞ்சம் புதன் தொடர்பு, இவர்களே நமது கனவுகள் கற்பனைகள் வர்ணிப்புகளை உருவாக்கி... அதனையே உலகமாக மாற்றும் அதியுன்னத பணியிணை செய்கிறார்கள். கற்பனையான வர்ணிப்புகள், காதல் வந்தவுடன் தாண்டவம் ஆடுகிரதல்லவா அது இப்படித்தான்.

நான்குக்கு உடையவர் மற்றும் சந்திரன் இவர்களின் உதவியினாலே... ஒருவரது காதல் உடல் சார்ந்த அல்லது மனம் சார்ந்த... புனித காதல்.. அமர காதல்... இன்பக்காதலை கூறிட்டு பார்க்கும் படி வைக்கும்.

6ம் இடம் அசுர காதல்... பற்றி தனி ஆய்வுக்கு எடுக்கலாம்.(பலாத்காரம் இதில் இருக்கும்) 

இவற்றினால் நாம் பெறும் பலன்களை நிச்சயமாக இராகுவே நிர்ணயிக்கிரான். செவ்வாய் சனியோடு சேராத இராகு காதலை வாழ வைக்கவும் செய்கிறான். துஷ்ட ஸ்தானங்களில் இருக்கும் கிரகங்களினால்... காதல் தடையுடன் முடிவு பெறுக்கிறது.

இதில் சில கிரக பார்வை சேர்க்கையால் நல்ல தீய என நாம் பிரித்து பார்த்து கூறிம்போதும்... காதல் சுமையாகும்.

இறைதூதர்களின்... துறவிகளின்... பிரமச்சாரிகளின் காதல், உலகத்தையே வசமாக்கும்.
இவர்களின் காதல் உயர்வானது. இவற்றில் குருபகவானின் விளையாட்டினால் இவர்களுக்கு திருமணம் அமையாது போகும்.... சூரியன்+சுக்கிரன் பதம் பார்க்க இவர்களை காதல் உலகம் அறியும் படி ஆகும்.

காதல் திருமணம் ஏன் கசக்கிறது?

காதல் என்பது = புதன்
திருமணம் என்பது = செவ்வாய்

புதனின் 6 அல்லது 8 வீடு செவ்வாய் வீடு வரும்.

மிதுனத்திற்கு (புதன்) ஆறாம் இடம் விருச்சிகம்.(செவ்வாய்)
கன்னிக்கு (புதன்) எட்டாம் இடம் மேஷம்.(செவ்வாய்)

அதனால் தான் அதிகபட்சம் பிரிவும்.. சண்டைகளும்.
இது எப்பூடீ......

எல்லா விசயங்களையும் சொல்றீங்களே?

கேள்வி: 
இப்படி பலன் கூறும் ரகசியங்களை முகநூலில் பதியும் போது.... உங்கள் தனித்துவமான முறையினை எப்படி பாதுகாப்பீர்?

பதில்:
அறிவும்....
பணமும்....
இன்னும் எதாகிலும் என்ன?
நாம் எதை கொண்டு வந்தோம்
இழப்பதற்க்கு
எதை உணர்ந்தாலும்
கண்டு அறிந்தாலும்
அது இறைவனால் உருவாக்கப்பட்டதே
ஜோதிடம்...
இன்று ஒருவருக்கு கூறும் பலன்கள்
நாளையே இன்னொருவருக்கு பலனுரைக்கும் போது வருவதேயில்லை....
வந்தாலும் அது பொருந்துவதும் கடினமாக இருக்கிறது.
இதில் மறைத்து ஒழிக்க என்ன உள்ளது
கண்டறிந்த விசயங்களை நான் உருவாக்கவில்லை. எதற்கு மறைக்க....
சித்தர் பெருமக்கள் அப்படி நினைத்திருந்தால் நானும் நீங்களும் இன்று சேர்ந்து இருக்க மாட்டோம்.
ஞானிகளின் சிந்திய எச்சங்களின் மிச்சங்கள் கூட நமது ஆயுளின் நீளத்தில் புள்ளியிலும் புள்ளியாக எங்கோ ஒரு தூரத்தில்....
இதில்... பெரியவரும் சிரியவரும்... யார் உள்ளார்கள்.
என்னிலும் எல்லோரும் வலியோரே....
ஜோதிடம் நல்வழி காட்டட்டும்
ஜோதிடம் நற்கதி நல்கட்டும்
நல்லதே சொல்லலாம்...
நல்லதே நடக்கட்டும்...
நடக்கும்.

சூரியன் ஏன் இராஜாவாக உள்ளது.?

சூரியன் ஏன் இராஜாவாக உள்ளது.?

நவ கிரகங்களில் சூரியனை நாம் அரசனாக பார்க்கிறோம். அரசனுக்கான பண்புகள் என்ன அதை எப்படி சூரியனிடம் மட்டும் இருக்கிறது என நூல்கள் கூறுகிறது என்ற ஆய்வின் முடிவுகளை வெளியிடுகிறேன்.

சந்திரன்.... 
தனது இல்லம் வந்த குருவிற்கு பலமளித்து செவ்வாயினை பலவீனமாக்குகிறார்.

செவ்வாய்.... 
தனது இல்லம் வந்த சூரியனை பலமாக்கி.. சந்திரன்... சனியை பலவீனமாக்குகிறார்.

புதன்...
தனது இல்லம் வந்த சுக்கிரனை பலவீனமாக்கி தன்னை மட்டுமே பலமாக்கி கொள்கிறார்.

குரு..... 
இல்லம் வந்த சுக்கிரனை எதிரணியானாலும் பலமாக்கி புதனை பலவீனமாக்குகிறார்.

சுக்கிரன்..... 
இல்லம் புகுந்த சந்திரன்... சனியினை பலமாக்கி சூரியனை பலவீனமாக்குகிறார்.

சனி.....
தன்னிடம் வந்த குருவினை பலவீனமாக்கி செவ்வாயினை பலமாக்கி வைக்கிறான்.

ஆனால்... நமது சிங்கம் மட்டும் இந்த விசயத்தில் அடக்கி வாசிக்கும்.
பகையாளியினை கூட பலவீனமாக்காத அற்புதமான பண்பு... அதனால் தான் சூரியன் ராஜாவாக மதிக்கப்படுகிறது.
குடிமக்களில் நல்லவரும் இருப்பார் தீயவரும் இருப்பார். உறவும் இருக்கும் பகையும் இருக்கும். இப்ப சொல்லுங்கள்.
ஏதோ புரிவது போல உள்ளதா....??????

ஆண்டுகளை ஆளும் அரசன் யார்?

ஆண்டுகளை ஆளும் அரசன் யார்?  
@நீங்களே கண்டுபிடிக்கலாம்!
குறிப்பிட்ட வருடத்திற்கு முதல் வருட 
பங்குனி வளர்பிறை பிரதமை, எந்த கிழமையின் சூரிய உதயத்தில் வருகிறதோ...
அந்த கிழமைக்குறிய கிரகமே அடுத்த ஆண்டின்....

இராஜாவாக மன்னனாக முடிசூட்டப்படுகிறார்.

உதாரணமாக......
மன்மத வருட பங்குனி வளர்பிறை பிரதமை...
வெள்ளி கிழமை.
துன்முகி
இராஜா சுக்கிரன்.

சுருக்கமாக இதை இப்படியும் சொல்லலாம்.....
தெலுங்கு வருட பிறப்பு எந்த நாளில் வருகிறதோ அந்த கிழமை அதிபரே அடுத்த ஆண்டின் ராஜாவாகிறார்.

சந்திராஷ்டமத்தில் துலாம்

சந்திராஷ்டமத்தில் துலாம்....
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
(தனி ஆய்வு)
மற்ற ராசிகாரர்களை விட துலாம் ராசி வித்தியாசமானது.
8ல் உச்ச சந்திரன் மறைகிறான்.

அதனால் பெரிய விசயங்களில் நுளைந்து மூக்கறுபடும் சூழ்நிலை வந்தாலும்... 
மனைவியினால் தொழில் முன்னேற்றம் லாபம் உண்டாகும் நாட்களாகவும்... சந்திராஷ்டம நாளே இருக்கிறது.
ஆகவே மனைவிக்கு மரியாதை செய்யுங்கள்.... துலா ராசி அன்பர்களே...
சும்மா ட்ரை பண்ணி பார்த்துட்டு சொல்லுங்க.....

விசேச விதி....
தொழில் காரகன் அதற்கு லாபத்தில் உச்சம்.
அந்த இடம் நமக்கு அஸ்டம ஸ்தானம். ஆனால் மனைவியின் தனஸ்தானம் அதனால் மனைவியின் மூலமாக தன லாபம். தொழில் வளர்ச்சி.

தனிஷ்டாபஞ்சமி வீடு அடைப்பது ஏன்?

இறந்து வீடு அடைப்பில் (தனிஷ்டா பஞ்சமி) உள்ளவர்கள் நல்ல விசேசங்களில் கலந்து கொள்ள கூடாதா?
×++++++++++++++++++++++++++++++++++++++++++++++×
இறந்தவர்களின் ஆத்மா மேல் உலகம் செல்ல தடையுள்ள நட்சத்திரம்ங்களே தனிஷ்டாபஞ்சமி தினங்களாகும். இதில் இறந்த ஆன்மா மேலுலகம் செல்லாது நம்மையும் வாழ்ந்த வீட்டினையும் சுற்றிவரும். எல்லா ஆன்மாக்களும் பாசிடிவ் அலைவரிசையில் சேர்ந்து விடுவது இல்லை. 

தீராத ஆசைகள்... துவேசம் கொண்ட ஆன்மாக்களும் இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில், நாம் வீட்டில் உடணடியாக விசேசங்கள் செயும் போது அந்த ஆன்மா துன்பப்படும். நேர்த்திகடன்.... பெரிய விரதம் இருப்பதால் நாம் நல்ல சக்தியால் வீட்டினை நிறைக்கும் போது அந்த ஆன்மாவினால் வீட்டிற்கு வரமுடியாமல் போகலாம். அதனால் ஆன்மாவானது நம்மை சபிக்கும் நிலையும் உண்டாகும்.இதை தவிற்க்கவே...வீட்டில் சுப காரியங்கள் செய்யக்கூடாது என பொதுவில் சொல்லி வைத்துள்ளார்கள்.

இந்த நிலையில் உள்ள நபர்கள்.....
இறப்புக்கு பின் முப்பது நாட்கள் கழித்து புண்ணிய க்ஷேத்திரங்களில் பூஜைகள் செய்வது நன்மையினை அளிக்கும். பூஜை என்பது நமது கர்மாவினை சார்ந்த விசயம். அதனால் பித்ரு தோஷம் நீங்க நமது பித்ருக்களே ஆசிர்வாதம் தர வழியுண்டாகும்.