25 March 2016

தொழில் தடை என்றால் என்ன? பரிகாரம் உண்டா?

தொழில் தடை என்றால் என்ன? பரிகாரம் உண்டா?

சாதாரணமாக பத்துக்கு உடையவர் 6..8..12 ல் மறைவதையே தொழில் தடை என கூறுகிறோம். ஆனால் இப்படியான அமைப்புகள் உள்ளவர்கள் தொழிலே செய்யாது போகும் நிலையை அடைகிறார்களா எனில் இல்லை.

பத்துக்கு உரியவன்.... ஆறில் இருப்பவர்கள்... குடும்ப பாரம்பரிய தொழில்கள் அமையும்போது சிறப்பாக செயல்படுவார்கள். அதிலும் அடிமை உத்யோகம் உண்டாகும். சம்பள தொழில்கள் சிறப்பாக இருக்கும்.

அடுத்து பத்துக்கு உரியவன் எட்டில் இருக்க பெரும்பாலும் நிதி... வட்டி.... ஆலோசனை... யூக வியாபாரம்... பங்கு... பஞ்சாயத்து... அடிதடி... இப்படியான தொழில் அமையும் போது சிறப்பாக முன்னேறுகிறார்கள்.

பத்துக்கு உரியவன் பனிரன்டில் இருக்கும் ஜாதகர் மட்டும் தைரியமாக முடிவு எடுக்க வேண்டும். தயக்கம் உள்ளவர்கள் இவர்கள் யோசிக்கும் முன்பே குறிப்பிட்ட வாய்ப்பு சென்றுவிடும். திருந்த வேண்டும். சகோதர வகையில் கூட்டு தொழில் அல்லது அவரின் ஆதரவுடன் தொழில் சிறக்கும்.

எப்படி பார்த்தாலும்....
யாரும் எந்த தொழிலும் செய்யலாம்...
யார் வெற்றிப் பெறுகிறார் என்பது மேலேயுள்ள விதியை பொருத்து...
தவறான மோசமான திசையிலும் கூட நமக்கு அனுகூலமான தொழிலில் ஈடுபடும் போது அவ்வளவாக நஷ்டம் உண்டாவது இல்லை. தேவையில்லாத புது செயல்களை செய்து அதன் மூலமாக நஷ்டம் கஷ்டம் அடைகிறோம். அனைவருக்கும் இந்த அனுபவம் உண்டாகி இருக்கும்.

பரிகாரம் என்ன செய்யும்....
குறிப்பிட்ட கிரகத்தின் நல்ல அதிர்வலைகளை நாம் பெறும்போது.... அதனால் நமக்கு உண்டாகும் தேவையில்லாத குழப்பம் வராது போகும். அப்போது.... தேவையில்லாத நஷ்டங்கள் தவிர்க்கப்படும்.
பத்தாமிடம் முழுதும் கெட்டுப்போகும் வாய்ப்பு இல்லாத நிலையில்... நமக்கான துறைகளை தேர்வு செய்ய நவகிரகங்களின் அருளாசி நமக்கு அவசியம் தேவையாகிறது.

தேவையான பரிகாரங்கள் காண அழையுங்கள்... 7667745633

No comments:

Post a Comment