கோவிலில் தீபம் ஏற்றுதல்...
முக்கிய சூட்சுமம்
கோவிலில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதே நமது வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொடுக்கும் சிறந்த வழியாகும்.
எந்த வழிபாடு ஆனாலும் தீபம் ஏற்றுவது மிகவும் முக்கியமான ஒன்றாகும். நல்லெண்ணை... நெய்... அல்லது ஐந்து எண்ணைகள் கலந்து தீபம் ஏற்ற நன்மைகள் பெருகும்.
கோவிலில் தீபம் ஏற்றும் போது கோவிலில் ஏற்கனவே ஏற்றப்பட்ட தீபம் இருப்பின் அதனை உபயோகிக்கும் போது மிக்க நல்ல பலன் உண்டாகும். சந்நிதியில் ஏற்றப்பட்ட தீபம் இறைவனின் தீபமாகவே கருதப்படும்.
தனியாக தீப்பெட்டி மூலம் தீபம் ஏற்றாதீர். பிரகாரத்தில் தீபம் எரியவில்லையெனில் பூஜாரியிடம் இருந்து தீபம் ஏற்றவும். வேறு வழியே இல்லை எனில்மட்டும் தீப்பெட்டி பயன்படுத்த வேண்டும். எப்போதும் இந்த விசயத்தில் கவனமாக இருக்கவும். நெருப்பு தானம் பெறுவதும், அதையே கொடுப்பதும் தெய்வ அனுகிரகத்தை கொடுக்கும்.
தீப்பெட்டி வந்து 60 to 70 ஆண்டுகள் இருக்கலாம். அதற்க்கு முன்னர் நெருப்பு என்பதன் மதிப்பு மிகவும் அதிகம். நெருப்புக்காக யுத்தங்கள் நடந்ததாக கூட வரலாறுகள் உள்ளது. மேலும் நமது முன்னோர்கள் யாரும் சிக்கிமுக்கி கல்மூலம் தீமூட்டி தீபம் ஏற்றி இருக்க மாட்டார்கள். மிகவும் உயர்ந்த அறிய யாகங்களிலே கூட இப்போது புதிய நெருப்பினை உண்டாக்குவது குறைந்து விட்டதனை பார்க்கிறோம்.
நெருப்பு தற்காலத்தில் மிக எளிதாக நினைத்த இடத்தில் கிடைப்பதால்....
மனிதருக்கே உண்டான சிறு மதியின் விளைவாக... தற்போது அடுத்தவர் ஏற்றிய தீபம் மூலம் அவருடைய தீய கர்மா நம்மை அடையும் என புரளிகள் கிளம்பி, நாமும் அப்படியே நினைக்கும் படி ஆகி விட்டது. நெருப்பு பரிசுத்த குணமுடையது. அதனால் அசுத்தம் அடையவே முடியாது என்பதனை ஆராய்ந்து உணருங்கள்.
மனிதருக்கே உண்டான சிறு மதியின் விளைவாக... தற்போது அடுத்தவர் ஏற்றிய தீபம் மூலம் அவருடைய தீய கர்மா நம்மை அடையும் என புரளிகள் கிளம்பி, நாமும் அப்படியே நினைக்கும் படி ஆகி விட்டது. நெருப்பு பரிசுத்த குணமுடையது. அதனால் அசுத்தம் அடையவே முடியாது என்பதனை ஆராய்ந்து உணருங்கள்.
நலம்
வளம்
உங்களை சேரட்டும்.
வளம்
உங்களை சேரட்டும்.
V.V.பொன்தாமரைக்கண்ணன்
DHA., DNS.,
ஶ்ரீராம் ஜோதிட ஆராய்ச்சி மையம்.
கொடுமுடி
7667745633
DHA., DNS.,
ஶ்ரீராம் ஜோதிட ஆராய்ச்சி மையம்.
கொடுமுடி
7667745633
No comments:
Post a Comment