யார் கடனாளி.... பரிகாரம் உண்டா?
கடன் பட்டான் நெஞ்சம் போல கலங்கினான்.... என்று ராமாயணத்தில் ஆன்றோர்கள் பதிகிறார். இதனால் கடன் என்பது அன்றும் இன்றும் நம்மை வருத்தம் அடைய வைக்கிறது என்பதனை புரிந்து கொள்ள முடிகிறது.
கடன் என்பது வெறும் பணம் சம்பந்தப்பட்ட வகையில் மட்டுமேஇருக்காது. கர்ணன் துரியோதனனிடம் பட்டது ஒருவகை கடனாகும். அதனால் அவன் அதர்மத்தின் பாதையில் செல்லும் அளவுக்கு கட்டுப்படுத்தியது. இதுபோலவே... துரோணர் முதலான ஆச்சாரியார்களும் கடனாளிகளே... அதனால் அவர்கள் அடைந்த மன வேதனை மிக பெரிது.
கடன் கிடைக்குமா?
இலக்கினத்திற்கு இலக்கினாதிபருக்கு, புதன் சம்பந்தப்பட்ட ஜாதகர்கள் கடன் வாங்கி செலவு செய்ய தூண்டப்படுகிறார்கள்.
இத்துடன் ஆறுக்கு உடையவன் சம்பந்தம் உண்டானால் கடனாளியாகிறார்கள். இதனுடன் சேர்ந்து உள்ள கிரகங்களின் தன்மைக்கு ஏற்ப, எதற்க்காக கடன்... எதில் கடன் என்ற விபரம் அறியலாம்.
பரிகாரம் செய்தல் கடனில் எப்படி செயல்படும்...
கடன் என்பது நமது பலவீனமே ஆகும். பரிகாரம் செய்யும்போது கடனுக்கு உண்டான ஸ்தலம் அல்லது ருண நிவர்த்தி பூஜைகளினால் எந்த செலவானாலும் கடன் வாங்கலாம் என்ற, மனநிலையினை அதற்க்கான சூழ்நிலையினை நாம் உருவாக்க முடியாது போகும்.
இத்துடன்... நமக்கு சாதகமாக உள்ள கிரகங்கள் சுபபலம் பெறுவதே இதில் முக்கிய பங்காற்றும். சுபபலம் காரணமாக நமது சம்பாதிக்கும் திறன் அதிகரித்து நிச்சயமாக வருமானம் உயரும். கிரகங்களின் தீய வீரியம் குறைந்து நமது வீண் செலவுகளும் குறையும். எதுவும்... புதிதாக கிடைப்பதும் இல்லை. புதிதாக இழக்கப்போவதும் இல்லை. எதுவாக இருந்தாலும் சுய ஜாதக பலனே பிரதானம். அதினை உபயோகிக்கும் அனுமதி சர்வ சுதந்திரமானது. இறைவனின் அந்த அனுமதியினை முறைபடுத்தி வாழ்வில் உயரலாம்.
மேலும் ஆலோசனைகளுக்கு 7667745633