விதியின் கொடுமையில் இருந்து தப்பிக்க விதி அமைத்துக் கொடுத்துள்ள ஒரு அற்புத வரமே எண்கணித கலையெனும், நியூமராலாஜி கலையாகும். ஜோதிட சாஸ்திரத்தில் பரிகார முறை இருக்கிறது. நாம் சரியான பரிகார முறைகளை தெரிந்துகொள்வதும், பின்னர் அதனை செய்வதும், பின்னர் கிரகங்களின் சஞ்சார நிலைகள், திசாபுத்தி மாறுதல்கள் மூலமாக நாம் மீண்டும் மீண்டும் பரிகாரங்கள் செய்ய வேண்டி வருகிறது. இந்த நிலையில் நமக்கு சக்திவாய்ந்த பரிகார முறையாக எண்கணிதம் எனும் நியூமராலாஜி கலையினை பயன்படுத்த முடியும்.
நமது பிறப்பு எண், விதி எண், மற்றும் ஹீப்ரு உயிர் எண் என்பது மாறாத சக்திகளாகும். இயற்கையில் அண்ட சராசரங்களும் எப்போதும் மாறாமல் ஒரே சீராக இயங்கி வருகிறது. ஒவ்வொரு பொருள்களும் ஒவ்வொரு காந்த சக்திக்கு கட்டுப்பட்டு முறைமை மாறாமல் இயங்கி வருகிறது. அதனால் தான் இரவுபகல், பருவநிலைகள் ஆகியவைகள் ஒரோ சீராக கால அளவு மாறாமல் ஒரே மதிரியாக நடைபெற்று வருகிறது. இதில் மாறுதல்கள் உண்டாகும் பொது குறிப்பிட்ட நிகழ்வுகள் முறைப்படி நிகழாமல் சற்று அதிகமாகவோ அல்லது குறைவாகவோ நிகழுகிறது. அவைகள் நமக்கு நன்மையினை தருவது இல்லை. சரியான பருவத்தில் பெய்யாத மழையும், காற்றும், வெயிலும் நமக்கு துன்பத்தினையே தருகிறது. எந்த ஒரு செயலுக்கும் ஒத்திசைவாக செயல் படுதல் என்பது நமக்கு கூடுதல் பலத்தினை கொடுக்கும்.
இயற்கையின் சக்தி நமது பிறப்பின் போதே நம் மீது செயல் பட ஆரம்பித்து விடுகிறது. அந்த இயற்கையின் சக்தி என்ன? அதன் போக்கு எப்படி இருக்கும், அதன் தன்மைகள் குணங்கள் மற்றும் வீரியம் என்ன என்பதனை, நமது முன்னோர்கள் அற்புதமான ஞானத்தினாலும் ஆய்வுகளாலும் நிரூபணம் செய்துள்ளார்கள். அவைகளை பலப்பல புத்தகங்களாக நமக்கு அள்ளித்தந்து உள்ளார்கள். குறிப்பாக சப்தங்கள் எழுத்துகள் பற்றி அக்ஷரலக்ஷா என்ற நூல் விவரிப்பதாக கூறுகிறார்கள். அகத்தியரும் எண்கணிதம் பற்றி ஒரு நூல் எழுதியுள்ளார். வராகமிகிரரும் கிரகங்களுக்கு எண்களை கொடுத்துள்ளார். அவர்காலத்தில் ராகு கேது பற்றி கவலைப்படவில்லை போல உள்ளது. அவர் 4, 7 பற்றி குறிப்பிடவில்லை.
தொடரும்....
No comments:
Post a Comment