13 May 2015

ஜாதகத்தின் பயன் என்ன? vol-3

நமது வாழ்வில் நீக்கமற நிறைந்து விட்ட ஒன்றாக எண்கள் விளங்குகிறது.. கடந்த நூறு ஆண்டுகளில் எண்கள் நமது வாழ்க்கையின் அங்கமாகமே மாறிவிட்டது என்றால் மிகையில்லை. ஆங்கிலேயர்களின் காலத்தில் அஞ்சல் குறியீட்டின் மூலமாக ஒவ்வொரு ஊர்களுக்கும் ஒரு எண்களை வழங்கினார்கள். பின்னர் அது வீடுகளின் கதவுகளை ஆக்ரமித்தது. தொலை பேசி அறிமுகம் ஆனதும், இது மேலும் தன்னை நிலை நிறுத்திக்கொண்டது.. அடுத்து மெதுவாக தனிமனிதர்களை கூட எண்களால் குறிப்பிடும் நிலையினை இன்றைய வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை மூலம் அடைந்துள்ளோம். இதன் மூலம் எண்களின் ஆதிக்கம் எவ்வளவு வீரியம் மிக்கது என்பதனை அறிய முடிகிறது அல்லவா?


அந்த சக்திமிக்க எண்களை நாம் நமக்கு தேவையான படி வசப்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் வெற்றிகளை குவிக்க உதவுவதே எண்கணித கலையின் அடிப்படை நோக்கம். முக்கியமாக இரண்டு விசயங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நியூமராலாஜி கலையில் நாம் எண்களை இரண்டு விதமான முறையில் உபயோகம் செய்கின்றோம். ஒன்று: நமது பிறப்பு எண் விதி எண் ஆகியவற்றின் அடிப்படையில் அதற்க்கான உரிய எண்களில் பெயரினை அமைப்பது. இரண்டு: நமக்கான அதிர்ஷ்ட எங்களையும், அதிர்ஷ்ட தேதிகளையும் முறையாக பயன்படுத்துவதுவதும் அதன் மூலமாக காரியவெற்றியினை பெறுவதும் ஆகும்.


    அதிர்ஷ்டத்தினை எப்போதும் புறத்தில் இருந்து பெறமுடியாது, அதனை அகத்திலிருந்தே பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற கருத்திற்கு இணங்க ஒருவர் தன்னுடைய பெயரினை, பிறந்த தேதிக்கு ஒத்ததாக மாற்றியமைத்தாலே வெற்றியாளராக மாறமுடியும். 

No comments:

Post a Comment