நவரத்தினங்களை போல இல்லாவிடினும் குறிப்பிட்டு சொல்லும்படி சிறப்பான பலனை அளிக்ககூடிய உப ரத்தினங்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. இவ்வகை கற்களும் இயற்கையில் விளையகூடியவைதான்.இந்த கற்களை பெரும்பாலும் எண்கணித நிபுணர்கள்தான் பரிந்துரை செய்கிறார்கள். ஆனால், ஜாதகப்படியும் இந்தகற்களை அணிந்து கொள்ளலாம்.
சில உப ரத்தினங்கள் நவரத்தினங்களுக்கு மாற்றாகவும் விளங்குகிறது. இந்த கற்களை பெரும்பாலும் அனைவருமே அணியலாம். இந்த கற்களுக்குள் நட்பு, பகை, தோசம் ஆகியவை ஏதும் கிடையாது.இந்த கற்கள் நன்மை மட்டுமே செய்யும். ரத்தின நிபுணர்களின் பல வருட ஆராய்ச்சிக்கு பின்னரே இந்த வகை கற்கள் நவரத்தின கற்களுக்கு மாற்றாக பரிந்துரை செய்யபட்டன. அதிகம் பயன்பாட்டில் இருக்கும் உப ரத்தினங்களைபற்றி காண்போம்.
அமிதிஸ்ட் டின் பண்புகள்
கத்தரி பூ நிறத்தில் அழகாக காட்சி அளிக்கும் இந்த கல் தமிழில் செவ்வந்தி கல் என அழைக்கபடுகிறது.
இந்த கல் தெய்வீக அருளை ஆகர்ஷித்து தரும், ஆன்மீக ஆற்றலை அதிகரிக்கும், குடியினை மறக்க முடியாதவர்கள் இந்த கல்லை மோதிரமாய் அணிந்தால் அந்த பழக்கத்தில் இருந்து விடுபட முடியும். (இதனை அனுபவத்தில் பரிசோதனை செய்துள்ளோம்) விபத்துகள் ஏற்படாமல் தடுக்கும். வியாபார தடையை போக்கும். கோபம், விரக்தி ஆகியவற்றிலிருந்து காக்கும். குழந்தையின்மை, திருமணதடை ஆகிய பிரச்சனைகளுக்கு இக்கல்லை அணியலாம்.அமிதிஸ்ட்டின் மருத்துவ குணங்கள்.
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள், வயிற்றுவலி, மூட்டுவலி ஆகியவற்றில் இருந்து நிவாரணம் அளிக்கும். தூக்கமின்மை,மாலைக்கண் நோய் , தோல் வியாதி ஆகியவற்றில் இருந்து காக்கும்.
இந்த கல்லை அனைவருமே அணியலாம்.
3,12,21,30 ஆகிய பிறந்த எண் கொண்டவர்கள்,
4,13,22,31 ஆகிய பிறந்த எண் கொண்டவர்கள்,
8,17,26 ஆகிய பிறந்த எண் கொண்டவர்கள்,
மேலும், புஷ்பராக கல்லுக்கு பதிலாக இந்த கல்லை அணியலாம்.
கம்ப்யூட்டரில் இருந்து வெளிவரும் கெடுதலான கதிர் வீச்சிலிருந்து காக்கும்.
அமிதிஸ்ட் கற்களில் இருந்து வெளிவரும் கதிர்கள் பல நன்மைகள் செய்கிறது. மேலும் இந்த கல்லை பற்றி சொல்ல பல விஷயங்கள் உள்ளன. அமிதிஸ்ட் கற்களில் இருந்து வெளிப்படும் கதிர்கள் கணினியில் இருந்து வெளிவரும் கெடுதலான கதிர்களை தடுத்து விடுகின்றன. அதாவது word processor என்னும் கம்ப்யூட்டர் கருவிகளை பயன் படுத்துபவர்கள் ஒரு சிறிய அமிதிஸ்ட் கல்லை VDU ஸ்கிரீனில் வைத்துவிட்டால் போதும் கணினி யில் இருந்து வெளிவரும் கெடுதலான கதிர்களில் இருந்து காத்து கொள்ளலாம். இந்த ரத்தினத்தின் பூர்வீகம் அமெரிக்கா.
வீண் செலவுகள் குறையும்
இந்தக்கல் இருக்கும் இடத்தில் வீண் செலவுகள் குறையும். பணம் சேமிக்கும் காந்த அலைகளை இது வெளியிடுகிறது. பணம் சேர்ப்பது எளிதாகும். குறைந்தது 4 முதல் 20 காரட் எடை அளவு வாங்கி பணம் வைக்குமிடத்தில் வைக்கவும். உங்களது மணிபர்ஸிலும் வைக்கலாம். நிறைய பணம் மிச்சமாகும்.
எமிதிஸ்ட் மணி மாலை, பர்சில் வைக்க, மோதிரம் செய்ய கற்களின் தேவைக்கு,
மிகவும் அருமை.
ReplyDeleteபயனுள்ள தகவல்கள்.